5 சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் தருகிற கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை உங்களுக்கும் கொடுக்கட்டும். 6 அப்போதுதான், நீங்கள் ஒன்றுசேர்ந்து+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளை, அவருடைய தகப்பனை, ஒரே குரலில்* புகழ்வீர்கள்.
10 சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல்+ ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும்+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.