உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பின்பு கடவுள், “பூமியிலுள்ள எல்லா செடிகளையும், விதைகளுள்ள பழங்களைத் தருகிற மரங்களையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவை உங்களுக்கு உணவாக இருக்கட்டும்.+

  • ஆதியாகமம் 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பூமியில் வாழும் எல்லா மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்.+ நான் உங்களுக்குச் செடிகொடிகளைத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.+

  • சங்கீதம் 144:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, அற்ப மனுஷனை நீங்கள் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும்,

      அவனைக் கவனிப்பதற்கும் அவன் யார்?+

  • மத்தேயு 6:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.+ உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம், இல்லையா?+

  • மத்தேயு 6:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும்* காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா?

  • யோவான் 3:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல்*+ விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து,+ இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.

  • அப்போஸ்தலர் 14:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனாலும், அவர் தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை.+ எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும்,+ ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்”+ என்று சத்தமாகச் சொன்னார்கள்.

  • எபிரெயர் 2:6-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இதற்குச் சாட்சியாக ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: “மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ, மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ அவன் யார்?+ 7 தேவதூதர்களைவிட அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள், மகிமையையும் மதிப்பையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள், உங்கள் கைகளால் படைத்தவற்றுக்கு அவனை அதிகாரியாக நியமித்தீர்கள். 8 அதோடு, எல்லாவற்றையும் அவனுடைய காலடியில் கீழ்ப்படுத்தினீர்கள்.”+ கடவுள் எல்லாவற்றையும் தன்னுடைய மகனுக்குக் கீழ்ப்படுத்தியிருப்பதால்+ எதையுமே அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் விடவில்லை.+ அப்படியிருந்தும், எல்லாமே அவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதை இதுவரை நாம் பார்க்கவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்