வன்முறை நாம் அந்தச் சவாலை சமாளிக்கிறோமா
தெளிவாகவே, வன்முறை குற்றச்செயல்கள் வளர்ந்துவரும் கவலைக்கு ஒரு கரணம். ஆனால் அவை அளிக்கும் சவால்களை சமாளிக்க என்ன செய்யப்படுகிறது?
பிரிட்டனில் குற்றச்செயலில் பெரும்பாலானவை பள்ளி-வயது இளைஞர்களால் இழைக்கப்படுகின்றன. தான் கற்பித்த ஒரு பள்ளியில் 15 மாணவர்கள் அடங்கிய வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே குற்றச்செயல் பதிவின்றி இருந்தனர் என்று ஷெபீல்ட், இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆசிரியை சொன்னாள். உண்மையில் வெகு சிறு பிள்ளைகள் கூட இப்பொழுது வகுப்பறை வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
“குழந்தை காப்பகத்தில் பணிபுரிகிறவர்கள் தங்களுடைய மாணாக்கர்களால் வினைமையாக தாக்கப்படுகின்றனர் என்றால் மற்ற பிள்ளைகளின் இருதயங்களில் இருக்கும் திகிலைக் நீங்கள் கற்பனை செய்யலாம்” என்று ஒரு யாக்ஷர் ஆசிரியை சொன்னாள். “முதல் நிலைப்பள்ளி பிள்ளை இவ்விதமான தீங்கிழைக்குமென்றால், நாம் அதைக்குறித்து ஒன்றும் செய்யாமல் இருந்தால், இரண்டாவது நிலையில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள்?” என்று அவள் மேலுமாக சொன்னாள்.
ஆனால் பிள்ளைகள் ஏன் இவ்வளவு வன்முறையாக இருக்கும் மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர்?
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் பங்கு
பெரும்பாலன பிள்ளைகள் வன்முறையான, கொடுமை விருப்பமுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் காண்கின்றனர். வன்முறை அதிகரிப்பதற்கு இது ஒரு கரணம் என்று அநேக அதிகாரிகள் சொல்லுகின்றனர். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் 10 மற்றும் 11 வயதுள்ள 1,500 பிள்ளைகளின் காணும் பழக்கங்களைப்பற்றிய சுற்றாய்வு ஒன்று எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய திரைப்பட விமர்சின மன்றம், பிள்ளைகள் பார்த்த திரைப்படங்களில் பாதி படங்கள் தகுதியற்றவை என மதிப்பிட்டது. என்றபோதிலும், அதில் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகள் வன்முறை சாட்சிகளை விசேஷமாக தாங்கள் அனுபவித்ததாக கூறினார்.
ஒரு பிள்ளை சொன்னான்: “அந்தப் பெண் தன் அப்பாவின் தலையை வெட்டி பிறந்த நாள் கேக்காக சாப்பிட்ட பாகம் எனக்கு பிடித்திருந்தது.” மற்றொரு திரைப்படத்தைப் பற்றி ஒரு பிள்ளை சொன்னது: அந்த அந்நியன் பெண்ணின் தலையை சாப்பிட்டு விட்டு தொடர்ந்து ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.“ இன்னுமொரு பிள்ளை சொன்னது: “அவர்கள் ஒரு பெண்ணை வெட்டி துண்டாக்கி அவளிலிருந்த வெள்ளை நிறமெல்லாம் பீறிட்டு பீறிட்டு அடித்தது எனக்கு பிடித்திருந்தது.” இந்த விதமான காட்சிகளை காண்பதன் விளைவாக பிள்ளைகளும், பெரியவர்களும் வன்முறைக்கான பசியைவளர்க்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர். தங்கள் பிள்ளைகள் மூலம் பலமான சமூக அழுத்தங்களால் பெற்றோர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது தவறான வழியில் தூண்டப்பட்டு, அப்பேர்ப்பட்ட திரைப்படங்களை பார்க்குமாறு தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கின்றனர் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
பிரிட்டனின் தனிப்பட்ட ஒலிபரப்பு அதிகாரம், வன்முறையை சிறப்பித்துக் காட்டும் நிகழ்ச்சிகளை பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய ஒரு படிப்பை நடத்தியது. இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் அல்லது மொத்த எண்ணிக்கையில் 6 சதவிகிதத்தினர் குற்றச்செயல் நிகழ்ச்சிகளை பார்த்த பின்னர், சில சமயங்களில் தாங்கள் “வன்முறையுள்ளவர்களாக” இருப்பதாக உணர்ந்ததாக சொன்னார்கள். பிள்ளைகள் திரை வன்முறை உண்மையானது அல்ல என்பதை புரிந்துகொள்ள தவறுகின்றனர், மேலும் கொலை “அன்றாட அலுவல்” என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கின்றனர் என்று லண்டனின் தி டைம்ஸ் தனது கண்டுபிடிப்புகளின் அறிக்கையில் சொன்னது. அநேக பிள்ளைகள், வன்முறைக்கு பழக்கமாகிவிட்டு தாங்களே குற்றம் செய்வதைப் பற்றி தயக்கம் அற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதா?
பள்ளிகளும் பெற்றோர்களும்
பள்ளிகள் ஒழுக்க மதிப்பீடுகளை கற்பிக்க தவறினதினால் வன்முறை அதிகரித்திருக்கிறது என்று சிலர் குறைகூறுகின்றனர். பிரிட்டனில் உள்ள இரண்டு உள்-நகர ஆசாரியர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்தத் தவறைப் பற்றி சொல்லுகிறது: “இது ஒரு துயர் நிறைந்த சூழ்நிலை, நம் சமுதாயத்தில் வன்முறை அதிகரித்திருப்பதை விளக்குவதில் நீண்டதூரம் செல்லக்கூடிய ஒன்றாயிருக்கிறது.” ஆனால் பிள்ளைகளின் ஒழுக்க மதிப்பீடுகலைப் படிப்படியாக அறிவுறுத்த தவறினதற்கு ஆசிரியர்களை குற்றஞ்சாட்டுவது சரியானதா?
பிரிட்டனின் தலைமை ஆசிரியர்களின் தேசிய சங்கத்தின் அறிக்கை ஒன்று பதிலளிக்கிறது: “பள்ளியிலும் சமுதாயத்திலும் உள்ள நடக்கை தராதரங்கள் படுமோசமாகிக் கொண்டே போகிறது. ஆனால் இளைஞர்கள் வாயிலாக சமுதாயத்தின் மீது பள்ளிகள் செலுத்தக்கூடிய செல்வாக்கு அதிகமாக அழுத்தப்படக்கூடாது.” ஒரு பிள்ளையின் மனச்சாய்வு அவனோ அல்லது அவளோ பள்ளிக்கு செல்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏற்கெனவே உருவாகி விடுவதால், இந்த அறிக்கை சொன்னது: “இதை மாற்றுவதற்கு ஓர் ஆசிரியர் செய்யக்கூடியது வெகு கொஞ்சமே.”
போர்ட்ஸ்மௌத் நகர ஆண்கள் பள்ளியின் உபதலைவர் ராய் மட் அதே போன்று அழுத்தியுரைக்கிறார். ‘பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களால் எது சரி, எது தவறு என்பதற்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கற்றுக்கொண்டாலொழிய ஒரு நாளில் ஒரு சில மணிநேரங்களே தங்கள் மாணவர்களை பார்க்கும் ஆசிரியர்கள் பள்ளி போதனை திட்டத்தில் கூடுதலான ஒழுக்க நூலிழைகளைப்போட எதுவும் செய்ய முடியாது.’
வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பெற்றோர்களால் முழுமையான ஒழுக்க நடைத்தைக்குரிய அஸ்திபாரம் போடப்பட வேண்டும் என்பதைப் பற்றியதில் எந்தக் கேள்வியும் இல்லை. அதிகரித்துக்கொண்டே போகும் வன்முறை தலைக்கீழாக்கப்பட வேண்டுமென்றால், பள்ளிகளுக்குப் பதிலாக பெற்றோர்கள் முக்கியமாக தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்க மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுப்பதில் ஈடுபட்டிருக்க வேண்டும். என்றபோதிலும், பெற்றோர்களோ அல்லது பள்ளிகளோ வன்முறையின் சவாலை சமாளிக்கவில்லை அல்லது அவர்களில் போதுமானவர்கள் அப்படி செய்யவில்லை.
சட்டம் நடைமுறைப்படுத்துவதைப் பற்றியென்ன?
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சவாலை சமாளிக்கிறார்களா? இதற்கு தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் கொகேன் போதை மருந்து வியாபாரியிடமிருந்து இலஞ்சம் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக 62 நீதிபதிகள் கொலை செய்யப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதே போன்று 1987-ல் போதை மருந்து கும்பல் 387 கொலைகள் செய்வதை ஐக்கிய மாகாணங்களில் உள்ள லாஸ் ஆஞ்சலீஸ் சட்டம் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அநேக இடங்களில் முக்கியமாக போதை மருந்துகளின் காரணமாக சமாளிக்க முடியாத நெருக்கடியை தாங்கள் ஏற்படுத்துவதாக ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் சவாலை ஏன் சமாளிக்கக்கூடாது.?
உலக முழுவதும் சட்டமும் ஒழுங்கும் சீர்க்குலந்திருப்பது தான் இதற்குக் கரணம் பிரிட்டனில் உள்ள சர்ரேயின் முக்கிய ஊர்க்காவலர் பிரயன் ஹெய்ஸ் விளக்குகிறார்: “கடந்த வருடங்களில் காவல் துறையினர் ஒரு கும்பலை நகர்ந்து செல்லுங்கள் என்று சொன்னால் அவர்கள் அவ்வாறு செய்வார்கள். இந்நாட்களில் கும்பல் காவல் துறையினரை எதிர்த்து தாக்குவார்கள்.’ லண்டனின் தி சண்டே டைம்ஸ் குறிப்பிடுகிறது, சமுதாயம் அநேக சமயங்களில் “மதிப்பீடுகளை தலைகீழாக்கியிருக்கிறது, காவல் துறையினர் குற்றவாளிகளாக ஒதுக்கி தள்ளப்படுகின்றனர், சட்டத்தை மீறுபவர்கள் வீரர்களாக காணப்படுகின்றனர்.”
எடின்பரோ பல்கலைக்கழகத்தின் குற்றவியல் ஆசிரியர் ரிச்சர்ட் கின்சி சொல்கிறார்: “ஸ்காட்லாந்தில் இருக்கும் நாங்கள் ஐரோப்பாவில் உள்ள எந்த நாட்டையும்விட அதிகமான ஆட்களை தெற்கில் (இங்கிலாந்து) உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான ஆட்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறோம்.” என்ன விளைவுடன்? 12-மாத காலப்பகுதியில் வன்முறை குற்றச் செயல்களில் 20 சதவிகித அதிகரிப்பு இருந்ததாக 1988-ல் கிளாஸ்கோவின் ஸ்டிராத்கிளைட் போலீஸ் அறிக்கை செய்தது. முகஞ்சுளித்துக் கொண்டு கின்சி முடிக்கிறார்: “சிறைச்சாலை கதவில் இருக்கும் சாவி உபயோகமற்றதாக நிரூபித்திருக்கிறது என்பதை ஸ்காட்லாந்தில் உள்ள நாங்கள் கண்டிருக்கிறோம்.”
சமாளித்திராத சவால்
பிரிட்டனின் நர்ஸிங் டைம்ஸில் ஒரு தலையங்கக் கட்டுரை வன்முறையின் சவாலை சமாளிக்க தவறினதை விளக்குகையில் சொன்னது: “நர்ஸ் வேலைக்கு சேருபவர்களிடம் அவர்கள் ஓர் அபாயகரமான வாழ்க்கைத்தொழிலில் சேருகின்றனர் என்று ஒருவரும் எச்சரிப்பதில்லை—ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்யவேண்டும்.” ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு குழு கண்டுபிடுப்புகள் தலையங்கம் தொடருகிறது, “முழு ஜனத்தொகையைவிட அநேக தடவைகள் அதிகமாக வன்முறையையும், மிரட்டுதலையும் நர்ஸ்கள் எதிர்படுகின்றனர்.”
ஒரு நர்ஸ் வேலை செய்வதற்கு அதிக அபாயகரமான இடங்களில் ஒன்று, விபத்து மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனையின் பிரிவாகும். பிரிட்டனில் இப்பிரிவு A&E (Accident and Emergency) என்பதாக அழைக்கப்படுகிறது. மருத்துவமனை இலாக்காக்கள் பொதுவாக மூடியிருக்கும் வார இறுதி நாட்களில் இவைகள் முக்கியமாக வன்முறை இடங்களாக மாறும் லண்டனில் விபத்து மற்றும் அவசர சிகிச்சையின் வேலையை விவரித்த முன்னால் நர்ஸை விழித்தெழு! பேட்டி கண்டது.
“போதை மருந்துக்கு அடிமையானவர்கள் அநேகர் இருக்கும் ஓர் இடத்தில் மருத்துவமனை அமைந்திருந்தது. மேலும் அவர்களுக்கென்றே ஒரு குறிப்பிட்ட இடம் அவசர சிகிச்சை இலாகாவில் ஒதுக்கிவைக்கப்பட்டது. அளவுக்கு மீறிய போதை மருந்து பாதிப்புகளிலிருந்து விடுபட மற்ற நோயாளிகளிடமிருந்து தூரமாக விலகி உறங்குவதற்கு அவர்கள் அங்கு விடப்படுகின்றனர். சில சமயங்களில் அவர்கள் அவ்வாறு தெளிந்து வருகையில் மிகவும் வன்முறையாகிவிடுவர். அது ஒரு பயத்தைத் தரும் ஒரு அனுபவமாக இருக்கும்.
“கும்பல் சண்டையில் மோசமாக காயம்பட்டவர்கள் சேர்க்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். விபத்து மற்றும் அவசர சிகிச்சையில் அவர்கள் தொடர்ந்து சண்டை போடுவதையும் கண்டிருக்கிறேன். அநேக தடவைகள் வன்முறை எவ்வித எச்சரிப்புமின்றி நர்ஸ்கள் மீது காட்டப்படும். நர்ஸ் தொழிலில் நான் நுழைகையில். ஒரு நர்ஸின் சீராடை ஏதோ ஒரு விதமாக பாதுகாப்பை அளிப்பதாக தோன்றியது—ஆனால் இன்று அப்படியில்லை.”
வன்முறை நம் அனைவரையும் தற்காப்பு நிலையில் வைக்கிறது. “இப்பொழுது எவருமே பாதுகாப்பாயில்லை,” “எந்த இடத்திலும் நீங்கள் பாதுகாப்பாய் இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது” என்ற இப்பேர்ப்பட்ட கூற்றுகள் அதிகமதிகமாக பொதுவாக ஆகிவருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பார்வையிலிருந்து பிள்ளைகள் விலகி செல்லாதபடி காவல் காக்கின்றனர். பெண்கள் கற்பழிப்பு மற்றும் திருட்டு பயத்தில் வாழ்கின்றனர். வயதானவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே தங்களை அடைத்து வைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு கோணத்திலிருந்தும் இது ஒரு வருந்தத்தக்க நிலை.
இது நம்மை ஒரு மிக முக்கியமான கேள்விக்குகொண்டு வருகிறது. வன்முறையை எதிர்ப்படுகையில் நான் என்ன செய்யலாம்? (g89 4/22)