13 ஆறாவது தேவதூதர்+ தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, கடவுளுக்கு முன்பாக இருந்த தங்கப் பீடத்தின்+ முனைகளிலிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டேன். 14 அது, எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது தேவதூதரிடம், “பெரிய ஆறான யூப்ரடிசில்+ கட்டப்பட்டிருக்கிற நான்கு தேவதூதர்களை அவிழ்த்துவிடு” என்று சொன்னது.