உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g86 7/8 பக். 4-5
  • சிலர் ஏன் வாசிப்பதில்லை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிலர் ஏன் வாசிப்பதில்லை
  • விழித்தெழு!—1986
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கற்பிப்பதற்கு பல்வேறு முறைகள்
  • மற்ற காரணங்களும் வாசிப்பதை பாதிக்கின்றன
  • சிரத்தையோடு வாசியுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • வாசிப்பார்வமின்மைக்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்
    விழித்தெழு!—1996
  • வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு முக்கியம்—பகுதி 1: வாசிப்பதா பார்ப்பதா?
    குடும்ப ஸ்பெஷல்
  • எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1986
g86 7/8 பக். 4-5

சிலர் ஏன் வாசிப்பதில்லை

அநேகர் வாசிப்பதை ஒரு வேலையாக கருதுகிறார்கள். ஏன்? ஒரு காரணம், சிலர் பள்ளிக்குச் செல்லுகையில், உண்மையில் வாசிக்க ஒருபோதும் கற்றுக்கொள்ளுவதில்லை. 34 வயது பெண்ணொருத்தி அச்சடிக்கப்பட்ட தாளை பார்த்தபோதெல்லாம் அது அவளுக்கு அர்த்தமற்ற ஏதோ ஒரு குழப்பிடும் செய்தியாகவே பட்டது என்று சொன்னாள். சில சமயங்களில் ஒரு வாக்கியத்தை வாசிக்க அவளுக்கு இரண்டு நிமிடங்கள் ஆகும்.

சமீபத்தில் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி, உண்மையில் எழுதபடிக்க கற்றுக்கொள்ளாத தனக்கு உயர்நிலைப்பள்ளி சான்றிதழை வழங்கியதற்காக சான் பிரான்ஸிஸ்கோ ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளி கோட்டத்தின் மீது ஐந்து லட்சம் ரூபாய்க்கு வழுக்கு தொடுத்தான். அறிக்கையின்படி அவன் தன்னுடைய சான்றிதழைப் பெற்றுக் கொண்டபோது அவனுக்கு ஐந்தாவது அல்லது ஆறாவது வகுப்பு மாணவனின் அறிவே இருந்தது. இதன் விளைவாக, வேலைக்கு விண்ணப்பிக்கையில் அவன் விண்ணப்பப் படிவங்களை கையாளுவதற்கு திறமையற்றவனாக உணர்ந்தான். இது எவ்விதமாக சம்பவிக்கக்கூடும்?

கற்பிப்பதற்கு பல்வேறு முறைகள்

வாசிப்பதற்கு அளிக்கப்படும் சில கல்வி பயிற்சி முறைகளில் கவனிக்கப்பட வேண்டிய சில குறைபாடுகள் இருக்கின்றன. சமீப வருடங்களில் “பார்த்து சொல்” முறை வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை, ஒரு வார்த்தையை உண்டுபண்ணும் தனித்தனி எழுத்துக்களை உச்சரிக்காமலேயே முழு வார்த்தைகளையும் அடையாளங் கண்டுகொள்ள மாணாக்கருக்கு கற்பிக்கிறது. இந்த முறை வார்த்தைகளை ஊகிக்கிறவர்களையும், புதிய வார்த்தைகளை சரியாக உச்சரியாதிருப்பவர்களையும், ஒன்றுபோல் இருக்கும் வார்த்தைகளை குழப்பிக் கொள்வதன் காரணமாக தவறாக வாசிப்பவர்களையும் இது உண்டுபண்ணுகிறது என்பதே இந்த முறைக்கு எதிராக கொடுக்கப்படும் முக்கிய காரணமாகும்.

இதை விளக்க: ஏன் இன்னும் ஜானியால் வாசிக்க முடியவில்லை என்ற தன்னுடைய புத்தகத்தில் ஆசிரியர் ரட்டால்ப் ப்லெஷ் “பார்த்து சொல்” முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக தன்னை விவரித்த ஒரு பெண்ணிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதத்தை மறுபடியுமாக அச்சிட்டிருந்தார். அவள் சொன்னாள்: “நாங்கள் படங்களைப் பார்ப்போம். உதாரணமாக ஒரு ஆப்பிள், (apple), அந்த வார்த்தையில் இரண்டு p எழுத்துக்கள் இருப்பதால் அது ஆப்பிள் என்பதாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக எங்களிடம் ஆசிரியர் சொல்லுவார். ஆகவே இரண்டு p எழுத்துக்களுள்ள எந்த வார்த்தையைப் பார்த்தாலும் அது ஆப்பிள் என்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.”

“பார்த்து சொல்” முறையில், முதல் வகுப்பின் முடிவில் ஒரு பிள்ளையால் தோரயமாக 350 வார்த்தைகளையும் இரண்டாவது வகுப்பின் முடிவில் இன்னும் 1100 வார்த்தைகளையும் மூன்றாவது வகுப்பின் முடிவில் மற்றொரு 1200 வார்த்தைகளையும் நான்காவது வகுப்பின் முடிவில் கூடுதலாக 1550 வார்த்தைகளையும் மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படியென்றால், பிள்ளையின் சொல் களஞ்சியத்தில் மொத்தமிருப்பது 4,200 வார்த்தைகளே.

மாறாக, எழுத்துக்களின் ஒலியைக் கற்றுக்கொள்வதன் மூலம் எழுத்துக்கூட்டி வாசிக்க கற்றுக்கொடுக்கும் முறையில் (phonics first) பிள்ளைகள் அவர்களுடைய துவக்கப் பள்ளியின் நான்காவது வகுப்பின் முடிவில் 40,000 வார்த்தைகளை கற்றுக் கொள்கிறார்கள். “Phonics” என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் உயிரொலி என்பதாகும். இம்முறையில் கற்பிக்கப்படுகையில் மாணாக்கன், எழுத்துக்கள் என்னவாக உச்சரிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்லாமல் அவை அந்த வார்த்தையில் எவ்விதமாக ஒலிக்கின்றன என்பதும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. முதலில் உயிரெழுத்தும் பின்னர் மெய்யெழுத்துகளும் கற்றுக் கொள்ளப்படுகின்றன. பின்பு இரண்டும் சேர்ந்து, இரண்டு மூன்று அல்லது நான்கெழுத்துக்களுள்ள சொற்கள், பின்னர் சொற்றொடர்கள் கடைசியாக வாக்கியங்கள் உண்டு பண்ணப்படுகின்றன. (1967 ஜூலை 8, ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 12-16 பார்க்கவும்) தனித்தனியாக சோதிக்கப்படுகையில், ஆரம்பப் பள்ளிகளில் வாசிக்க கற்றுக்கொடுப்பதற்கு இம்முறையே சிறந்தததாக இருப்பதாக கருதப்படுகிறது.

சில ஆசிரியர்கள் அவர்களுடைய மாணாக்கரின் கற்றுக்கொள்ளும் திறனைக் குறித்து எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்து, இதை இன்னும் மோசமாக்கிவிடுகிறார்கள். ஒரு நிபுணர் இவ்விதமாக குறிப்பிட்டார்: “பிள்ளைகள் வசதியான சூழ்நிலையிலோ அசெளகரியமான சூழ்நிலையிலோ கருப்பாகவோ வெள்ளையாகவோ, செல்வந்தராகவோ ஏழையாகவோ எப்படியிருந்தாலும் சரி, அதற்கும் பிள்ளைகள் வாசிக்க கற்றுக்கொள்வதில் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறார்கள் என்பதற்கும் சம்பந்தமேயில்லை. என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில், இவ்விதமாகச் சொல்வதெல்லாம், வாசிப்பதற்கு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்காதிருப்பதற்கு வெறும் சாக்குபோக்குகளாகவே இருக்கின்றன.

மற்ற காரணங்களும் வாசிப்பதை பாதிக்கின்றன

வாசிக்காமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுவது டெலிவிஷனாகும். ஐக்கிய மாகணங்களில் 70 வயது வரை வாழும் ஒரு நபர் அவருடைய வாழ்நாளில் 70,000 மணி நேரங்கள் டெலிவிஷனை பார்ப்பதில் செலவிட்டிருப்பார். பணியாற்றுவதிலும் உறங்குவதிலும் செலவிடும் நேரத்துக்குப் பின் இரண்டாவது இடத்தை இது பெறுகிறது. டிவி கைட் தகவலின்படி “ஆரம்ப பள்ளியில் பயிலும்” ஒரு குழந்தை, வாசிப்பதும் எழுதுவதுமாகிய அடிப்படை திறமைகளில் தேர்ச்சி பெற இயலாமைக்கு அதிகமாக டெலிவிஷன் பார்ப்பது காரணமாக இருக்கிறது என்பதை அதிகதிகமான விஞ்ஞான அத்தாட்சிகள் உறுதி செய்கின்றன. நன்றாக படித்த குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளாக இருந்தாலும் அதிகமாக டெலிவிஷன் பார்க்க அனுமதிக்கப்படும் பிள்ளைகள் வாசிப்பதில் பிரச்னைகளைக் கொண்டிருப்பதற்கு அதிகமான சாத்தியமிருப்பதை ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன.”

நல்ல வாசிப்பு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும் மற்ற காரணங்களும் இருக்கின்றன. “சரியாக இயங்காத கண்களையுடைய பிள்ளை தலைவலி, கண் எரிச்சல், நரம்பு அழுத்தம், இன்னும் மற்ற பிணிகளினால் சிரமப்படலாம். இவ்விதமாக இருக்கையில் வாசிப்பது மிகவும் விரும்பத்தகாத ஒரு வேலையாகிவிடுகிறது.” இத்தகைய பிள்ளைகளுக்கு வகுப்பறைகளில் அநேகமாக கவனம் செலுத்தப்படுவது கிடையாது—டையக்னாஸ்டிக் அண்டு ரெமிடியல் டீச்சிங், பக்கம் 49.

காது கேட்பதில் குறைபாடு சில சமயங்களில் ஒரு காரணமாக இருக்கிறது. வகுப்பறைகளில் எழுத்து ஒலி உச்சரிப்பு முறையில் (phonetic method) கற்பிக்கும்போது அரைகுறையாக காது கேட்கும் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்குக் குறைவான வாய்ப்பே இருக்கிறது.

உணர்ச்சிப் பூர்வமான காரணிகளுக்கும் இதில் முக்கிய பங்குண்டு. உதாரணமாக, “ஆரம்பத்தில் வாசிப்பதில் தோல்வியடையும் பிள்ளை வாசிப்பதினிடமாக ஒருவித எதிர்மறையான மனநிலையை வளர்த்துக் கொள்கிறான். இது மேலுமாக முன்னேறுவதற்கு அவனுக்கு தடையாக இருக்கிறது” என்பதாக அதிகார குழு ஒன்று குறிப்பிடுகிறது. மேலுமாக: “ஒரு புத்தகம் கண்ணில் பட்டாலோ அல்லது வாசிப்பு என்ற அந்த வார்த்தை சொல்லப்பட்டாலோ சில ஆட்கள் இறுக்கமாகவும் அசெளகரியமாகவும் உணருகிறார்கள்” என்று அது குறிப்பிட்டிருந்தது. மேலுமாக பிளவுப்பட்ட குடும்பம், வீட்டில் பாதுகாப்பில்லாமை, அல்லது நரம்பு கோளாறுள்ள பெற்றொர்கள் ஆகியவை பிள்ளை வாசிப்பு திறமையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்கக்கூடும்.

சரியாக வாசிக்க தெரியாதிருப்பதற்கு முக்கிய காரணம் வாசிக்காமல் இருப்பதாகும். வாசிக்காமல் எவரும் வாசிக்க கற்றுக்கொண்டது கிடையாது. அநேகமாக, வாசிக்காமல் இருப்பதற்கு ஏற்கெனவே சிந்திக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சரீர அல்லது உணர்ச்சி சம்பந்தமான காரணங்கள் இருக்க வேண்டும்.

வாசிக்க இயலாமல் போய்விடுவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், அதை மேற்கொள்ள உண்மையாக முயற்சி செய்வது, காலப்போக்கில் நல்ல விளைவுகளை கொண்டுவரும். அடுத்து, பிரயோஜனமாக இருக்கக்கூடிய ஆலோசனைகளை அளிக்கிறோம். (g85 9/8)

[பக்கம் 5-ன் படம்]

அதிகமாக டெலிவிஷன் பார்க்க அனுமதிக்கப்படும் பிள்ளைகள் வாசிப்பதில் பிரச்னைகளைக் கொண்டிருப்பதற்கு அதிக சாத்தியமிருக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்