4 போட்டி பொறாமையென்று வந்துவிட்டால்+ மனுஷர்கள் எந்தளவுக்கு முயற்சி எடுத்து* திறமையாக வேலை செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேன். இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
7 நீங்கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்? உங்களிடம் இருக்கிற எல்லாமே கடவுள் கொடுத்ததுதானே?+ எல்லாமே அவரிடமிருந்து கிடைத்திருக்கும்போது, உங்களுடைய சொந்த பலத்தால் பெற்றுக்கொண்டதுபோல் ஏன் பெருமையடிக்கிறீர்கள்?
4 ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும்.+ அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.+