உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/22 பக். 31
  • மக்களை மகிழ்விப்பது எது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மக்களை மகிழ்விப்பது எது?
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • யெகோவாவைச் சேவிப்பதில் மெய்யான மகிழ்ச்சி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • மகிழ்ச்சியைத் தேடி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • ‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்கும் மக்கள் சந்தோஷமானவர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • உண்மையான மகிழ்ச்சியை எங்கே காணமுடியும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 10/22 பக். 31

மக்களை மகிழ்விப்பது எது?

கடந்த இருபது ஆண்டுகளாக, உலகமுழுவதிலுமுள்ள ஆராய்ச்சியாளர்களின் ஒரு தொகுதியினர், மகிழ்ச்சியைக் குறித்து முறைப்படியான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கண்டுபிடிப்பு என்ன? “வெளிப்புற சூழ்நிலைமைகளில் மட்டுமே மகிழ்ச்சி பெரிதளவு சார்ந்திருப்பதாக தோன்றுகிறதில்லை” என்று ஸயின்டிஃபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது.

இந்த விஞ்ஞான இதழ் இவ்வாறும்கூட குறிப்பிட்டது: “ஆஸ்தி இருப்பதும்கூட மகிழ்ச்சியைக் குறிப்பதில்லை. தங்களுடைய சமுதாயம் அதிக வளம் பொருந்தியதாக ஆகியிருக்கும் சமயங்களில் மக்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆகவில்லை. . . . பெரும்பாலான நாடுகளில் வருவாய்க்கும் மகிழ்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பு குறைவாகவே உள்ளது.”

மகிழ்ச்சியான மக்களைச் சிறப்பித்துக்காட்டும் நான்கு விசேஷ குணங்களை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது: அவர்கள் தங்களை நேசிக்கிறார்கள். அதோடு தங்கள்பேரில் உயர்ந்த சுயமதிப்பைக் கொண்டிருக்கிறார்கள்; தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கட்டுப்பாட்டை உணருகிறார்கள்; அவர்கள் நம்பிக்கைவாதிகள்; மேலும் அவர்கள் பிறரிடமும் அதிக அக்கறை உடையவர்கள். கூடுதலாக, வெற்றிகரமான திருமணங்களும், நெருக்கமான தனிப்பட்ட உறவுகளும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அம்சங்களாக உள்ளன; மேலும் இவை உடல்நலத்தை மேம்படுத்தி ஆயுசை நீடிக்கச் செய்கின்றன.

ஆர்வத்துக்குரியவிதமாக, ஸயின்டிஃபிக் அமெரிக்கன் இவ்வாறு தெரிவித்தது: “மதசம்பந்தமாக சுறுசுறுப்பாக இருப்பவர்களும்கூட பெரும் மகிழ்ச்சியுடனிருப்பதாக சொல்கிறார்கள். மதத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களே அதில் குறைவாக ஈடுபடுகிறவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக தங்களை மகிழ்ச்சியுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று ஒரு பொது அறிக்கை கண்டறிந்தது. மகிழ்ச்சியான நிலையும், மனநிறைவளிக்கும் வாழ்க்கையும், பலமான மதசம்பந்தமான இணைப்பினாலும், வணக்க இடங்களுக்கு அடிக்கடி செல்வதனாலும் அதிகரிக்கிறது என்று 14 நாடுகளிலுள்ள 1,66,000 மக்களுடன், 16 தேசங்கள் இணைந்து நடத்திய ஆய்வு உட்பட, மற்ற ஆய்வுகள் காட்டுகின்றன.”

தனிப்பட்ட மகிழ்ச்சி யெகோவா தேவனை ஒன்றுபட்டு வணங்குவதோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டுள்ளது என்று சங்கீதக்காரனாகிய தாவீது முன்கூட்டியே வெளிப்படுத்தினார். அவர் இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.”—சங்கீதம் 122:1.

அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களை இவ்வாறு துரிதப்படுத்தியதில் ஆச்சரியமேதுமில்லை: ‘மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்!’ (எபிரெயர் 10:24, 25) உண்மைதான், தங்களைப்போலவே மதிப்புமிக்க விசுவாசத்தையுடைய ஆட்களோடு சேர்ந்து கடவுளை வணங்குவதற்கு ஒன்றுகூடிவருவது பைபிள் சத்தியத்தை நேசிப்பவர்களுக்கு களிகூருவதற்குரிய சமயமாக இருக்கிறது. லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இதை உண்மையென கண்டிருக்கிறார்கள்; மேலும் அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தில் வணக்கத்திற்காக அவர்களோடு சேர்ந்துகொண்டு இதைப் போன்ற அனுபவத்தை நீங்களும் பெறுவதற்காக உங்களை அழைக்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்