உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • gf பாடம் 8 பக். 14
  • கடவுளுடைய விரோதிகள் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய விரோதிகள் யார்?
  • கடவுளுடைய நண்பர்
  • இதே தகவல்
  • விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • உங்கள் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • பிசாசு யார்?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • தெய்வீக போதனைக்கு எதிராக பேய்களின் போதகங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
கடவுளுடைய நண்பர்
gf பாடம் 8 பக். 14

பாடம் 8

கடவுளுடைய விரோதிகள் யார்?

கடவுளுடைய பிரதான விரோதி பிசாசாகிய சாத்தான். அவன் ஓர் ஆவி ஆள், யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்தவன். சாத்தான் தொடர்ந்து கடவுளுக்கு விரோதமாக சண்டை செய்கிறான், மனிதருக்கு பெரும் தொல்லைகளையும் உண்டாக்குகிறான். சாத்தான் தீங்கு செய்பவன். அவன் ஒரு பொய்யன், கொலைகாரன்.​—⁠யோவான் 8:⁠44.

கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்வதில் சாத்தானுடன் மற்ற ஆவி ஆட்களும் சேர்ந்து கொண்டனர். பைபிள் அவர்களை பேய்கள் என அழைக்கிறது. சாத்தானைப் போலவே, பேய்களும் மனிதருக்கு விரோதிகள். மக்களுக்கு தீங்கு செய்ய விரும்புகிறார்கள். (மத்தேயு 9:32, 33; 12:22) சாத்தானையும் அவனுடைய பேய்களையும் யெகோவா நிரந்தரமாக அழித்துவிடுவார். மனிதரை தொல்லைப்படுத்த அவர்களுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது.​—⁠வெளிப்படுத்துதல் 12:⁠12.

கடவுளுடைய நண்பராயிருக்க விரும்பினால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென சாத்தான் விரும்புகிறானோ அதை செய்யக் கூடாது. சாத்தானும் பேய்களும் யெகோவாவை வெறுக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய விரோதிகள், உங்களையும் கடவுளுடைய விரோதியாக்க விரும்புகிறார்கள். நீங்கள் யாரை பிரியப்படுத்த விரும்புகிறீர்கள்​—⁠சாத்தானையா அல்லது யெகோவாவையா? நித்திய ஜீவன் வேண்டுமானால், நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றுவதற்கு பலவித தந்திரங்களையும் வழிகளையும் சாத்தான் வைத்திருக்கிறான். நிறைய பேர் அவனால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.​—⁠வெளிப்படுத்துதல் 12:⁠9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்