உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 12/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1993
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 12/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

தொலைக்காட்சி “தொலைக்காட்சி—உலகத்தை மாற்றிய பெட்டி,” என்ற தொடர்கட்டுரைகளுக்கு நன்றி. (ஜூன் 8, 1992) தொலக்காட்சியோடு எனக்கு எப்போதும் ஒரு பிரச்னை; அதை நிறுத்துவதற்கு எனக்கு மனஉறுதி இல்லை. உங்களுடைய ஆலோசனைகள் உதவிசெய்தன. நான் எவ்வளவு தொலக்காட்சி பார்க்கிறேன் என்பதைக் கூர்ந்துகவனிக்கப் போகிறேன். நான் அதைப் பார்க்க விரும்பும்போது நான் அதைச் செய்வதின் நன்மைகளையும் கேடுகளையும் முதலில் மதிப்பிட்டுப்பார்க்க உதவியாக நான் ஏற்கெனவே தொலக்காட்சியை, சாமான்கள் அறையில் வைத்துவிட்டேன். மறுபடியும் உங்களுக்கு நன்றி.

W. H., ஐக்கிய மாகாணங்கள்

லாட்டரி ஜுரம் “லாட்டரி ஜுரம்” பற்றிய கட்டுரைகள் (மே 8, 1992) நான் ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு முன்பு நான் கொண்டிருந்த சூதாடும் நண்பர்களை என் நினைவிற்குக் கொண்டுவந்தது. ஒருவன் சூதாட்டத்தினால் வந்த கள்ளத்தனத்திற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டான். மற்றொருவன், கடன்மீது அளவுக்கு அதிக வட்டி வசூலிப்பவர்களால் அடிக்கப்பட்டு, கடனைத் திருப்பிக்கொடுக்காமல் இருந்ததற்காக முடமாக்கப்பட்டான். சூதாட்டம் உண்மையில் ஜனங்களின் வாழ்வுகளைப் பாழாக்கிவிடுகிறது.

R. B., ஐக்கிய மாகாணங்கள்

உங்களை மாற்றிக்கொள்ளுதல் “உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமா?” (ஜூலை 8, 1992) என்ற தொடர்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த மிகச்சிறந்த ஆலோசனைகளுக்கு என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. நான் என்னுடைய ஆள்தன்மையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என உணர்ந்தேன்; ஆனால் அவ்வாறு செய்வதற்குத் தேவையான தூண்டுதல் என்னிடத்தில் இல்லாமல் இருந்தது. நீங்கள் கொடுத்திருக்கும் ஆலோசனையைப் பின்பற்றுவதற்கு இப்பொழுது முயற்சிசெய்கிறேன், மேலுமாக இது எனக்கு ஏற்கெனவே அதிக பலனளிப்பதாக உணருகிறேன்.

S. C., இத்தாலி

ஒரு மருத்துவமனையின் மனநோய் மருத்துவப்பிரிவில் சேர்க்கப்பட்டு வெளிவந்தப்பின்பு ‘மாற்றிக்கொள்ளுதல்’ என்பதைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தேன். மனதில் பதித்துக்கொள்ள வேண்டியது பற்றிய பேச்சு! எனக்கு மிகவும் ஆபத்தான ஒருவித நடத்தை சீர்கேடு இருந்தது என்பதை நான் அறிந்துகொள்வதற்கு ஏறக்குறைய 30 வருடங்கள் எடுத்தது. இப்பொழுதோ நான் உண்மையில் எப்படியிருக்கிறேனோ அப்படியே என்னை நான் காண முடிகிறது, மேலுமாக என்னுடைய குறைபாட்டை நான் இப்பொழுது அறிந்துகொண்டேன், என்னை நானே கட்டுப்படுத்தி வைப்பதற்குத் தேவையான பலன்தரும் முயற்சிகளை நான் எடுக்க முடிகிறது.

J. D., ஐக்கிய மாகாணங்கள்

நுரையீரல்கள் எனக்கு வயது 13. ஐந்தாம் வகுப்பில் நுரையீரல்களைப் பற்றிப் படித்தது என் ஞாபகத்திற்கு வருகிறது, ஆனால் அநேக குறிப்புகளை நான் மறந்துவிட்டேன். “நுரையீரல்கள்—ஓர் அதிசய வடிவமைப்பு” (ஜூன் 8, 1992) என்ற உங்கள் கட்டுரை என் நினைவாற்றலைப் புதுப்பித்தது. இது மிகவும் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது, அந்தப் படமும் மிகச் சரியானதாக இருந்தது. யெகோவாவின் அற்புதமான படைப்புகளின் மீதான நம்முடைய போற்றுதல்களை அதிகரிக்கச் செய்யும் இப்படிப்பட்ட கட்டுரைகளுக்கு மிக்க நன்றி.

A. M., ஐக்கிய மாகாணங்கள்

நுரையீரல்கள் “நுரையீரல்கள்—ஓர் அதிசய வடிவமைப்பு” (ஜூன் 8, 1992) என்ற கட்டுரைக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இது, யெகோவா தேவனின் அதிசயமான படைப்புகளில் ஆச்சரியப்படும்படி என் உணர்வுகளைத் தூண்டியது. இந்தக் கட்டுரை மிகவும் திறம்பட்ட விதத்தில் எழுதப்பட்டு இருப்பதோடு, அதிகமாக குழப்பத்தைக் கொடுக்கும் விஷயங்களை வியந்து பாராட்டும் அளவுக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ள எனக்கு உதவிசெய்திருக்கிறது.

B. T. A., பிரேஸில்

வீண்பேச்சு வீண்பேச்சைப் பற்றிய உங்களுடைய காலத்திற்கேற்றக் கட்டுரைக்கு நன்றி. (ஏப்ரல் 8, 1992) சற்றே முந்தி நான் கேடுவிளைவிக்கும் வீண்பேச்சுக்கு இலக்காக இருந்தேன். மத்தேயு 18:15-17-ல் உள்ள வேதஎழுத்துக்களின் நியமத்தின்படி என்னைப் புண்படுத்தியவரோடு காரியங்களை நான் சரிசெய்ய முடிந்தது.

B. C., ஆஸ்திரேலியா

கட்டுரைகள் மிகவும் அறிவுபுகட்டுபவையாகவும் நன்றாகவும் எழுதப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நீங்கள் பயன்படுத்திய நிழற்படங்களைக் குறித்து மிகவும் திகைப்படைந்தேன். அவற்றில் நான்கு படங்கள் பெண்கள் வீண்பேச்சு பேசுவதை எடுத்துக் காண்பிக்கின்றன. சொல்லிச் சொல்லப்படாது செய்தியானது வீண்பேச்சு பெண்களின் ஒரு விசேஷித்த குணம் என்பதே.

H. W., ஐக்கிய மாகாணங்கள்

பெண்களையோ ஆண்களையோ தவறான முறையில் அடையாளப்படுத்துவது எங்களுடைய நோக்கமாகயில்லை. போட்டோக்களில் இரண்டு, ஆண்கள் வீண்பேச்சில் ஈடுபடுவதாக காண்பித்தது. மற்றொரு போட்டோ, இரண்டு பெண்கள் ஒரு கட்டியெழுப்பும் உரையாடலில் பங்குபெறுவதைக் காட்டியது. ஒரு பெண், வீண்பேச்சை வெறுமென செவிகொடுத்துக் கேட்பதற்கும்கூட மறுப்புத் தெரிவிப்பதாகக் காட்டப்பட்டிருந்தது.—பதிப்பாசிரியர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்