உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 9/1 பக். 3-4
  • மகிழ்ச்சியைத் தேடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிழ்ச்சியைத் தேடி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சரியான இடத்தில் தேடுகிறோமா?
  • யெகோவாவைச் சேவிப்பதில் மெய்யான மகிழ்ச்சி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • மகிழ்ச்சி—கைநழுவி விடுகிறதே
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உண்மையான மகிழ்ச்சியை எங்கே காணமுடியும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்கும் மக்கள் சந்தோஷமானவர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 9/1 பக். 3-4

மகிழ்ச்சியைத் தேடி

“மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன தேவை?” சில வருடங்களுக்கு முன்பு, பிரான்சு, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள மக்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நல்ல ஆரோக்கியம் தேவை என 89 சதவீதத்தினரும்; திருப்தியான மணவாழ்க்கை அல்லது பிடித்தமான துணை அமைய வேண்டும் என 79 சதவீதத்தினரும்; பிள்ளை செல்வம் வேண்டுமென 62 சதவீதத்தினரும்; நல்ல வேலை தேவை என 51 சதவீதத்தினரும் சொன்னார்கள். மகிழ்ச்சிக்கு பணம் உத்தரவாதம் அளிக்காது என்ற கருத்து பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கிறது; என்றாலும், சந்தோஷமாக இருப்பதற்கு பணம் தேவை என அவர்களில் 47 சதவீதத்தினர் உறுதியாக நம்பினார்கள். ஆனால், உண்மைகள் காட்டுவதென்ன?

முதலில், பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே இருப்பதாக சொல்லப்படும் தொடர்பை கவனியுங்கள். பணக்காரர்கள் சாதாரண மக்களைவிட அப்படியொன்றும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அமெரிக்காவில் வாழும் நூறு பெரும் செல்வந்தர்களிடம் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. மேலும், கடந்த முப்பது ஆண்டுகளில், அங்கு வாழும் அநேகர் பொருளுடைமைகளை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியிருக்கிற போதிலும், முன்பைவிட கூடுதலாக எந்தவித சந்தோஷத்தையும் காணவில்லை என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால், “இதே காலப்பகுதியில், மன அழுத்தத்திற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. டீனேஜர்களில் தற்கொலை வீதம் மும்மடங்கு பெருகியிருக்கிறது. விவாகரத்து வீதம் இரட்டிப்பாக ஆகியிருக்கிறது” என ஓர் அறிக்கை கூறுகிறது. சுமார் 50 நாடுகளில், பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

அடுத்து, ஆரோக்கியம், திருப்தியான மணவாழ்க்கை, நல்ல வேலை இவையெல்லாம் மகிழ்ச்சிக்கு எந்தளவு முக்கியம்? சரி, இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் கண்டிப்பாக மகிழ்ச்சிக்கு தேவையென்றால், நல்ல ஆரோக்கியமோ திருப்தியான மணவாழ்க்கையோ இல்லாத கோடானுகோடி ஆட்களைப் பற்றியென்ன? குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியரைப் பற்றியென்ன, நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடும் ஆண்களையும் பெண்களையும் பற்றியென்ன? இவர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியற்ற இருண்ட வாழ்க்கைதானா? தற்பொழுது நல்ல ஆரோக்கியத்தையும் திருப்தியான மணவாழ்வையும் அனுபவிக்கும் ஆட்களுடைய சூழ்நிலை மாறினால் அவர்களுடைய மகிழ்ச்சி மறைந்துவிடுமா?

சரியான இடத்தில் தேடுகிறோமா?

எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனென்றால் மனிதனை படைத்தவர் ‘நித்தியானந்த தேவன்’ என வர்ணிக்கப்படுகிறார், அதோடு கடவுளுடைய சாயலில் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான். (1 தீமோத்தேயு 1:11; ஆதியாகமம் 1:26, 27) ஆகவே, மனிதர்கள் மகிழ்ச்சியைத் தேடுவது இயல்பானதே. ஆனால், மகிழ்ச்சி என்பது மணலைப் போல் இருக்கிறதென அநேகர் உணருகிறார்கள்​—⁠இரண்டும் எளிதில் கைநழுவிப் போகிறதே.

என்றாலும், மகிழ்ச்சியைக் கண்டடைய சிலர் மிதமிஞ்சி செல்வதாக நினைக்கிறீர்களா? சமூக தத்துவஞானி எரிக் ஹோஃபர் அப்படித்தான் நினைத்தார். “மகிழ்ச்சியை தேடுவதே மகிழ்ச்சியின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று” என அவர் கூறினார். மகிழ்ச்சியை தவறான இடத்தில் தேடினாலும் இதுதான் சம்பவிக்கும். கடைசியில் ஏமாற்றத்தையும் வெறுப்பையும்தான் சம்பாதிப்போம். கோடீஸ்வரராவதற்கு கடுமுயற்சி செய்தல்; புகழையோ அங்கீகாரத்தையோ பெற முயலுதல்; அரசியல், சமூக, அல்லது பொருளாதார இலட்சியங்களை நாடுதல்; தன்னலம் நாடுதல், ஆசைகளை உடனுக்குடன் திருப்தி செய்தல் ஆகிய இவையெல்லாமே நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. “மகிழ்ச்சிக்காக முயலுவதை நிறுத்தினால் மாத்திரமே நாம் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்ற முரண்பட்ட கருத்து சிலருக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை.

குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், பிறருக்கு நல்லது செய்து உதவிக்கரம் நீட்டுவதே மகிழ்ச்சி தரும் என 40 சதவீதத்தினர் உணர்ந்ததாகவும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சுற்றாய்வு காட்டியது. மகிழ்ச்சியாக இருப்பதில் விசுவாசமும் மத நம்பிக்கையும் பெரும் பங்கு வகிப்பதாக 25 சதவீதத்தினர் வலியுறுத்தினர். உண்மையான மகிழ்ச்சிக்கு எது தேவை என்பதை அறிந்துகொள்வதற்கு நாம் கூர்ந்து ஆராய்வது அவசியமென தெளிவாகிறது. இதற்கு பின்வரும் கட்டுரை உங்களுக்கு உதவும்.

[பக்கம் 3-ன் படங்கள்]

பணம், திருப்தியான குடும்ப வாழ்க்கை, அல்லது நல்ல வேலை மகிழ்ச்சிக்கு முக்கியம் என பலர் நினைக்கின்​றனர். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்