4 அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ
மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ
அவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+
5 தேவதூதர்களைவிட அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள்.
மகிமையையும் மேன்மையையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள்.
6 உங்கள் கைகளால் படைத்தவற்றின்மேல் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள்.+
எல்லாவற்றையும் அவனுடைய காலடியின் கீழ் கொண்டுவந்தீர்கள்.