உங்கள் பொருட்களுக்கான உத்தரவாதச் சான்றுகளைத் தெரிந்திருப்பது பலனளிக்கிறது
“உத்தரவாதமளிக்கப்பட்ட மனநிறைவு.” “பணம் திருப்பி தரப்படும் உத்தரவாதம்.” “ஆயுள் கால உத்தரவாதம்.” “வரம்பற்ற உத்தரவாதச் சான்று.” சரக்குகள் அல்லது ஆக்கப்பொருட்களை விலைகொடுத்து வாங்குமாறு வாங்குபவரைக் கவர்ந்திழுக்க விளம்பரதாரர்களால் பயன்படுத்தப்படும் சுலோகங்களில் இவை ஒரு சில. இத்தகைய வாக்குறுதிகள் உங்களைக் கவருகின்றனவா? அப்படியானால் கவனமாயிருங்கள்!
நுகர்வோரின் கையேடு என்பதில் லின் கோர்டன் காரணத்தை விளக்குகிறார்: “அந்த வார்த்தைகள் கற்பாறை போன்ற பாதுகாப்பு அவற்றிற்கு இருப்பதாய் மணக்கச்செய்கிறது என்பதால், ஒரு குறிப்பிட்ட கொள்வினையின்போது வாங்குபவர்கள் அவ்வார்த்தைகளின் பொருளை உண்மையில் கவனிப்பதில்லை. மேலும் ஓர் உத்தரவாதச் சான்றின் பயன்களை உரிமையோடு பெற முயலும் போது, ஒரு பயனும் இல்லை, அல்லது அது தேவையான பழுதுபார்த்தல் அல்லது பதில்வைப்புகளை ஈடுசெய்வதில்லை என்று பின்னரே கண்டுகொள்கிறார்கள்.” புள்ளியிடப்பட்ட கோட்டின் மேல் கையொப்பமிடு முன் உங்கள் உத்தரவாதத்தை தெரிந்திருப்பது, பின்னர் உங்களுக்குக் கவலை, மனவேதனை, பணச்செலவு ஆகியவற்றைத் தவிர்க்கும்.
உத்தரவாதச் சான்று என்றால் என்ன?
“உத்தரவாதம்” என்ற சொல் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டாலும், உண்மையில் குறிப்பிடப்படுவது ஓர் உத்தரவாதச் சான்று ஆகும். வெப்ஸ்டர்ஸ் மூன்றாவது புதிய சர்வதேச முழு அகராதி பிரகாரம் இது இவ்வாறு பொருள்படுகிறது: “வாங்குபவருக்குக் கொடுக்கப்படும் பொருளின் நற்தன்மை மற்றும் உற்பத்தியாளரின் நன்னம்பிக்கை ஆகியவற்றின் எழுதப்பட்ட உத்தரவாதம். உற்பத்தியாளர் ஒரு காலப்பகுதிக்கு செப்பனிடுதல் அல்லது பழுதுபட்ட பாகங்களை மாற்றுதல் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையவரென்றும், சில வேளைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீர்காப்பு பணி அளிப்பர் என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.”
உத்தரவாதச் சான்று உங்களை மறைக்கப்பட்ட அல்லது நாணயமற்ற வியாபார நடைமுறைகளிலிருந்து அல்லது உண்மையற்ற விற்பனையாளர்களிடமிருந்து காக்கும். எடுத்துக்காட்டாக, உண்மையில் ஒரு சீர்குலைந்து இருந்த பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை முதல்தர நிலையில் இருப்பதாக ஒருகார் விற்பனையாளர் புனைந்துரைத்தபோது, அதை வாங்கியவர் அந்தக் காரைத் தனக்கு விற்றவரை நீதிமன்றத்துக்கு கூட்டிச் சென்றார். ஓர் உள்ளடங்கிய உத்தரவாதச் சான்று காரை வாங்கியவரைக் காத்தது. கார் வியாபாரி, இரட்டிப்பான கொள்விலையை அந்த நபருக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
உங்கள் உத்தரவாதச் சான்றுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
உத்தரவாதச் சான்றுகள் அல்லது உத்தரவாதங்கள் ஒரு பொருளின் ஒட்டுச்சீட்டு அல்லது பெயர் விவரச் சீட்டின் மேல் தோன்றலாம் அல்லது அப்பொருளோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றில் அச்சிடப்பட்டிருக்கலாம். பின்வருபவை வழக்கமாக பயன்படுத்தப்படும் சில சொற்கூறுகள்:
எழுதப்பட்ட ஒன்றைவிட ஒரு வாய்மொழி உத்தரவாதச் சான்றைச் செயலாக்குவது மிகக் கடினமானது. எனவே, வியாபாரி உண்மையுள்ளவர் என்று அறியப்பட்டாலும், எல்லா உத்தரவாதங்களையும் எழுத்தில் கொண்டிருப்பது மிகவும் நல்லது.
ஒரு விற்பனையாளரின் உத்தரவாதச் சான்று அவர் விற்கும் பொருளின் செயலாக்கம் அல்லது தரம் ஆகியவற்றிற்கான பொறுப்பை ஏற்க வியாபாரியின் பங்கில் ஒரு வாக்குறுதியை அளிக்கிறது. இந்த உத்தரவாதங்கள் பொதுவாக இவை உள்ளடங்கிய அல்லது தெரிவிக்கப்பட்ட உத்தரவாதச் சான்றுகளாக இருக்கின்றன.
உள்ளடங்கிய உத்தரவாதச் சான்றுகள் எல்லா நுகர்வோர் ஒப்பந்தங்களிலும் உள்ளதாக எண்ணப்படுகிறது நீங்களும் சட்டமும் என்ற புத்தகம் சொல்கிறது: “ஓர் உள்ளடங்கிய உத்தரவாதச் சான்று ஒரு வியாபாரி அந்தப் பொருளை விற்க உரிமையுள்ளவரென்றும், கொடுக்கப்பட்ட விவரிப்புக்கு சரக்குகள் பொதுவாக பொருந்துகின்றன என்றும், அவை நல்ல நிலையில் இருக்கின்றன மேலும் சொல்லப்பட்ட செயல் நோக்கத்திற்கு அடிப்படையில் பொருந்துகின்றன என்றும் உறுதியளிக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு டோஸ்டர் ரொட்டியை வாட்ட வேண்டும். இத்தகைய உறுதிமொழிகள் உள்ளடங்கி மறைந்து இருப்பதால், அவை இருப்பதை நுகர்வோர் அறியாமலிருக்கலாம். “அது போன்றது” என்று விற்கப்படும் பொருள் உள்ளடங்கிய உத்தரவாத சான்று பெற்றதல்ல.
ஒரு நேரிடை உத்தரவாதச் சான்று சரக்குகளின் செயலாக்கம் மற்றும் தரம்குறித்து குறிப்பிட்ட உறுதிமொழிகளை அளிக்கிறது. அது பொதுவாக எழுத்து வடிவில் கொடுக்கப்படுகிறது. நேரிடை உத்தரவாத சான்றுகள் சட்டத்தால் குறித்துக்காட்டப்படும் உத்தரவாதங்களை செல்லுபடியற்றதாகச் செய்யமுடியாது. நுகர்வோரின் உரிமைகளும் பொறுப்புகளும் என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறபடி, “ஒரு நேரிடையான நிபந்தனை அல்லது உத்தரவாதச் சான்று, தயாரிப்பாளரை அல்லது விற்பனையாளரை அந்த வாக்குறுதியை அல்லது உத்தரவாதத்தை கொடுத்தவரைச் சட்டத்தால் ஏற்கெனவே தேவைப்படுத்தப்படும் அந்த வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்ளப் பிணைக்கிறது.
தயாரிப்பாளரின் உத்தரவாதச் சான்று ஒரு பொருளின் பொதுவான நிலைமைக்கு உத்தரவாதம் அளித்து, மேலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு எந்தக் குறைகளையும் தயாரிப்பாளரின் செலவில் செப்பனிட ஓர் ஒப்பந்தத்தையும் பொதுவாக கொண்டிருக்கிறது. நீங்களும் சட்டமும் என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறபடி, “குறிப்பாகவும் தெளிவாகவும் அதன் வார்த்தைகளில் உள்ளடக்கப்படாத எந்தப் பழுதுகளுக்கும் அல்லது சீர்காப்புப் பணிக்கும் ஓர் எழுதப்பட்ட உத்தரவாத சான்றின்கீழ் தயாரிப்பாளரை பொறுப்பானவராகக் கருத நீதிமன்றங்கள் தயங்குகின்றன” என்பதை நினைவுகூருவது அவசியம். பெரும்பாலான பொருட்கள் தங்கள் சிறந்த உத்தரவாதத்தைத் தங்களின் நீடித்து உழைக்கும் பாகங்களின் மேல் கொண்டுள்ளன என்பதையும் நினைவுகூருங்கள். தேய்ந்துபோக அதிக சாத்தியம் வாய்ந்த பாகங்கள் பொதுவாக உள்ளடக்கப்படுவதில்லை. எது உள்ளடக்கப்படுகிறது என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.
சில மக்கள் நிபந்தனையற்ற உத்தரவாதத்தை எதைவிடவும் மிகச் சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக நோக்குகிறார்கள். இந்த உத்தரவாதம் ஒரு வரையறையும் இல்லாததுபோல் எண்ணப்படுகிறது. இருந்தாலும் எல்லா உத்தரவாதங்களும் சில நிபந்தனைகளை உள்ளிட்டவை என்று மக்கள் நிச்சயமாயிருக்கின்றனர்.
முன்னெச்சரிப்புடன் இருங்கள்
உத்தரவாதம் எளிதாக தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். உதாரணமாக, “ஆயுள்கால உத்தரவாதம்,” என்பது உங்கள் ஆயுள் காலம் முழுவதுமாக அது செல்லுபடியாகும் என பொருள்படுவதில்லை. ஆனால், அந்தக் குறிப்பிட்ட பொருளை உங்களுடையதாக நீங்கள் வைத்திருக்கும் காலம் வரையாக, அந்தப் பொருளின் ஆயுள்காலத்தை அது பொதுவாக குறிக்கிறது. “திருப்தியளிக்கப்பட்ட உத்தரவாதம்,” என்ற சொற்கூற்றைப் பற்றியதென்ன? ஓர் உண்மையான உத்தரவாதமாகக் கருதப்படுவதற்கு அது மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது.
கையொப்பமிடுமுன், சிறிய எழுத்துக்களை வாசிக்க நிச்சயமாயிருங்கள். அடிக்கடி ஓர் ஒப்பந்ததத்தின் முன் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுபவை பின்புறம் சிறிய எழுத்துக்களால் செல்லுபடியற்றதாக அல்லது மாற்றப்பட்டவையாக ஆக்கப்படலாம். ஆம், உங்கள் உத்தரவாதத்தைத் தெரிந்திருப்பது பலனளிக்கிறது, ஏனெனில் நுகர்வோரின் கையேடு எச்சரிக்கிறது: “தடித்த எழுத்துக்கள் கொடுக்கிறது, சிறிய எழுத்துக்கள் எடுத்துவிடுகிறது.” (g90 6/8)
[பக்கம் 18-ன் பெட்டி]
உங்கள் பொறுப்புறுதி பத்திரத்தை சரிபாருங்கள்
◻ அது வாய்மொழியானதா அல்லது எழுதப்பட்டதா?
◻ சரியாக எது உள்ளடக்கப்பட்டுள்ளது?
◻ கால வரம்பு என்ன?
◻ அதை ஆதரிக்கிறவர் யார்? மேலும் அவர்களுடைய நன்மதிப்பு என்ன?
◻ செப்பனிடும் செலவுகளுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?
◻ காரியங்கள் தவறாகச் செல்லும்போது யாருடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்?
◻ உத்தரவாதத்திலிருந்து பயனடைய ஏதாவது நடவடிக்கை தேவைப்படுகிறதா?
◻ பேணிக்காத்தல், பராமரித்தல் ஆகியவற்றிற்காக நீங்கள் என்ன பொறுப்பை உடையவர்களாய் இருக்கிறீர்கள்?