-
அப்போஸ்தலர் 28:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பவுல் தன்னுடைய வாடகை வீட்டில் இரண்டு வருஷங்கள் தங்கியிருந்தார்.+ தன்னைப் பார்க்க வந்த எல்லாரையும் அன்பாக வரவேற்று, 31 எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்துவந்தார். அதோடு, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைக் கொஞ்சமும் தயக்கமில்லாமல்*+ கற்பித்துவந்தார்.
-
-
கொலோசெயர் 1:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+
-