உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 1/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • காற்றில் நச்சு
  • போதை மருந்துகள்: குழந்தைகளும் பருவ வயதினரும் குற்றச்செயல்களும்
  • ‘யெகோவாவுக்குரியது’
  • சுறுசுறுப்பான சுவிஸ் மக்கள்
  • அழுத்தத்திற்குட்பட்ட இளைஞர்
  • ஆங்லிக்கன் சர்ச் அங்கத்தினர் பன்மனை விவாகத்தை அனுமதிக்கின்றனர்
  • பயமுறுத்தப்பட்டு நிதானநிலை அடைதல்
  • புகைக்கும் பெண்களுக்கு அபாயங்கள்
  • கொள்ளையடிக்கும் கள்ளப்போதை
    விழித்தெழு!—1999
  • போதை மருந்துகள் ஆபத்தானவை, மரணத்துக்கேதுவானவை
    விழித்தெழு!—1989
  • போதை மருந்துகள் பிரச்னைகள் பெருகுகின்றன
    விழித்தெழு!—1989
  • போதையுடன் போராடி ஜெயிக்க முடியுமா?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 1/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

காற்றில் நச்சு

ஜெர்மன் ஃபெடரல் சுகாதார அலுவலகம் 3,000 வீடுகளைப் பரிசோதனை செய்து “எச்சரிப்புக்குரிய” ஒரு முடிவுக்கு வந்தது. “நாம் புழங்கும் அறையாக இருந்தாலும், குளியலறையாக இருந்தாலும், அல்லது சமையலறையாக இருந்தாலும்சரி—காற்றில் நச்சு இருக்கிறது!” என்று ஜெர்மன் செய்தித்தாள் ஹாம்பர்கர் அபண்டுபிளேட் (Hamburger Abendblatt) அறிக்கை செய்கிறது. தூசி, பெய்ன்ட், சுவரொட்டிகள், அறையில் வெப்பமூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சாதனம், தரைவிரிப்புகள், சுத்தம் செய்வதற்கான சாதனங்கள், தெளிப்பான்கள், ஒப்பனைப்பொருட்கள், மற்றும் மரத்தூள் பலகையாலான தட்டுமுட்டு சாமான்கள் ஆகியவற்றில் கேடு விளைவிக்கும் வஸ்துக்கள் குடிகொள்கின்றன. வீட்டில் நல்ல காற்றோட்டம், அதிக கேடுவிளைவிக்காத கட்டடப்பொருட்களைப் பயன்படுத்துதல், ஆரம்ப எச்சரிப்பு சாதனமாக உங்களுடைய மூக்கின் உள்ளுணர்வுகளுக்குப் பிரதிபலித்தல்—‘அது எப்பொழுதுமே அரித்துக்கொண்டிருந்தால், ஜாக்கிரதை!’—போன்ற காரியங்களை நிபுணர்கள் சிபார்சு செய்கிறார்கள்.

போதை மருந்துகள்: குழந்தைகளும் பருவ வயதினரும் குற்றச்செயல்களும்

●“பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்ற கொள்ளைநோய்” குறித்து ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது எச்சரிக்கிறார்கள். “அவர்களுடைய தாய்மார்கள் கர்ப்பமாயிருக்கும்போது கொக்கேய்ன் போதை மருந்தைக் குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தியதாலுங்கூட அந்தக் குழந்தைகளில் சிலர் வாழ்நாளெல்லாம் பாதிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள்,” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்களில் போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கின்றன, தான் கர்ப்பமாயிருக்கிறாள் என்று அந்தத் தாய் உணருவதற்கு முன்பாகவே அந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. கொக்கேய்னின் ஒரு போதை நிலையுங்கூட முதிர்கருவை நிரந்திரமாகப் பாதித்துவிடுகிறது, ஏனென்றால் அந்தப் போதை வஸ்துவின் துணைப் பொருளாகிய நார்க்கொக்கேய்ன் கருவைச் சுற்றியுள்ள சவ்வில் தங்கிவிட்டு, வளரும் அந்தக் குழந்தையைத் தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருக்கிறது. “பாதிப்புகள் பின்தங்கிய வளர்ச்சி, மூட்டுகள் விளங்காமல்போவது, அளவுக்குமிஞ்சிய எரிச்சல், சுவாசிப்பதை நிறுத்திவிடும் நிலை ஏற்படுவதால் தொட்டில் பருவத்திலேயே உயிரிழந்துவிடுதலின் ஆபத்து, சிலருடைய விஷயத்தில் பாலுறுப்புகள் மற்றும் சிறுநீருறுப்புகள் முழுவளர்ச்சி பெறாமை, சிறுகுடல் இல்லாமை, வலிப்பு நோய்கள்,” போன்றவற்றை உட்படுத்தக்கூடும் என்று டைம்ஸ் (Times) கூறுகிறது. ஐ.மா.வின் 36 மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட சுற்றாய்வு ஒன்று காண்பித்தபடி, கர்ப்பமாயிருக்கும் பெண்களில் 11 சதவிகிதத்தினர் தங்களுடைய பிறவா குழந்தைகளை முறையற்ற போதை மருந்துகளுக்கு வெளிப்படுத்துகின்றனர்.

●கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இரண்டு உளநூல் பேராசிரியர்கள் மேற்கொண்ட எட்டு ஆண்டு ஆய்வு உறுதிசெய்திருப்பதாவது, பருவ வயதினர் போதை மருந்துகளை ஏராளமாகப் பயன்படுத்துவது அவர்கள் பெரியவர்களாகும்போது ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதாகும். “போதை மருந்துகளை இளம் வயதில் உபயோகிக்க ஆரம்பித்தவர்கள், மிக வேகமாக விவாகரத்து செய்துவிடுகின்றனர், நிலையான வேலையில்லாதிருக்கும் வாய்ப்பு கூடுகிறது, அதிக வினைமையான குற்றச்செயல்களைச் செய்கிறார்கள், பொதுவாக தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறவுகளிலும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள்,” என்று அந்த ஆய்வின் உடன் ஆசிரியர் மைக்கெல் நியுகோம்பு கூறுகிறார். போதை மருந்து அருந்தும் பழக்கத்தை ஆரம்பிக்கும் எந்த இளைஞன் போதை மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகிறவனாவான் என்று சொல்வதற்கு வழியில்லையாதலால், “குடிவெறி குடும்ப சரித்திரமும் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் நெருங்கிய உறவு இல்லாதிருப்பதும் எச்சரிப்புக் குறிகளாக இருக்கக்கூடும்,” என்று ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (U.S.News & World Report) பத்திரிகை குறிப்பிடுகிறது. “பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் நடத்தையை மிக நெருங்க கவனித்து, தாங்கள்தாமே மதுபானத்தையும் போதை மருந்துகளையும் துர்ப்பிரயோகம் செய்யாதவர்களாய் அவர்களுக்குப் பொருத்தமான செய்தியை அனுப்பவேண்டும்.”

●நீதித்துறை புள்ளிவிவரங்களின் ஐ.மா. சட்டமுறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்பேரில் வழங்கிய குறிப்புரையில் “1986-ல் முடிவடைந்த 12 ஆண்டு காலத்தில் போதை மருந்துகளை உபயோகிப்பதற்கும் குற்றச்செயல்களுக்கும் இடையே இருக்கும் சம்பந்தம் வெகுவாக வளர்ந்தது,” என்று தி நியு யார்க் டைம்ஸ் கூறுகிறது. “1986-ல் தேசமுழுவதும் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஆட்களில் ஏறக்குறைய 35 சதவிகிதத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக போதை மருந்து அருந்தியவர்களாயிருந்தனர்.” பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், போதை மருந்தின் செல்வாக்கின்கீழ் இருந்தபோது குற்றங்கள் இழைத்தவர்கள் 25 சதவிகிதத்தினர். இடைவிடாமல் நச்சுத்தன்மைவாய்ந்த போதை மருந்துகளைப் பயன்படுத்தியவர்களில் 60 சதவிகிதத்தினர் அவர்கள் முதல் முறையாக கைது செய்யப்பட்டதற்கு பின்புதான் அவ்விதம் செய்தார்கள் என்று ஆய்வு மேலும் காட்டுகிறது. மேலும், கைதியாக இருப்பவர்களில் 13 சதவிகிதத்தினர் கொள்ளை, திருட்டு போன்ற காரியங்களைத் தங்களுடைய போதைப் பழக்கத்தை ஆதரித்துக்கொள்வதற்காகவே செய்தனர். மொத்தத்தில், அப்படிப்பட்ட குற்றங்களுக்காக சிறையிலிருப்பவர்களில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர் சட்ட விரோதமாக தினந்தோறும் போதை மருந்துகளைப் பயன்படுத்தினர்.

‘யெகோவாவுக்குரியது’

ஜெருசலேமிலுள்ள இஸ்ரேயல் அருங்காட்சியகத்தில் ஒரு புதிய பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது: தந்தத்தால் செய்யப்பட்ட பெருவிரல் அளவான மாதுளம்பழம், இது சாலொமோன் கட்டிய ஆலயத்திலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. “இந்த வாரம் எருசலேமில் அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட அந்த ஒரு பழம்பொருள் இஸ்ரேயலின் மகிமையான ஆலயத்தின் பிழைத்திருக்கும் ஒரே ஒரு சாட்சி,” என்று அந்த அருங்காட்சியகம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உரிமைபாராட்டியது. அந்த வெளுத்த நிற மாதுளம்பழத்தில் பூர்வ எபிரெய மொழியில் பின்வரும் வார்த்தைகள் பதிக்கப்பட்டிருக்கின்றன: “யெகோவாவின் ஆலயத்துக்குரியது, ஆசாரியருக்குப் பரிசுத்தமானது.”

சுறுசுறுப்பான சுவிஸ் மக்கள்

அண்மை நாட்டினர் தங்களுடைய ஓய்வு வயதைக் குறைப்பது குறித்தும் ஒருவார வேலை நேரத்தைக் குறைப்பது குறித்தும் சிந்தித்துக்கொண்டிருக்க, சுவிஸ் கடினமாக உழைக்கும் மக்கள் என்ற அந்தப் பெயரைக் காத்துவந்திருக்கிறது. எப்படி? அண்மையில் நடத்தப்பட்ட ஒரு தேசீயளவான மக்கள் வாக்கெடுப்பில் மக்கள் தங்களுடைய ஓய்வு வயதை ஆண்களுக்கு 65-லிருந்து 62-ஆகக் குறைக்கக்கூடாது என்றும் பெண்களுக்கு 62-லிருந்து 60-ஆகக் குறைக்கக்கூடாது என்றும் வாக்கு மூலம் தெரிவித்துள்ளர். இதற்கு முன் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு ஒன்றின்படி, இவர்கள் தங்களுடைய வாராந்தர வேலை நேரத்தை 40 மணி நேரங்களாகக் குறைப்பதை மறுத்துவிட்டனர், சம்பளத்துடன்கூடிய ஐந்தாவது வார விடுமுறையை உட்படுத்துவதையுங்கூட மறுத்துவிட்டனர்.

அழுத்தத்திற்குட்பட்ட இளைஞர்

ஜப்பானில் கடந்த பத்தாண்டுகளில் வயிற்றுப்புண் ஏற்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மெயினிச்சி ஷிம்பன் (Mainichi Shimbun) என்ற தினசரியின்படி, இந்த அதிகரிப்பு குறிப்பாக பத்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில்தான் கவனிக்கப்பட்டிருக்கிறது. காரணம்? கனகாவா சிறுவர் மருத்துவ மையத்தின் இயக்குனர் அக்கியோ ட்ஸுனோடா கூறுவதாவது, பேரளவான வயிற்றுப்புண்கள் அழுத்தத்தின் காரணத்தால் ஏற்படுகின்றன. நான்கு வயது சிறுவன் 1,200 சீன எழுத்துக்களை மனப்பாடம் செய்ய வற்புறுத்தப்பட்டபோது அவனுக்கு வயிற்றுப்புண் ஏற்பட்டது. ஐந்து வயது சிறுமி பியானோ இசைக் கருவி பாடங்களை விட்டுவிட்டு கடுமையான பாட திட்டங்களையுடைய பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியதும் அவளுக்கு இருந்த வயிற்றுப்புண் குணமடைந்துவிட்டது. இதற்குக் காரணமாக இப்படிப்பட்ட பள்ளிப்பாடங்களை உட்படுத்தாத செயல்கள், குடும்ப பிரச்னைகள் மற்றும் “பள்ளியில் ஒடுக்குதல்” போன்றவை குறிப்பிடப்பட்டபோதிலும், சிலருடைய விஷயத்தில் காரணத்தைக் குறிப்பிட முடியவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். (g88 12⁄8)

ஆங்லிக்கன் சர்ச் அங்கத்தினர் பன்மனை விவாகத்தை அனுமதிக்கின்றனர்

ஏழு கோடி அங்கத்தினருடைய ஆங்லிக்கன் சர்ச், ஒரே மனைவியை விவாகம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையை ஆதரித்தாலும், பலமனைவியருடையவர்களுக்கு சர்ச்சில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதன் பேரில் 100 ஆண்டுகளாக இருந்துவந்த தடையை ஆகஸ்ட் மாதத்தில் மாற்றியது. அந்தத் தடையை மாற்றும் ஒரு தீர்மானம் கேன்டர்பரியில் நடந்த மூன்று வார மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. கடந்த காலத்தில் பலமனைவியரைக் கொண்டிருக்கும் ஒருவர் ஆங்லிக்கன் சர்ச் அங்கத்தினராவதற்கு ஒரு மனைவியைத்தவிர மற்றெல்லா மனைவியரையும் கைவிடவேண்டியதாயிருந்தது. இப்பொழுதோ, அந்தச் சர்ச்சின்படி, பலமனைவியர் வாழ்க்கை சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாயிருக்கும் கலாச்சாரமுடைய இடங்களில், ஒருவன் ஒரு மனைவிக்கும் அதிகமான மனைவிகளைக் கொண்டிருக்கலாம், அதே சமயத்தில் சர்ச்சின் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்தினராகவும் இருக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தையின்படி, அது விபசாரமாகவே இருக்கிறது.—எபேசியர் 5:31; 1 தீமோத்தேயு 3:2.

பயமுறுத்தப்பட்டு நிதானநிலை அடைதல்

கலிஃபோர்னியாவிலுள்ள நீதிபதிகள் குடிவெறியில் வாகனம் ஓட்டியதற்காக பருவ வயதினதுக்கு “உண்மைநிலையை எதிர்ப்படுதலாகிய மருந்து” கொடுத்துவருகின்றனர் என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கைசெய்கிறது. முதல் முறை மீறுதலுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தகுதிகாண் காலம் அளிக்கப்பட்டதுமின்றி, செத்தப் பிணங்கள் கிடக்கும் சவ கிடங்குக்கு அனுப்பப்பட்டனர். டைம்ஸ் பத்திரிகையின்படி, அந்தத் தண்டனைத்தீர்ப்பு “மனித வாழ்வின் நிலையில்லா காரியத்துக்குத் தங்களை வெளிப்படுத்தி சட்டத்தை மீறின இளைஞரை அதிர்ச்சியடைய செய்வதற்காக வழங்கப்படவில்லை,” என்று நீதிபதிகள் கூறுகின்றனர். அப்படியென்றால் அந்தக் காரணம்? அதிகாரி ஒருவர் விவரிக்கிறார்: “தாங்கள் கொல்லப்படமுடியாதவர்கள் என்று பருவ வயதினர் நினைக்கிறார்கள்,” எனவே “அவர்களுக்கு உண்மைநிலையை எதிர்ப்படுதலாகிய மருந்து தேவைப்படுகிறது.” சாக்ரமென்டோவில் 400 இளைஞருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதில், 6 பேர் மட்டுமே மீண்டும் கைதுசெய்யப்பட்டனர். மீண்டும் குற்றமிழைக்கும் எண்ணிக்கை பொதுவாக 30 முதல் 50 சதவிகிதமாக இருக்கிறது என்று மற்றொரு நீதிபதி கூறுகிறார். இந்தத் திட்டத்தின் வெற்றி, மற்ற மாகாணங்களும் இதுபோன்ற தண்டனைத்தீர்ப்புத் திட்டங்களைக் கொண்டுவர ஏவப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

புகைக்கும் பெண்களுக்கு அபாயங்கள்

ஆண்களில் அதிக பொதுநிலையாக இருக்கும் இருதய நோய், புகைக்காத பெண்களைவிட புகைக்கும் பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படுவதற்கு காரணம் என்ன? புகைத்தல் பெண்களில் ஏற்படும் இயக்குநீர் சார்ந்த மாற்றங்களுடன் சம்பந்தப்பட்டதாயிருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டீகோ மருத்துவ பள்ளியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறிப்பிடுகிறது. புகைக்காத பெண்களுடன் ஒப்பிடும்போது, இறுதி மாதவிடாய்க்குப் பின் புகைக்கும் பெண்களின் இரத்தத்தில் இரு ஆண்வகை பால்சம்பந்தப்பட்ட இயக்குநீரை அவர்கள் அதிகமாகக் கொண்டிருக்கின்றனர் என்று புதிய இங்கிலாந்தின் மருத்துவ பத்திரிகை (New England Journal of Medicine)-யில் ஆய்வாளர் அறிக்கை செய்தனர். “பெண்கள் புகைப்பதை நிறுத்த செய்வதற்கு எமது ஆய்வின் பலன்கள் கூடுதல் அத்தாட்சிகளை அளிக்கக்கூடும்,” என்று அந்த ஆய்வின் முக்கிய ஆசிரியரும் மருத்துவருமாகிய கே–டீ கா கூறினார். (g88 12⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்