16 ஆனால், பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளை அடியோடு தவிர்த்து விடு;+ ஏனென்றால், கடவுள்பக்தியற்ற செயல்களை அதிகமதிகமாகச் செய்வதற்குத்தான் அவை வழிநடத்தும். 17 அப்படிப் பேசுகிறவர்களுடைய வார்த்தைகள் சதை அழுகல் நோயைப் போல் பரவும். இமெனேயுவும் பிலேத்துவும் அப்படிப்பட்டவர்கள்தான்.+