உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 3/8 பக். 31
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1991
  • டைனோசர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் தரும் பதில்கள்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 3/8 பக். 31

எமது வாசகரிடமிருந்து

விபத்துக்கள் புயற்காற்று மற்றும் பூமியதிர்ச்சி விபத்துக்களைப்பற்றிய கட்டுரையின்பேரில் நான் உண்மையில் மனசங்கடமடைந்தேன். (ஏப்ரல் 8, 1991) கொள்ளையடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை “உலகத்துக்கும்” யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் ஓர் உதாரணமாக நீங்கள் குறிப்பிட்டுக் காட்டினீர்கள். யெகோவாவின் சாட்சிகளைமாத்திரம் பெருமைப்படுத்தி வருணிப்பது மிக வெறுப்புக்குரியதாயுள்ளதென நான் உணருகிறேன்.

J. K., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரை, முதல் நூற்றாண்டில் செய்ததுபோல், இன்றும் துன்பம் அனுபவிக்கும் காலங்களின்போது, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பைக் காட்டுவதெவ்வாறென தெளிவுபடுத்திக் காட்டுவதற்குச் சேவித்தது. (2 கொரிந்தியர் 8:1-4) நட்புப்பாங்கற்றச் சில நிகழ்ச்சிகளை அறிவித்தபோதிலும், அந்தக் கட்டுரை “அத்தகைய உணர்ச்சியற்றச் செயல்கள்” சாட்சிகளல்லாதவர்களால் நடப்பிக்கப்பட்ட “மனிதத்தன்மைக்குரிய தயவான மற்றும் இரக்கமானப் பல செயல்களால் மறக்கப்பட்டுப்போகச் செய்யப்பட்டன,” என்றும் கூறியது.—ED.

(g90 7/8)

புகைப்பழக்கம் புகைப்பழக்கத்தைப் பற்றிக் கூறும் ஓர் அவேக்! பத்திரிகையை நான் ஒரு தொலைபேசி இருக்குமிடத்தில் கண்டேன். (செப்டம்பர் 8, 1991) அட்டைமீதிருந்த மண்டையோடு படம் உண்மையாய்க் கவனத்தை இழுப்பதாயிருந்தது! நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நான் புகைப்பதை நிறுத்திவிட்டேன், ஆனால் புகைப்பழக்கத்தையுடைய என் குமாரர்களில் ஒருவனிடம் அந்தப் பத்திரிகையை நான் கொடுத்தேன். இந்தப் பழக்கத்தை விடவேண்டிய இன்னும் மூன்று குமாரர்களும் எனக்கு இருக்கிறார்கள். அந்தக் கட்டுரைகள் மிக நன்றாய் அறிவுறுத்தும் மற்றும் குறிப்பாயுள்ள தகவல் அளிக்கின்றன. நான் உங்கள் விசுவாசத்தைச் சேர்ந்தவனல்லவெனினும் அதை மதிக்கிறேன்.

P. T., ஐக்கிய மாகாணங்கள்

என் ஆசிரியை மட்டுக்குமீறி புகைகுடித்தார்கள், அவர்கள் என்னிடம் பேசின ஒவ்வொரு சமயத்திலும், சிகரெட் புகை நாற்றமெடுத்தது. புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்குப் பத்து வழிகளைக் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை என் நினைவுக்கு வந்தது. நான் என் ஆசிரியைக்கு ஒரு பிரதியை எடுத்துச்சென்று கொடுத்தேன் மற்றும் மூன்று மாதங்களுக்குப் பின் புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்களாவெனக் கேட்டேன். அந்தப் பத்திரிகையின் உதவியாலும் தானும் முயற்சியெடுத்ததாலும், அதை நிறுத்திவிட்டதாகக் கூறினார்கள். அவர்கள் 25 ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தில் ஈடுபட்டுவந்திருந்தார்கள்.

B. O., ஐக்கிய மாகாணங்கள்

(g91 6/22)

சிறுத்தைப்புலிகள் “மாயமான காட்டுப்பூனை” (பிப்ரவரி 8, 1992) என்ற உங்கள் கட்டுரையை நான் வாசித்து மிகவும் மகிழ்ந்தேன். சிறுத்தைப்புலிகள் எவ்வளவு விசித்திரமானவையென நான் ஒருபோதும் உணரவில்லை. அவை அழகிய மிருகங்கள் நிச்சயமாகவே கடவுளுக்கு மகிமை கொண்டுவருகின்றன.

L. F., ஐக்கிய மாகாணங்கள்

(g90 12/8)

உலகளாவிய சகோதரத்துவம் நவம்பர் தொடக்கத்தில், என் ஆசிரியை, “ஒரு நாகரிகத்தை மற்றொன்றைப் பார்க்கிலும் மேம்பட்டதென தீர்க்கவேண்டுமா?” என்ற பொருளின்பேரில் ஒரு கட்டுரை எழுதும்படி கேட்டார்கள். உலகளாவிய சகோதரத்துவத்தின்பேரிலுள்ள கட்டுரைகள் (டிசம்பர் 8, 1991) சரியான நேரத்தில் வந்தன! நான் என் தகவலை எங்கிருந்து எடுத்தேனென என் ஆசிரியை என்னைக் கேட்டார்கள், நான் அவர்களுக்கு அவேக்! கட்டுரைகளைக் கொடுத்தேன். இந்தக் கட்டுரைக்கு (மொத்த 20 மார்க்கில்) 18 மார்க்குகள் எனக்குக் கிடைத்தன!

L. Q., ஃபிரான்ஸ்

(g91 6/8)

மெக்ஸிக்கோ நகரம் “மெக்ஸிக்கோ நகரம்—வளர்ந்துவரும் ஓர் இராட்சதனா?” (பிப்ரவரி 8, 1992) என்ற இந்தக் கட்டுரை தவறில் இருப்பதாக நான் கண்டேன். பெரிய குடும்பத்தைக் கொண்டிருப்பது பரம்பரை பண்பாட்டுநிலையென நீங்கள் சொல்லுகிறீர்கள். எனினும், இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இந்த நாட்டின் சில பாகங்களில் மாத்திரமே நடைபெறுகின்றன—மெக்ஸிக்கோ நகரத்தில் அல்ல.

S. C., மெக்ஸிக்கோ

இந்தக் கட்டுரை ஏதோ பிழைபட புரிந்துகொள்ளுதலை உண்டுபண்ணினால் நாங்கள் அதற்காக வருந்துகிறோம்—எனினும், அந்தக் கூற்று முழுமையாக மெக்ஸிக்கோவைக் குறிப்பிட்டே கூறப்பட்டது, வெறுமென மெக்ஸிக்கோ நகரத்தை அல்ல.—ED.

(g91 7/8)

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் நான் 1985 முதற்கொண்டே அவேக்! பத்திரிகையை ஒரு பக்கமும் விடாமல் முழுமையாக வாசித்திருக்கிறேன், ஆனால் கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார் என்றக் கேள்விக்கு உங்கள் ஆகஸ்ட் 8, 1990 வெளியீட்டில் கொடுத்திருந்ததைப்போன்ற இத்தகைய தெளிவுதரும் பதிலை நான் ஒருபோதும் காணவில்லை. பழுதில்லாமல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளை வாசிப்பதால் யோசனையுள்ள எவரும் தெளிவான பதில்களை அடையலாம்.

E. T. V., பிரேஸில்

(g91 3/22)

கிழக்கத்திய ஐரோப்பா கிழக்கத்திய ஐரோப்பாவில் ஏற்பட்ட சமீப மாற்றங்கள் தொடங்கினது முதற்கொண்டு, பூமியின் அந்தப் பாகத்தில் வாழும் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நான் அறிய ஆவலுடன் இருந்தேன். நம்முடைய பிரசுரங்களில் அதிகத் தகவல் காணப்படவில்லை. “கிழக்கத்திய ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகள்” என்ற கட்டுரையைக் கொண்ட (ஜூலை 8, 1991) வெளியீட்டை நான் பெற்றபோது என் மனத்திருப்தியை நீங்கள் கற்பனைசெய்து பார்க்கலாம். உலகத்தின் அந்தப் பாகத்தில் பிரசங்க வேலையின் முன்னேற்றத்தைப்பற்றி நீங்கள் எங்களுக்குத் தொடர்ந்து தகவல் கொடுப்பீர்களென நான் நம்புகிறேன்.

E. S. L., பிரேஸில்

(g91 5/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்