61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+
ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.+
உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,
சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,
கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,
-
லூக்கா 3:21, 22
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 மக்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், இயேசுவும் ஞானஸ்நானம் எடுத்தார்;+ அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது வானம் திறக்கப்பட்டது;+ 22 கடவுளுடைய சக்தி புறா வடிவில் தோன்றி அவர்மேல் இறங்கியது. அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
-
லூக்கா 4:18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நல்ல செய்தியைச் சொல்ல அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார். கைப்பற்றப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகவும்,+