உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 4/8 பக். 10-11
  • கடவுளுக்கு ஆரம்பம் இருந்ததா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுக்கு ஆரம்பம் இருந்ததா?
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாம் நியாயமாக இருப்போமாக
  • தனிமுதல் ஆரம்பம் இல்லை
  • பூமிக்காக ஒரு மகத்தான நோக்கம்
  • சிருஷ்டிப்பு
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • அது தானாகவே உண்டானதா அல்லது உருவாக்கப்பட்டதா?
    விழித்தெழு!—1999
  • பிரமிப்பூட்டும் நம் பிரபஞ்சம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • படைப்பாளர் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கூட்ட முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 4/8 பக். 10-11

பைபிளின் கருத்து

கடவுளுக்கு ஆரம்பம் இருந்ததா?

ஐயுரவாதியான பிரெஞ்சு நாட்டு மனிதன் ஒருவன், தன் வீட்டு வாசற்படியில் நேராக பனைமரம்போல் நின்று, யெகோவாவின் சாட்சி ஒருவரை நேருக்கு நேர் பார்த்து: “கடவுள் எங்கிருந்து வந்தார்? என்று எனக்கு சொல்லக்கூடுமானால், நீ சொல்வதை நான் கேட்கிறேன்,” என்றான். அமைதியை இழக்காமல் அந்தச் சாட்சி பின்வருமாறு சொன்னார்: “அதிக நியாய சிந்தையுள்ள சில ஆட்களுங்கூட 18-ம் நூற்றாண்டு பிரெஞ்சு தத்துவ ஞானியான வோல்டெர் போன்ற அதே முடிவுக்கே வந்திருக்கின்றனர். ‘கடவுள் ஒருவர் ஜீவிக்கவில்லை என்றால் அவரைப் புதிதாக புணைந்துருவாக்க வேண்டியது அவசியமாக இருக்கும்,’ என்று வோல்டெர் சொன்னார். அவ்வளவு அறிவாற்றலுள்ள ஒரு மனிதனாகிய வோல்டெர் ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொன்னார் என்று நீங்கள் என்றாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?”

இல்லை என்று ஒப்புக்கொண்ட அந்த மனிதன் சாட்சியை உள்ளே வரும்படி அழைத்தான். சாட்சி பின்வரும் தகவலின் பேரில் தன் வாதத்தைத் தொடர்ந்தார்.

நாம் நியாயமாக இருப்போமாக

வோல்டெரைப் போன்று அநேக ஆட்கள் உயிருக்கும் மற்றும் இந்தப் பிரபசஞ்சத்துக்கும் ஒரு காரணர் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். நாம் பார்க்கக்கூடிய காரியங்களை உண்டுப்பண்ணக்கூடிய நிலையிலிருக்க வேண்டுமாயின் அந்தக் காரணக்கர்த்தா அதாவது, ஆற்றல், ஒழுங்கமைக்கும் திறமை, கலை ஆர்வம், அன்பு மற்றும் ஞானம் ஆகிய ஒரு சில சக்தியை மற்றும் பண்புகளைக் கொண்டவராக இருக்க வேண்டும். ஏன்? ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில், முக்கியமாய் நம்முடைய கிரகமாகிய இந்தப் பூமியில் நாம் காணத்தக்க அந்தக் காரியங்களை, இந்தப் பண்புகளைப் பிரதிபலிக்கின்றன. இவை பொருட்களின் பண்புகளல்ல, ஆனால் நபர்களின் பண்புகளாகும். எனவே மகா உன்னதமான ஒருவர், கடவுள் என்ற பொதுக் கருத்தின் முடிவுக்கே நாம் வருகிறோம்.

“நீர் சொல்வது நியாயமாகதான் இருக்கிறது” என்று பதிலளித்த அந்த அவநம்பிக்கையுள்ள பிரெஞ்சு மனிதன், “கடவுள் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டான்.

தனிமுதல் ஆரம்பம் இல்லை

சடப்பொருள், பிரபஞ்சம் மற்றும் பூமியில் பல்வேறு வகையான உயிரினங்கள் ஆகிய கண்ணுக்குத் தென்படக்கூடிய உண்மைகளை நாம் எதிர்ப்படுகிறோம். இவையெல்லாம் எங்கிருந்து தோன்றியது? எல்லாரும் இல்லாவிட்டாலும், சில விஞ்ஞானிகள் இந்த உயிரின வகைகள் தற்செயலாய் உண்டாயிற்று என்று சொல்லுகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் அதை எப்படி அழைத்தப் போதிலும் அவர்களுடைய வெவ்வேறு வகையானக் கோட்பாடுகள் எப்பொழுதுமே ஏதோவொரு காரியம் இருக்கிறதென்ற முன்னூகிப்பாகவே இருக்கிறது. ஆற்றலின் வடிவே சடப்பொருள் என்று அவர்கள் சொல்லுகின்றனர். அது சரியே, அந்த அடிப்படையில் இந்தச் சடப்பொருளான பிரபஞ்சம் தானாகவே தோன்றியிருக்க வேண்டும் என்று அவர்கள் உணருகின்றனர். ஆனால் அந்த ஆரம்ப கூட்டமைவு சூழல் எப்படி ஏற்பட்டது என்பதை அவர்கள் விளக்குவது இல்லை. முன்னரே இருக்கக்கூடிய ஏதோவொன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த தோற்றம் பற்றி அவர்கள் விளக்கம் கொடுக்க இயலாதவர்களாயிருக்கின்றனர்.

எனவே நாஸ்திகர்கள் அதை இருந்துகொண்டிருக்கும் ஒரு காரியம் என்றே முன்னூகம் செய்கின்றனர். ஆனால் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களோ இதை இருந்துகொண்டிருக்கும் நபர் என்று முன்னூகம் செய்கின்றனர். எல்லா இயற்கையான சட்டத்திட்டங்கள் கணித நுணுக்கம், ஒழுங்கமைப்பு மற்றும் ஞானம் ஆகியவை இந்தப் பூமியிலும் மற்றும் பிரபஞ்சம் முழுவதிலும் காணத்தக்க ஒன்றாக இருப்பதைக் கருத்தில் கொண்டவர்களாய் அந்த முதற் காரணம் ஒரு காரியமாக இருப்பதற்கு மாறாக ஒரு நபராக இருக்க வேண்டுமென்றும் ஒரு இயற்கையாற்றலுக்கு மாறாக ஓர் புத்திக்கூர்மையான சிருஷ்டிகராக இருக்க வேண்டும் என்ற முடிவே அதிக நியாயத்திற்கு ஒத்த ஒன்றாக இருப்பதை யெகோவாவின் சாட்சிகள் காண்கின்றனர். நாஸ்தீக முன்னுரையான ‘ஆதியிலே ஏதோவொன்று’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக “ஆதியிலே தேவன்” என்ற பைபிளின் ஆரம்ப வார்த்தைகளையே அவர்கள் தெரிந்து கொள்ளுகின்றனர்.—ஆதியாகமம் 1:1.

“நீ சுற்றிவளைத்துப் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டுவதற்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னான் கேள்விக் கேட்ட அந்த பிரெஞ்சு மனிதன்.

உண்மையென்னவெனில் அடிப்படை மெய் நிகழ்வுகளின் பேரில் பைபிளுடைய நோக்குநிலையே நியாயத்துக்கு ஒத்ததாகவும் கண்கூடான நேர் உண்மைகளுக்கு இசைவானதாக இருக்கிறதென்பதை யெகோவாவின் சாட்சிகள் காண்கின்றனர். அவற்றில் ஒரு சிலவற்றை நாம் ஆராய்வோமாக.

ஒன்றுமில்லாமையிலிருந்து ஏதாவதொன்று வரமுடியாது. எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்க இயலவில்லை. மனிதன் ஏற்கெனவே இருக்கக்கூடிய பொருட்களை மட்டுமே உருமாற்றவும், இணைத்துருவாக்கவும் முடியும். அதேவிதமாகவே புத்தி சுயாதீனமுள்ள எந்த ஒரு நபரும் உழைத்துருவாக்கப்பட்ட ஒரு பொருளைத் தானாகவே வந்துவிட்டது என்று சொல்லமாட்டான். ஒரு சுய ஆதாரமுள்ள சத்தியத்தைப் பைபிள் குறிப்பிடுகிறது. “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்,” என்று சொல்லிய பின்பு, நியாயமான முடிவுக்குத் தொடருகிறது: “எல்லாவற்றையும் உண்டுப்பண்ணினவர் தேவன்.” (எபிரேயர் 3:4) ஒரு வீட்டிற்கே ஒரு கட்டிட கலைஞரும் மற்றும் அதனைக் கட்டுபவரும் தேவை என்று ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் அதிக சிக்கலான அணு, அணுத்திரண்மம் அல்லது உயிரணு ஒன்றுமில்லாமையிலிருந்து தோன்றியது என்று கூறுவது பைபிள் நோக்கு நிலையிலிருந்துப் பார்க்கையில் அறிவுள்ள ஒரு காரியமாக இல்லை. தர்க்கரீதியாகவே பைபிள் பின்வருமாறு கேட்கிறது: “உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக் குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்று சொல்லக்கூடுமா?”—ஏசாயா 29:16.

உயிர் உயிரிலிருந்தே வருகிறது. உயிரானது உயிரற்ற பொருளிலிருந்து தன்னியல்பாகவே உற்பத்தியானது என்று நம்புவதில் ஒருசிலர் பிடிவாதமாக இருந்தபோதிலும் தொழிற்சாலைகள் ஒரு வாகனம் நிறம்பிய இரசாயணப் பொருட்களை உற்பத்தி செய்யப்பட்ட ஜீவ அணுக்களாக மாற்றியமைக்கின்றன என்பதை நாம் இன்னமும் பார்க்க வேண்டும். அப்படி உயிர் தன்னியல்பாகவே ஏற்பட்டிருக்குமானால் ஏன் மனிதன் அந்தச் செயல்முறையை திரும்பச் செய்யவும் மற்றும் வளரச்செய்யவும் கூடாமலிருக்கிறான்? இதற்கு ஒரு எளிய காரணமென்னவெனில், உயிருள்ள பொருட்கள் முன்னமே இருந்து கொண்டிருக்கக்கூடியவற்றிலிருந்தே அறியப்பட்ட எல்லா உயிருள்ள பொருட்களும் வந்திருக்கின்றன என்று உண்மைகள் காட்டுகின்றன. தொடக்க காலத்துக்குரிய முதற்காரணம் ஒரு உயிருள்ள ஆளாகதான் இருக்க வேண்டும் என்று பைபிள் அங்கீகரிக்கிறது. அது குறிப்பிடுவதாவது: “பர்வதங்கள் தோன்று முன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” “ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது.”—சங்கீதம் 90:2; 36:9.

ஆற்றலின் வடிவே சடப்பொருள்: ஆற்றலின் வடிவே சடப்பொருள் என்ற நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு பைபிள் முற்றமுழுக்க ஒத்திசைவுடன் இருக்கிறது. மனிதன் தனது அணுகுண்டுகளிலும் மற்றும் அணுசக்தி நிலையங்களிலும் சடப்பொருளிலிருந்து ஆற்றலை வெளிவிடுவது எப்படி என்பதைக் கண்டுபிடித்திருக்கிறான். இந்தச் சடப்பொருளான பிரபஞ்சத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றலின் ஊற்றுமூலம் கடவுளாக இருப்பதாய் பைபிள் காட்டுகிறது. நாம் வாசிப்பதாவது: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் [சூரிய மண்டல கோளங்கள், நட்சத்திரங்கள், பால் மண்டலங்கள்] பாருங்கள், அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்பட பண்ணி . . . அவருடைய மகா பெலத்தினாலும் [ஆற்றலினாலும்] அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசாயா 40:26) “அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கினார்.”—எரேமியா 10:12.

இந்தப் பிரபஞ்சம் ஒரு நோக்கம் இருக்கிறதென்று சான்றளிக்கிறது. குழப்பத்திலிருந்து ஒழுங்கு ஒருபோதும் ஏற்படாது என்பதை மனித அனுபவம் காட்டுகிறது. அப்படியானால் விலங்கு மற்றும் உயிர்களுக்கு அதிக அத்தியாவசியமான பருவ காலங்களையும் மற்றும் சுற்றுமுறைகளையும் கொண்ட பூமியின் மீதுக் காணப்படக்கூடிய இந்த ஒழுங்கு தற்செயலாய் வந்துவிட்டிருக்கக்கூடும் என்று நம்புவது நியாயத்திற்கு ஒத்ததாக இருக்கக்கூடுமா? மாறாக இந்தக் காரியங்கள் அனைத்தும் ஒரு திட்டமைப்பும் மற்றும் நோக்கமும் இருக்கிறதென்பதற்குச் சான்றளிக்கிறதல்லவா? பைபிள் குறிப்பிடுவதாவது: “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்துபடைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய யெகோவா சொல்லுகிறதாவது, நானே யெகோவா.”—ஏசாயா 45:18.

பூமிக்காக ஒரு மகத்தான நோக்கம்

சந்தேகிக்கும் பிரெஞ்சு மனிதன் குருட்டுத்தனமாய் குறிப்பிட்டதாவது: “சிருஷ்டிக்கப்பட்டதோ இல்லையோ இந்தப் பூமி மனுஷ சஞ்சாரமில்லாத இடமாக ஆகிவிடும்போல் தோன்றுகிறது.”

அவனுடைய பயங்கள் வெளித்தோற்றத்திற்குச் சரியென தோன்றுகிறது. எனவே மனமுறிவுண்டாக்கும் அவநம்பிக்கைக்கும் மற்றும் பகுத்தறிவுக்கு ஒத்திருக்கக்கூடிய நித்தியமான உயிரளிப்பவரை ஏற்றுக்கொள்வதற்குமிடையே இன்று தெரிவு இருக்கிறது. அவருடைய எழுதப்பட்ட வார்த்தை ஒரு பூகோள பரதீஸில் பூமியின் மீது என்றென்றுமாக வாழக்கூடிய நம்பிக்கையை அளிக்கிறது. (மத்தேயு 6:10; சங்கீதம் 37:9, 11, 29) நிச்சயமாகவே இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பது பயனுள்ளது. (g86 5/8)

[பக்கம் 11-ன் படம்]

“கடவுள் ஒருவர் ஜீவிக்கவில்லை என்றால், அவரைப் புதிதாக புணைந்துருவாக்க வேண்டியது அவசியமாக இருக்கும்,”—பிரென்சு தத்துவஞானி வோல்டேர் கூறியது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்