உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jt பக். 32
  • உங்களை அழைக்கிறோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களை அழைக்கிறோம்
  • யெகோவாவின் சாட்சிகள் அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன?
  • இதே தகவல்
  • உங்களுக்கான எங்களுடைய அழைப்பு
    இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள்
  • அன்புக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புவது—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆயத்தமாயிருங்கள்
    விழித்தெழு!—1995
  • கடவுளுடைய சக்தியும் மணமகளும் விடுக்கிற அழைப்பு: “வருக, வருக!”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
யெகோவாவின் சாட்சிகள் அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன?
jt பக். 32

உங்களை அழைக்கிறோம்

இச்சிற்றேட்டின் வாயிலாக உங்களுடன் உரையாடியதை அனுபவித்து மகிழ்ந்தோம். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டதை நீங்களும் அனுபவித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம். உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் எங்களைச் சந்திப்பதற்கு நாங்கள் விடுக்கும் அழைப்பை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுடைய கூட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை வந்து பாருங்கள். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் இந்தப் பூமி பரதீஸாக மாற்றப்படுவதைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நாங்கள் எவ்வாறு முயற்சி செய்கிறோம் என்பதைப் பாருங்கள்.

இந்த வாக்குறுதியை கடவுள் தந்திருக்கிறார். “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) அநேக நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காத்திருக்கும் காலம் அதன் முடிவை நெருங்குகிறது. உலக நிலைமைகள் இதை சுட்டிக்காட்டுகின்றன.

‘நாளானது சமீபித்து வருகிறதை நீங்கள் பார்க்கும்போது,’ ‘சபை கூடிவருதலை விட்டுவிடாமல் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனியுங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். (எபிரெயர் 10:24, 25) எங்களோடு கூடிவருவதன் மூலம் பவுலின் இந்த ஆலோசனைக்குச் செவிசாய்க்கும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்