-
1 கொரிந்தியர் 6:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ சிலையை வணங்குகிறவர்கள்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள்,+ ஆண் விபச்சாரக்காரர்கள்,*+ ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள்,+ 10 திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+
-
-
கலாத்தியர் 5:19-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு,*+ அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை,*+ 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21 மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி,+ குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.+ இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள்+ என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன்.
-
-
வெளிப்படுத்துதல் 21:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஆனால் கோழைகள், விசுவாசமில்லாதவர்கள்,+ அசுத்தமும் அருவருப்பும் நிறைந்தவர்கள், கொலைகாரர்கள்,+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்கள், சிலைகளை வணங்குகிறவர்கள், பொய் பேசுகிறவர்கள்+ ஆகிய எல்லாருக்கும் நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரிதான் கதி;+ இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.
-