-
அப்போஸ்தலர் 15:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 வெகு நேரம் தீவிரமாகக் கலந்துபேசிய* பிறகு பேதுரு எழுந்து, “சகோதரர்களே, மற்ற தேசத்து மக்கள்* என் மூலம் நல்ல செய்தியைக் கேட்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காக உங்களில் ஒருவனான என்னைப் பல நாட்களுக்கு முன்பே கடவுள் தேர்ந்தெடுத்தார். இது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.+ 8 இதயத்தில் இருப்பதைத் தெரிந்திருக்கிற கடவுள்+ தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுத்தது+ போலவே அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டதற்குச் சாட்சி கொடுத்தார். 9 அவர்களுக்கும் நமக்கும் இடையே அவர் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை,+ அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக அவர்களுடைய இதயங்களைச் சுத்தமாக்கினார்.+
-