14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்.
9 அதற்குப் பதிலாக, இயேசு பாடுகள் பட்டு இறந்ததால்+ அவருக்கு மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருப்பதைத்தான் பார்க்கிறோம். அவர் கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாருக்காகவும் மரணமடையும்படி+ தேவதூதர்களைவிட கொஞ்சம் தாழ்த்தப்பட்டிருந்தார்.+