ஒரு முன்னாள் கடவுளுக்குச் சவ அடக்கம்
ஜப்பான் விழித்தெழு! நிருபர்
“பேஜப்பானிய பேரரசர் ஹீரோஹிட்டோ 62 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்த பின்பு, கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் நாள் காலமானார். அவருக்கு வயது 87. பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற அவருடைய சவ அடக்கத்திற்கு 164 தேசங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். என்றாலும், அதில் கலந்துகொள்வதா வேண்டாமா என்பது பலருடைய வேதனையாக இருந்தது. ஏன்? ஹீரோஹிட்டோவின் மரணத்துக்கும் ‘உங்கள் கடவுள் உயிரோடிருக்கிறாரா?’ என்று எமது பத்திரிகையின் அட்டைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
ரரசர் ஹீரோஹிட்டோ ஓர் உயிருள்ள தெய்வமாகக் கருதப்பட்டார்,” என்று கடந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜப்பான் குவாட்டர்லி (Japan Quarterly) என்ற பத்திரிகை குறிப்பிட்டது. ஜப்பான் கொடன்ஷா என்சைக்ளோபீடியா (Kodansha Encyclopedia of Japan) அவரை சூரிய தேவதையாகிய அமெத்தரசு ஓமிகாமியின் மரபு வழியில் தோன்றிய 124-வது மனித சந்ததியாகப் பட்டியலிடுகிறது. அந்தத் தேவதை “ஷின்டோ அமரர் தொகுதியில் பிரதானமாக” அடையாளங்காட்டப்படுகிறாள்.
எனவே ஜப்பானிய இராணுவத்தினர் இந்த “உயிருள்ள தெய்வத்திற்கு” தங்கள் உயிரை அற்பணிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் வியக்கச்செய்திடும் வைராக்கியத்துடன் அப்படிச் செய்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பேரரசராகிய தங்கள் கடவுளுக்காகப் போரிட்ட ஜப்பானிய பக்தர்களைப் போன்று கடுமையாகப் போரிட்டவர்கள் வேறு எவரும் இருக்கவில்லை.
என்றபோதிலும், ஏராளமான எண்ணிக்கையில் படை பலம் மிகுந்திருந்தவர்களுக்கு எதிராக ஜப்பானியர்கள் தோல்வி கண்டனர். அதற்குப் பின்பு ஐந்து மாதங்களுக்குள்ளாகவே, ஜனவரி 1, 1946 அன்று ஹீரோஹிட்டோ ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியில் “பேரரசர் தெய்வீகமானவர் என்ற பொய்யான கருத்தை” தேசமக்களுக்கு முன்னால் மறுதலித்தார். “வெறுமென புராணங்களும் கட்டுக்கதைகளுமே” இந்த நம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்று அவர் சொன்னார்.
என்னே ஓர் அதிர்ச்சி! இலட்சக்கணக்கான ஜப்பானிய மக்களை அது நிலைகுலையச் செய்தது. ஏறக்குறைய 2,600 ஆண்டுகளாகப் பேரரசர் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டு வந்தார்!a இப்பொழுதோ அவர் ஒரு கடவுள் இல்லையா? ஒருகாலத்தில் மக்கள் நிமிர்ந்து பார்க்கவும் தயங்கிய மேன்மைப்படுத்தப்பட்ட மனிதனான இவர் ஒரு கடவுள் இல்லையா? பேரரசர் ஒரு கடவுள் என்ற நீண்ட கால நம்பிக்கையைக் கைவிடுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆம், ஹீரோஹிட்டோவின் மரணத்தைக் குறித்து கேள்விப்பட்ட பல ஜப்பானிய அரசு முன்னாள் வீரர்கள், பழங்கால வழக்கத்தின் அடிப்படையில் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.
உண்மையில், இந்த ஹீரோஹிட்டோ யார்? சரித்திரத்தில் அவருடைய பாகத்தை வாதத்துக்குரியதாக்கியிருப்பது என்ன? பிப்ரவரி 24, 1989 அன்று அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைத் தாங்கிய ஊர்தி டோக்கியோவிலுள்ள அரண்மனையை விட்டு அரசுமரியாதையுடன்கூடிய அடக்கத்திற்காக ஷின்ஜுக்கு கியான் பூங்காவை நோக்கிச் செல்ல, தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த இலட்சக்கணக்கானோரும், சாலையோரங்களில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஏறக்குறைய 2,00,000 ஆட்களும் இப்படிப்பட்ட கேள்விகளைக் குறித்து சிந்திக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தனர்.
அந்த அரசரும் அவருடைய ஆட்சியும்
ஏப்ரல் 29, 1901 அன்று பிறந்த பேரரசர் தாய்ஷோவின் மகனுக்கு “இரக்கமுள்ள பரந்த மனப்பான்மை” என்று பொருள்படும் ஹீரோஹிட்டோ என்ற பெயர் சூட்டப்பட்டது. 1926-ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் அவருடைய தகப்பன் மரித்தபோது, ஹீரோஹிட்டோ பேரரசராக அவருடைய இடத்தை ஏற்றார். அரசவையின் அறிஞர்களால் அவருடைய ஆட்சியை உட்படுத்திய சகாப்தத்துக்கு வழங்கப்பட்ட பெயர் ஷோவா, அல்லது ஒளியூட்டப்பெற்ற சமாதானம். எனவே அவருடைய மரணத்துக்குப் பின், அவர் பேரரசர் ஹீரோஹிட்டோ என்று அறியப்படவில்லை, ஆனால் பேரரசர் ஷோவா என்றே அறியப்படலானார்.
என்றபோதிலும், 1930-களில் மன்சூரியாவிலும் சீனாவிலும் நடத்திய ஜப்பானிய இராணுவ தாக்குதல்கள், 1940-களில் ஃபிரஞ்சு இந்தோசீனாவின் படையெடுப்பு, 1941-ல் ஐக்கிய மாகாணங்களின் மீது போர்த்தொடுப்பு ஆகியவற்றைக் கவனிக்கும்போது ஹீரோஹிட்டோ ஆட்சியின் ஆரம்ப காலம் ஒளியூட்டப்பெற்ற சமாதானத்தின் காலமாயிருக்கவில்லை. ஹீரோஹிட்டோவின் ஆட்சிக்கு வழங்கப்பட்ட பெயர், விசேஷமான அதன் ஆரம்ப ஆண்டுகளில், எதிர்மாறாக இருந்தது, அவருடைய அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தின்கீழ் நடைபெற்ற போர்களில் சொல்லர்த்தமாகவே இலட்சக்கணக்கான உயிர்கள் மாண்டன.
ஜப்பானின் பொருளாதாரம் போருக்குப்பின் மீண்டும் ஆரோக்கிய நிலையை எட்டியபோதிலும், ஜப்பான் அதுமுதல் அனுபவித்துவந்திருக்கும் சமாதான காலப்பகுதியை எல்லாருமே ஒளியூட்டப்பெற்ற சமாதானக் காலமாகக் கருதுவதில்லை. “நான் ஷோவா சகாப்தத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில், ஒரு வெற்றுணர்வையே கொண்டிருக்கிறேன்,” என்கிறார் 86 வயது ஜப்பானிய எழுத்தாசிரியர் சியு சூமை. “ஜப்பான் போரில் தோல்வியுற்றதுமுதல், நாடு கீழ்நோக்கிச் செல்கிறது என்று நினைக்கிறேன் . . . ஜப்பானின் செழுமை ஒரு மாயக்காட்சியே.”
கலந்த உணர்வுகள்
ஜப்பான் ஆதிக்கம் செலுத்தியதும் தாக்கியதுமான அநேக நாடுகள் ஹீரோஹிட்டோவின் சவ அடக்கத்திற்கு பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து யோசனை செய்தன. உதாரணமாகக் கொரியர் “பேரரசர் பெயரில்” கொரிய தீபகற்பத்தை ஆதிக்கம் செலுத்திய ஜப்பானியர் ‘நாட்டில் விட்டுச்சென்ற வடுக்களை’ இன்னும் அறிந்தவர்களாயிருந்தனர். பிரிட்டிஷ் செய்திப்பிரிவில், அந்தச் சவ அடக்கத்திற்கு எவரும் செல்லக்கூடாது என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தப் பேரரசரின் இராணுவத்தினர் கைகளில் 27,000 பிரிட்டிஷ் போர்க் கைதிகள் மாண்டனர் என்பதைப் பலரால் மறக்க முடியவில்லை.
ஐக்கிய மாகாணங்களிலும் நிலைமை இப்படியாகவே இருந்தது. ஜப்பானின் இராணுவ தாக்குதல்களுக்கு ஹீரோஹிட்டோவே பொறுப்புள்ளவராகக் குற்றஞ்சாட்டப்படுகிறார். அவருடைய மரணத்தின் போது நியு யார்க் டைம்ஸ் (New York Times) ஒரு தலையங்கக் கட்டுரையில் இதை வெளிப்படுத்தியது: “அவருடைய மிக மேன்மையான ஸ்தனத்தில் அவர் உலகில் அளவுகடந்த பேரழிவுகளைத் தவிர்க்க உதவியிருந்திருக்கலாம்.”
சமாதானப் பிரியராகப் பொதுவாய் போற்றப்படும் ஜப்பானிலுங்கூட அவர் அப்படிப்பட்ட காரியங்களுக்கு உத்தரவாதமுள்ளவராயிருக்கிறார் என்று சிலர் உணருகின்றனர். தன்னுடைய அண்ணன் போரில் மாண்ட செய்தி கேட்டு தன் தகப்பன் சொன்தைக் கேட்சுரோ நக்கமுரா நினைவுபடுத்திச் சொல்கிறார்: “என் மகன் அந்த ஹீரோஹிட்டோவால் கொல்லப்பட்டான்.” இன்னொரு வயதுசென்ற ஜப்பானியர் மசாஷி இனகாக்கி விவரித்ததாவது: “நாம் இவ்வளவு வேதனைப்படவேண்டியதாயிருந்த போருக்கு நெடுங்காலமாக நான் அவரையே குற்றப்படுத்திவந்தேன்.” ஆனால் அவர் மேலும் கூறினார்: “பேரரசர்தாமே கடந்த காலத்தைத் தன் வாழ்க்கை முழுவதும் சுமந்துசெல்ல வேண்டியிருக்கிறது என்பதை நான் உணர ஆரம்பித்தபோது என்னுடைய கசந்த உணர்ச்சிகள் மறைய ஆரம்பித்தன.”
தவறான இடத்தில் நம்பிக்கை வைக்கும்போது
இந்த ஷின்டோ கடவுளின் பீடத்தில் இலட்சக்கணக்கான ஜப்பானியர் தங்கள் உயிரைப் பலிகொடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படலாம். இதைத் தவிர பேரரசரின் சேனையைச் சேர்ந்தவர்கள் இலட்சக்கணக்கானோரின் உயிரை அதே பீடத்தில் பலி செலுத்தியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. அதை நம்பினவர்கள் கடவுள் பெயர் சொல்லி இராணுவம் என்ற மீண்டுவருவதற்கில்லாத அரும்புதிர் நெறிக்குள் வழிநடத்தப்பட்டார்கள், அவர் கடவுள் இல்லை என்பதை அவர்கள் பின்னால் அறியவந்ததுதான் மிச்சம். அசாஹி மாலைச் செய்தி (Asahi Evening News) கூறியதற்கு இசைவாக இருந்தது: “அந்தத் தப்பெண்ணத்தின் பேரில் இலட்சக்கணக்கான ஜப்பானியர்கள் பலிசெலுத்தப்பட்டிருக்கிறார்கள்.”
அவர்களுடைய கடவுள் 1946-ல் தன்னுடைய தெய்வத்துவத்தை மறுதலித்தபோது, அந்த விசுவாசிகளின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? “ஒரு பரந்த கடலின் நடுவில் தன் சுக்கானை இழந்த ஒரு படகைப்” போன்று தான் உணர்ந்ததாகப் பேரரசருக்காகப் போர்புரிந்த ஒருவர் கூறினார். அவருடைய பிரதிபலிப்பு மற்றவர்களுடையதற்கு ஒப்பாகவே இருந்தது. அந்த யுத்தத்தைத் தப்பிப்பிழைத்தவர்கள் திடீரென “ஒரு வெறுமையின் பாதாளத்தில் அடைக்கப்பட்டனர்” என்று ஒரு ஜப்பானிய கவி சாக்கன் சோவ் புலம்புகிறார். அவர்கள் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்பமுடியும்?
“நான் முற்றிலும் ஏமாற்றப்பட்டேன். நான் கடவுளுக்கு அல்ல, ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கே போர் செய்தேன்,” என்கிறார் கியோஷி தமூரா. “அதற்குப் பின் நம்புவதற்கு எனக்கு என்ன இருக்கிறது?” செல்வத்தைச் சேர்ப்பதற்காக கியோஷி கடினமாகச் செயல்பட்டார், ஆனால் இவை திருப்தியைக் கொண்டுவர தவறின. உங்களுடைய நம்பிக்கை சின்னாபின்னமானபோது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வெற்று மதிப்பீடுகள் விரைந்திடக்கூடும்.
பேரரசர் ஷோவாவையும் அவருடைய சவ அடக்கத்தையும் எண்ணிப்பார்ப்பதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். “நீங்கள் அறியாததைத்” தொழுதுகொள்ளுதல்தானே பெருஞ்சேதத்தை ஏற்படுத்துகிறது. (யோவான் 4:22) நீங்கள் யாரை தொழுதுகொள்ளுகிறீர்கள்? அந்த நபர் உண்மையிலேயே கடவுள்தான், அவர் உங்களுடைய வணக்கத்திற்குப் பாத்திரர் என்பதை நம்புவதற்குப் பலமான ஆதாரம் உங்களுக்கு இருக்கிறதா?
நாம் எல்லாருமே இந்தக் காரியத்தை எண்ணிப்பார்க்க வேண்டும், ஏனென்றால் இன்றும்கூட தலாய் லாமா போன்ற சில தனிநபர்கள் உயிரோடிருக்கும் புத்தர்களாகக் கருதப்பட்டு அவர்களுடைய பக்தர்களால் வணங்கப்பட்டுவருகின்றனர். கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதாக உரிமைபாராட்டும் அநேகர் திரித்துவத்தில் நம்பும்படியாகக் கற்பிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியவர்களாலான ஒரு திரித்துவமாகக் கருதப்படும் கடவுளை வணங்கிவருகிறார்கள். ஜப்பானியர்கள் எவ்விதம் உண்மையிலேயே ஒரு கடவுளாயிராத ஒரு கடவுளை நம்பும்படியாக வழிநடத்தப்பட்டனர் என்பதையும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அடுத்தக் கட்டுரையில் கவனியுங்கள். (g89 12/22)
[அடிக்குறிப்புகள்]
a 124 (ஹீரோஹிட்டோவின் மகன் அக்கிஹிட்டோ உட்பட 125) பேரரசர் பட்டியலில் ஆரம்பக்கால பேரரசர்கள் புராணப் பாத்திரங்களாகக் கருதப்பட்டபோதிலும், பொ.ச. அநேகமாய் 5-வது நூற்றாண்டு முதல் அந்தப் பேரரசர்கள் உண்மையில் வாழ்ந்த ஆட்களாக இருந்துவந்திருக்கின்றனர். இதுதானே ஜப்பானிய அரச ஸ்தாபனத்தை உலகில் மிகப் பழைய அரச ஆட்சிப் பரம்பரையாக்குகிறது.
[பக்கம் 21-ன் படம்]
ஹீரோஹிட்ட (எதிரில்): ஐ.மா. தேசிய பொது ஆவணக்கூட நிழற்படம்
Japanese character (above left) means “god, deity”
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
ஜப்பானிய எழுத்து (இடது பக்கம் மேலே): “கடவுள், தெய்வம்” என்று பொருள்படுகிறது.
Hirohito (opposite): U.S. National Archives photo