வாசிப்பதில் வளர்ந்து வரும் பிரச்னை
உங்களால் ஒரு தெருவின் பெயரை வாசிக்க முடியாவிட்டால், வழியை கண்டு பிடிப்பது எவ்வளவு பிரச்னையாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். மருந்து உறையிலுள்ள விவரங்களை உங்களால் வாசிக்க முடியாவிட்டால், நீங்கள் எப்படி மருந்தை சரியாக எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? ஒரு விண்ணப்பத்தை உங்களால் வாசிக்க முடியாவிட்டால், நீங்கள் எவ்வாறு ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பீர்கள்?
வாசிக்க முடியாதவர்கள் எதிர்படும் ஒரு சில பிரச்னைகளாகவே இவை இருக்கின்றன. அமெரிக்கா தேசத்தில் வயது வந்தவர்களில், ஐவரில் ஒருவர், சுமார் 2,70,00,000 பேர் நடைமுறைக்கு உதவும் கல்வி அறிவில்லாதவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.a 1980-ல் 15 வயதும் அதற்கு மேலும் இருப்பவர்களில் உலகம் முழுவதிலும் மொத்தமாக எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் 82 கோடி பேர் இருந்தார்கள். அந்த எண்ணிக்கை மேலுமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவு வருத்தத்தை தருவதாக இருக்கிறது. உதாரணமாக ஐக்கிய மாகணங்களில், வேலையில்லாதவர்களில் 75 சதவிகிதத்தினர் அவசியமான திறமைகளாகிய வாசிப்பிலும் செய்தி தொடர்பிலும் குறைவுள்ளவர்களாக இருப்பதாக தொழில்துறை இலாக்கா அறிவித்தது.
வாசிக்க முடியாதவர்கள் வெறுமென வேலையின் சம்பந்தமாக மட்டுமே பிரச்னைகளை எதிர்படுகிறவர்களாக இல்லை. இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் அநேக காரியங்களை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் இந்த உலகத்தைப் பற்றிய கூடுதலான அறிவு நமக்கு ஒரு முன்னேறிய வாழ்க்கைத் தரத்தை தரக்கூடும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாம் கண்ணால் காண்பவைகளிலிருந்து அல்லது அனுபவிப்பவைகளிலிருந்து மட்டுமே கற்றுக் கொள்வதாக இருந்தால் நம்முடைய அறிவு எவ்வளவு குறைவாக இருக்கும்! வாசிப்பது பல நூற்றாண்டுகளாக சேர்த்து வைக்கப்பட்ட அறிவின் கதவை நமக்கு திறந்து வைக்கிறது.
வாசிப்பது குறிப்பிடத்தக்க ஒரு மனித திறமையாக இருக்கிறது. சையன்ஸ் டைஜஸ்ட் சொல்லுகிற விதமாகவே: “ஒரு நொடிப்பொழுதில் உங்களுடைய கண்களும் மனதும் நினைவூட்டுச் செய்திகளை அளித்து மிகவும் சிக்கனமாக, தேவையான செய்திகளை பூர்த்தி செய்யும் மிகவும் பிழையற்ற ஒரு கம்ப்யூட்டரோடும்கூட போட்டியிடக்கூடிய அளவுக்கு தகவலை கையாளுகிறது.”
வாசிக்கும் உங்களுடைய திறமையை நீங்கள் முன்னேற்றுவித்துக்கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது வேறு ஒருவர் அவ்விதமாகச் செய்வதற்கு உதவி செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? தொடர்ந்து வரும் இரண்டு கட்டுரைகளில், வாசிப்பு பிரச்னைக்கு காரணமாயிருக்கும் சில அம்சங்கள் ஆராயப்படுகின்றன. வாசிப்பை முன்னேற்றுவிக்க ஆலோசனைகளும் கொடுக்கப்படுகின்றன. (g85 9/8)
[அடிக்குறிப்புகள்]
a நடைமுறைக்கு உதவும் கல்வியறிவில்லாத ஒரு நபர், விண்ணப்பங்களை வாசிப்பது, பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றிற்கு தேவைப்படும் சாதாரண எழுத்து மற்றும் வாசிப்பு திறமைகளை பயன்படுத்த இயலாதவராக இருக்கிறார்.
[பக்கம் 3-ன் படம்]
நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை வாசிக்க முடியாவிட்டால், ஒரு வேலைக்காக நீங்கள் எப்படி விண்ணப்பம் செய்வீர்கள்?