உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 3/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2003
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 3/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

தரமான பொழுதுபோக்கு யெகோவாவின் சாட்சியாய் ஆகவேண்டும் என்ற விருப்பத்துடன் நான் பைபிளைப் படித்துவருகிறேன்; “தரமான பொழுதுபோக்கை நாடுதல்” என்ற தொடர்கட்டுரையைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். (மே 22, 1997) தொலைக்காட்சியில் தரமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது; இளைஞர், முதியோர் என எங்கள் அனைவருக்கும் நீங்கள் சிறந்த புத்திமதியைத் தந்தீர்கள். இப்படிப்பட்ட விஷயங்களின்பேரில் நீங்கள் தொடர்ந்து தகவலளிக்க வேண்டுமென விரும்புகிறேன்.

டி. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்

கடவுள் தொடர்ந்து என் நண்பராய் இருப்பாரா? “இளைஞர் கேட்கின்றனர் . . . கடவுள் தொடர்ந்து என் நண்பராய் இருப்பாரா?” (மே 22, 1997) என்ற அருமையான கட்டுரைக்காக நமது அன்பான கடவுளுக்கு ரொம்ப நன்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எனக்கு எவ்வளவு நண்பர்கள் இருப்பார்கள் என்பதைக் குறித்து ஒரு வினாத்தாளை (questionnaire) பூர்த்திசெய்தேன்; நான் எப்போதுமே நண்பர்களால் சூழப்பட்டிருப்பேன் என இறுதியில் அது காட்டியது. வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், அது முழுக்க முழுக்க பொய்யாகிவிட்டது. இருந்தாலும், யெகோவா தேவன் மாத்திரம்தான் நமது மிகச் சிறந்த நண்பர் என்பதை புரிந்துகொண்டிருக்கிறேன். நாம் யெகோவா தேவனின் நண்பர்களாய் இல்லாவிட்டால், எல்லாமே அர்த்தமில்லாமல் போய்விடும் என்பது உண்மை.

ஏ. டி. எம்., மெக்ஸிகோ

இளைஞர்பேரில் நீங்கள் காண்பிக்கும் அக்கறைக்காக நன்றி. “இளைஞர் கேட்கின்றனர் . . . கடவுள் தொடர்ந்து என் நண்பராய் இருப்பாரா?” என்ற கட்டுரை, எனக்கு மிகவும் அவசியப்பட்ட நேரத்தில் வந்துசேர்ந்தது. நான் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தேன், சமீபத்தில் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட்டேன். சிலசமயங்களில் தனிமையில் தவித்திருக்கிறேன், அநேக சந்தேகங்கள் மனதில் எழும்பியிருக்கின்றன; அவற்றில் ஒன்றுதான், கடவுள் எனக்கு செவிகொடுக்கிறாரா என்பது. “மாம்சத்திலே ஒரு முள்” என்ற உபதலைப்பின்கீழ் பவுலின் முன்மாதிரியை படித்த பிற்பாடு, தவறாமல் பைபிள் படிப்பதன் மூலமாகவும் உள்ளப்பூர்வமான ஜெபத்தின் மூலமாகவும் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற காத்திருக்கும்படி தீர்மானித்தேன். யெகோவா தொடர்ந்து என் நண்பராய் இருப்பாரா என்ற கேள்விக்கு எனக்கு தெளிவான பதில் கிடைத்திருக்கிறது.

ஜே. சி. ஏ., அர்ஜன்டினா

தேனீ வளர்ப்பு “தேனீ வளர்ப்பு—‘தேன்சிந்தும்’ கதை” (மே 22, 1997) என்ற கட்டுரையைப் பற்றி எழுதுகிறேன்; அதில் தேனீக்களைப் பற்றி நீங்கள் சரியான தகவலை சுருக்கமாக வழங்கியிருக்கிறீர்கள். விளக்கங்கள், புகைப்படங்கள், கருத்துக்கள் ஆகியவை எந்தப் பிழைகளும் இல்லாமல் பொருத்தமாக வழங்கப்பட்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது. தேனீ வளர்ப்பவர், துல்லியமற்ற அல்லது பகுதியளவே சரியான தகவலைத்தான் பெரும்பாலும் செய்தி அறிக்கைகளில் பெறுகிறார், ஆனால் அப்படிப்பட்ட எதுவும் உங்கள் கட்டுரையில் இல்லை. தேனீ வளர்ப்பில் நான் அதிக ஆர்வத்தோடு ஈடுபடுகிறேன்; அநேக நபர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக ‘மதிநுட்பம்’ இந்தப் பூச்சிகளுக்கு இருக்கிறது என்பதை அநேகமுறை உணர்கிறேன். ஆகவே இந்த விஷயத்தைக் கையாளுகையில், முக்கியமாக இப்படிப்பட்ட சிறு ஜீவன்களில் காணப்படும் உயிரின் எழிலுக்கு நீங்கள் மகுடம் சூட்டியிருக்கிறீர்கள் என சொல்வது மிகையாகாது.

பி. ஜி. எம்., இத்தாலி

பராமரித்தல் “பராமரித்தல்—இந்தச் சவாலை எதிர்ப்படுதல்” (பிப்ரவரி 8, 1997) என்ற தொடர்கட்டுரையைப் பிரசுரித்ததற்காக நன்றி. என் அம்மா கேன்ஸர் பேஷண்ட்; அவரது வியாதியின் இந்தக் கடைசி கட்டங்களில் அவரைப் பராமரிப்பது என்னை முற்றிலும் சோர்வடையச் செய்திருக்கிறது. பராமரிப்பவரது உணர்ச்சிகளை அந்தக் கட்டுரைகள் மிகச் சரியாக விளக்கின; மேலும் அந்தப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எவ்வாறு தயவு காண்பிப்பது என்பதைப் பற்றியும் மற்றவர்களுக்கு தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட கட்டுரைகளைக் காண்பதே அரிது.

எஃப். டி., தைவான்

இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு 12 வயது. பள்ளிக்குச் செல்கிறேன்; உங்கள் பத்திரிகைகளை மிகவும் விரும்பி வாசிக்கிறேன். அவற்றை வாசிக்க ஆரம்பித்ததற்கு முன், என்னைவிட வயதில் முதிர்ந்தவர்களோடு பழகுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” என்ற பகுதியின்கீழ் விழித்தெழு! பிரசுரிக்கும் கட்டுரைகளை வாசித்த பிறகு, அது எனக்கு சுலபமாகிவிட்டது. நன்றி!

என். டி., ரஷ்யா

எமது வாசகரிடமிருந்து நான் கடந்த 26 வருடங்களாக விழித்தெழு! பத்திரிகையை விடாது படித்துவருகிறேன்; எப்போதும் போலவே இதை இன்னமும் வாசித்து மகிழுகிறேன். “எமது வாசகரிடமிருந்து” என்ற பகுதியை வாசிக்கத் தவறுவதே இல்லை; ஏனெனில் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் சில கட்டுரைகளை மறுபடியும் வாசிக்கும்படி என்னைப் பெரும்பாலும் தூண்டுகின்றன. இப்படிப்பட்ட அருமையான பத்திரிகைகளுக்காக நன்றி.

எம். பி., பிரான்ஸ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்