இயேசுவின் தேவபக்திக்குரிய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
“தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது: ‘அவர் [இயேசு] மாம்சத்திலே வெளிப்பட்டார்.’”—1 தீமோத்தேயு 3:16.
1. (எ) 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன கேள்வி பதிலளிக்கப்படாமலிருந்தது? (பி) எப்போது, எவ்விதமாக விடை கொடுக்கப்பட்டது?
அது 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக விடையளிக்கப்படாத ஒரு கேள்வியாக இருந்தது. முதல் மனிதனாகிய ஆதாம் உத்தமத்தைக் காத்துக்கொள்ளத் தவறியது முதற்கொண்டு, கேள்வியானது: மனிதவர்க்கத்தின் மத்தியில் தேவபக்தி எவ்வாறு விளங்கப்பண்ணமுடியும்? கடைசியாக, பொ.ச. முதல் நூற்றாண்டில் கடவுளுடைய குமாரன் பூமிக்கு வந்தபோது, விடைகொடுக்கப்பட்டது. ஒவ்வொரு சிந்தனையிலும் வார்த்தையிலும் செயலிலும் இயேசு கிறிஸ்து யெகோவாவிடம் தம்முடைய தனிப்பட்ட பற்றுதலை மெய்ப்பித்துக்காட்டினார். இவ்விதமாக அவர், ‘தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்தி’ ஒப்புக்கொடுத்த மனிதர்கள் இப்படிப்பட்ட பக்தியைக் காத்துக்கொள்வதற்குரிய வழியைக் காட்டினார்.—1 தீமோத்தேயு 3:16.
2 ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக தேவபக்தியை நாடுகையில், இயேசுவின் முன்மாதிரியை “உற்று கவனிப்பது” நன்மையாக இருக்கும். (எபிரெயர் 12:3, NW) ஏன்? இரண்டு காரணங்களுக்காக. முதலாவதாக, இயேசுவின் முன்மாதிரி தேவபக்தியை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவி செய்யக்கூடும். இயேசு வேறு எவரையும்விட தம்முடைய தகப்பனை மிக நன்றாக அறிந்திருந்தார். (யோவான் 1:18) இயேசு அத்தனை நெருக்கமாக யெகோவாவின் வழிகளையும் குணாதிசயங்களையும் பின்பற்றியதன் காரணமாக அவரால் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.” (யோவான் 14:9) அப்படியென்றால் இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் மூலமாக யெகோவாவின் மென்மையான குணாதிசயங்களுக்கு ஆழ்ந்த போற்றுதலை நாம் சம்பாதித்துக்கொண்டு இவ்விதமாக நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகரோடு நம்முடைய தனிப்பட்ட பற்றுதலைப் பலப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, இயேசுவின் முன்மாதிரி தேவபக்தியை விளங்கப்பண்ண நமக்கு உதவக்கூடும். தேவபக்தியை வெளிப்படுத்தும் நடத்தைக்குப் பரிபூரண முன்மாதிரியை அவர் வைத்தார். ஆகவே நாம் எவ்விதமாக ‘கிறிஸ்துவைத் தரித்துக் கொள்வது’, அதாவது, அவரை ஒரு மாதிரியாக எடுத்துக்கொண்டு, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது என்பதைச் சிந்திப்பது நன்மையாக இருக்கும்.—ரோமர் 13:14.
3. நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்புத் திட்டத்தில் எதை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்? ஏன்?
3 இயேசு கிறிஸ்து சொன்ன மற்றும் செய்த அனைத்துமே எழுத்துவடிவில் பாதுகாக்கப்படவில்லை. (யோவான் 21:25) ஆகவே தெய்வீக ஏவுதலின் கீழ் பதிவு செய்து வைக்கப்பட்ட காரியங்கள் நமக்குக் குறிப்பாக முக்கிய அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். ஆகவே தனிப்பட்ட பைபிள் படிப்பு திட்டத்தில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய சுவிசேஷப் பதிவுகளை ஒழுங்காக வாசிப்பதை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட வாசிப்பு, தேவபக்தியை நாடுவதில் நமக்கு உதவியாக இருக்கவேண்டுமானால், நாம் வாசிக்கும் காரியத்தைப் போற்றுதலுடன்கூட சிந்தித்துப் பார்ப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படையாகத் தெரிவதற்கும் அப்பால் பார்க்கவும்கூட நாம் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்.
பிதாவைப் போல், குமாரனைப் போல்
4. (எ) இயேசு கனிவும் ஆழ்ந்த இரக்க உணர்வுமுள்ள நபராக இருந்தார் என்பதை எது காண்பிக்கிறது? (பி) மற்றவர்களோடு செயல்தொடர்பு கொள்கையில் இயேசு என்ன முன்முயற்சியை எடுத்தார்?
4 ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். இயேசு கனிவும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சியுமுள்ள ஒரு மனிதராக இருந்தார். மாற்கு 10:1, 10, 13, 17 மற்றும் 35-லிருந்து, எல்லா வயதுகளிலும், பின்னணிகளிலுமிருந்து வந்த ஆட்கள் அவரிடம் அணுகுவதை எளிதாகக் கண்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர் பிள்ளைகளைத் தம்முடைய கைகளில் அணைத்துக்கொண்டார். (மாற்கு 9:36; 10:16) ஏன் ஜனங்கள், பிள்ளைகளும்கூட இயேசுவோடு அத்தனை செளகரியமாக உணர்ந்தார்கள்? அவர்கள் பேரில் அவர் கொண்டிருந்த கபடமற்ற உண்மையான அக்கறையே காரணமாகும். (மாற்கு 1:40, 41) அவர் அநேகமாக உதவி தேவைப்படும் மற்றவர்களை அணுக முன்முயற்சி செய்ததில் இது தெளிவாக இருந்தது. ஆக, நாயீன் ஊர் விதவையின் மகனை அடக்கம் பண்ணும்படியாகக் கொண்டு போகையில் அவர் அவளைப் “பார்த்தார்” என்பதாக நாம் வாசிக்கிறோம். பின்னர் அவர் “கிட்ட வந்து” அந்த வாலிபனை உயிர்த்தெழுப்பினார். அவ்விதமாகச் செய்யும்படியாக எவரும் கேட்டதாக அங்கு எந்தக் குறிப்புமில்லை. (லூக்கா 7:13–15) மேலுமாக அவர், அவ்விதமாகச் செய்யும்படியாக கேட்கப்படாமலேயே நிமிரக்கூடாத கூனியையும் நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதனையும் சுகப்படுத்தினார்.—லூக்கா 13:11–13; 14:1–4.
5. இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய இந்தப் பதிவுகள் யெகோவாவின் குணாதிசயங்களையும் வழிகளையும் பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றன?
5 இப்படிப்பட்ட சம்பவங்களைக் குறித்து நீங்கள் வாசிக்கையில், சற்று நிறுத்தி உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இயேசு தம்முடையப் பிதாவை பரிபூரணமாகப் பின்பற்றியதன் காரணமாக, யெகோவாவின் குணாதிசயங்களையும் வழிகளையும் பற்றி இந்தப் பதிவுகள் எனக்கு என்ன சொல்லுகின்றன?’ யெகோவா கனிவும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சியுமுள்ள ஒரு கடவுள் என்பதை அவை நமக்கு மீண்டும் உறுதி செய்ய வேண்டும். மனித குடும்பத்தில் அவருடைய நிலையான அக்கறையின் தீவிரம், அவர்களோடு செயல்தொடர்பு கொள்வதற்கு முன்முயற்சியை எடுப்பதற்கு அவரைத் தூண்டியிருக்கிறது. அவர் “அநேகரை மீட்கும் பொருளாகத்” தம்முடைய குமாரனைக் கொடுக்கும்படியாக வற்புறுத்தப்படவேண்டியிருக்கவில்லை. (மத்தேயு 20:28; யோவான் 3:16) அன்பினால் தம்மை சேவிப்பவர்களிடமாக “பிரியம் வைக்க” வாய்ப்புகளுக்காக அவர் எதிர்நோக்கியிருக்கிறார். (உபாகமம் 10:15) பைபிள் சொல்லுகிறவிதமாகவே “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.”—2 நாளாகமம் 16:9, NW.
6. அவருடைய குமாரனின் முன்மாதிரியால் விளக்கப்பட்டபடி, யெகோவாவின் கனிவு மற்றும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சிகளை நாம் சிந்திக்கையில் என்ன விளைகிறது?
6 இயேசுவின் முன்மாதிரியால் விளக்கப்பட்டபடி யெகோவாவின் கனிவு மற்றும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சிகளை இவ்விதமாக சிந்திப்பது, உங்கள் இருதயத்தைத் தொட்டு அவருடைய கனிவான, கவர்ச்சியான பண்புகளுக்காக அதிகமான போற்றுதலால் இருதயத்தை நிரப்பிவிடுகிறது. இது, உங்களை அவரிடமாக நெருங்கிவரச் செய்யும். நீங்கள் எல்லாச் சமயங்களிலும் எல்லாச் சூழ்நிலைமைகளின் கீழும் ஜெபத்தில் அவரைத் தாராளமாக அணுகுவதற்குத் தூண்டப்படுவீர்கள். (சங்கீதம் 65:2) அது அவரிடமாக உங்கள் தனிப்பட்ட பற்றுதலை பலப்படுத்தும்.
7. யெகோவாவின் கனிவு மற்றும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சிகளைக் குறித்து சிந்தித்த பின்பு, உங்களை நீங்கள் என்ன கேட்டுக் கொள்ள வேண்டும்? ஏன்?
7 ஆனால் தேவபக்தி வெறுமென வணக்கத்துக்குரிய உணர்ச்சியைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்பதை நினைவில் வையுங்கள். பைபிள் பண்டிதர் R. லென்ஸ்கி குறிப்பிடுகிறபடியே, அது, “நம்முடைய முழு பயபக்தியான, வணக்கத்துக்குரிய மனநிலையையும் அதிலிருந்து வெளிப்படும் செயல்களையும் உட்படுத்துகிறது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) ஆகவே இயேசுவின் முன்மாதிரியால் விளக்கப்பட்டபடி யெகோவாவின் கனிவு மற்றும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சிகளை சிந்தித்துப் பார்த்த பின்பு, உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த விஷயத்தில் நான் எவ்விதமாக அதிகமாக யெகோவாவைப் போல இருக்க முடியும்? மற்றவர்கள் என்னை அணுகப்படத்தக்கவனாகக் காண்கிறார்களா?’ நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எளிதில் அணுகமுடிகிறவராக இருக்க வேண்டும். நீங்கள் சபை மூப்பராக இருந்தால், நிச்சயமாகவே நீங்கள் அணுக முடிகிறவராக இருக்க வேண்டும். அப்படியென்றால் எது உங்களை அதிகமாக அணுகப்படத்தக்கவராக்கும்? கனிவும் ஆழ்ந்த இரக்க உணர்ச்சியுமே. நீங்கள் மற்றவர்களைக் குறித்து உண்மையில் அக்கறையுள்ளவராகவும், அவர்களுக்காக உங்களையே கொடுக்க மனமுள்ளவராகவும் இருக்கும்போது, இதை அவர்கள் உணர்ந்துகொண்டு உங்களிடமாக இழுக்கப்படுவதாக உணருவார்கள்.
8. (எ) இயேசுவைப் பற்றிய பைபிள் பதிவுகளை நீங்கள் வாசிக்கையில் நீங்கள் எதை மனதில் வைக்க வேண்டும்? (பி) அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்ட பதிவுகளிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 ஆகவே இயேசுவைப் பற்றிய பைபிள் பதிவுகளை நீங்கள் வாசிக்கையில், இயேசு சொன்ன மற்றும் செய்த காரியங்களிலிருந்து ஓர் ஆளாக யெகோவாவைப் பற்றி அதிகத்தை நீங்கள் கற்றுக்கொள்ளமுடியும் என்பதை மனதில் வையுங்கள்.a இயேசுவால் பிரதிபலிக்கப்பட்டபடி கடவுளுடைய குணாதிசயங்களுக்கு உங்கள் போற்றுதல் அதிகமாக அவரைப் போன்றிருக்க முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டும்போது உங்கள் தேவபக்திக்கு நீங்கள் அத்தாட்சி அளிக்கிறீர்கள்.
குடும்ப அங்கத்தினர்களிடமாக தேவபக்தியை அப்பியாசித்தல்
9, 10. (எ) இயேசு மரிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக, எவ்விதமாக அவருடைய தாயினிடமாக அவருடைய அன்பும் அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டது? (பி) இயேசு ஏன், தம்முடைய சொந்த மாம்சப்பிரகாரமான சகோதரர்களில் ஒருவரிடமாக இல்லாமல், அப்போஸ்தலனாகிய யோவானிடமாக மரியாளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தார்?
9 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் ஊழியமும் தேவபக்தி எவ்விதமாக காண்பிக்கப்படலாம் என்பது பற்றி அதிகத்தை வெளிப்படுத்துகிறது. யோவான் 19:25–27-ல் (NW) உருக்கமான ஓர் உதாரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் வாசிப்பதாவது: “இயேசுவின் கழுமரத்தினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ‘ஸ்திரீயே, அதோ, உன் மகன்’ என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: ‘அதோ, உன் தாய்’ என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.”
10 அதைக் கற்பனை செய்து பாருங்கள்! தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையை ஒப்புவிப்பதற்குச் சில வினாடிகளுக்கு முன்பாக, தம்முடைய தாய் மரியாளை (இந்தச் சமயத்திற்குள் அவள் ஒரு விதவையாக இருந்திருக்க வேண்டும்) கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தனக்கு அன்பாயிருந்த அப்போஸ்தலனாகிய யோவானிடம் ஒப்படைக்க இயேசுவின் அன்பும் அக்கறையும் அவரைத் தூண்டியது. ஆனால் இயேசுவின் சொந்த மாம்சப்பிரகாரமான சகோதரர்களில் ஒருவரிடமாக அல்லாமல் ஏன் யோவானிடம்? ஏனென்றால் இயேசு வெறுமென மரியாளின் சரீர, பொருள்சம்பந்தமான தேவைகளைக் குறித்து மாத்திரமல்லாமல், ஆனால் அதிக விசேஷமாக அவளுடைய ஆவிக்குரிய நலனில் அக்கறையுள்ளவராக இருந்தார். அப்போஸ்தலனாகிய யோவான் (ஒருவேளை இயேசுவின் பெற்றோரின் உடன்பிறந்தாரின் மகன்) தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்திருந்தான், ஆனால், இயேசுவின் மாம்சப்பிரகாரமான சகோதரர்களோ இன்னும் விசுவாசிகளானதற்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை.—மத்தேயு 12:46–50; யோவான் 7:5.
11. (எ) பவுலின் பிரகாரம், ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக தேவபக்தியை தன்னுடைய சொந்தக் குடும்பத்தில் அப்பியாசிக்கலாம்? (பி) மெய்க் கிறிஸ்தவன் ஏன் வயதான பெற்றோருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறான்?
11 இப்பொழுது, இது எவ்விதமாக தேவபக்தியின் வெளிகாட்டாக இருந்தது? அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறான்: “உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம் பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 5:3, 4) பொருளாதார உதவி அளிப்பது அவசியமாகும்போது அதை அளிப்பதன் மூலம் ஒருவருடைய பெற்றோரைக் கனம் பண்ணுதல், பவுல் சொல்கிறவிதமாக தேவபக்தியின் வெளிகாட்டாக இருக்கிறது. எவ்விதமாக? குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவரான யெகோவா, பிள்ளைகளுக்குத் தங்களுடைய பெற்றோரை கனம்பண்ணும்படியாகக் கட்டளையிடுகிறார். (எபேசியர் 3:14, 15; 6:1–3) ஆகவே, இப்படிப்பட்ட குடும்ப உத்தரவாதங்களுக்காக கவனம் செலுத்துவது ஒருவருடைய பெற்றோருக்கு அன்பைக் காண்பிப்பதாக மாத்திரமல்லாமல், ஆனால் கடவுளுக்குப் பயபக்தியையும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலையும்கூட காண்பிப்பதாக இருக்கிறது என்பதை உண்மைக் கிறிஸ்தவன் உணருகிறான்.—கொலோசெயர் 3:20 ஒப்பிடவும்.
12. வயதான பெற்றோர்களிடமாக நீங்கள் எவ்விதமாக தேவபக்தியை அப்பியாசிக்கலாம்? உள்நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
12 அப்படியென்றால், நீங்கள் எவ்விதமாக குடும்ப அங்கத்தினர்களிடமாக தேவபக்தியை அப்பியாசிக்கலாம்? இது இயேசு செய்தது போலவே, நிச்சயமாகவே வயதான பெற்றோர்களின் ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான தேவைகளை நிறைவு செய்வதை உட்படுத்தும். அவ்விதமாகச் செய்யத் தவறுவது தேவபக்திக் குறைவை வெளிப்படுத்தும். (2 தீமோத்தேயு 3:2, 3, 5 ஒப்பிடவும்.) ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவன் தேவையிலிருக்கும் பெற்றோருக்கு உதவியளிப்பது வெறுமென தயவினால் அல்லது கடமையினால் அல்ல, ஆனால் அவன் தன்னுடைய குடும்பத்தை நேசிப்பதாலும், இப்படிப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்றுவதன் பேரில் யெகோவா வைக்கும் மிக உயர்ந்த மதிப்பை ஒப்புக்கொள்வதாலுமே அவன் அவ்விதமாகச் செய்கிறான். இதன் காரணமாக, வயதான பெற்றோர்களை அவன் கவனித்துக் கொள்வதானது, தேவபக்தியின் வெளிக்காட்டாக இருக்கிறது.b
13. கிறிஸ்தவ தகப்பன் எவ்விதமாக தன்னுடைய குடும்பத்தினிடமாக தேவபக்தியை அப்பியாசிக்கக்கூடும்?
13 தேவபக்தி வீட்டில் மற்ற வழிகளில் அப்பியாசிக்கப்படலாம். உதாரணமாக, தன்னுடைய குடும்பத்துக்குப் பொருள் சம்பந்தமாகவும், உணர்ச்சிகள் சம்பந்தமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் தேவையானவற்றை அளிக்கும் பொறுப்பு கிறிஸ்தவ தகப்பனுக்கு இருக்கிறது. ஆகவே, பொருளாதார ஆதரவை அளிப்பதோடுகூட, அவர் ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்புக்காக அன்பாக ஏற்பாடு செய்கிறார். அவர் தன்னுடைய குடும்பத்தோடுகூட வெளி ஊழியத்தில் ஒழுங்காகப் பங்கு கொள்ள நேரத்தைத் திட்டமிடுகிறார். அவர் சமநிலையுள்ளவராக, அவர்களுடைய ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு தேவைகளையும்கூட உணர்ந்தவராக இருக்கிறார். முன்னுரிமைப் பெறவேண்டியவைகளை ஞானமாகத் தீர்மானித்து, சபை நடவடிக்கைகள் தன்னுடைய குடும்பத்தை அசட்டைச் செய்யும்படிச் செய்ய அனுமதிக்காமலிருக்கிறார். (1 தீமோத்தேயு 3:5, 12) அவர் ஏன் இவை அனைத்தையும் செய்கிறார்? வெறுமென கடமை உணர்வினால் அல்ல, ஆனால் குடும்பத்தை நேசிப்பதனால் அவ்வாறு செய்கிறார். ஒருவருடைய குடும்பத்தைக் கவனிப்பதன் பேரில் யெகோவா வைக்கும் முக்கியத்துவத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். இவ்விதமாக ஒரு கணவனாகவும் தகப்பனாகவும் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர் தேவபக்தியை அப்பியாசிக்கிறார்.
14. ஒரு கிறிஸ்தவ மனைவி எவ்விதமாக வீட்டில் தேவபக்தியை வெளிக்காட்டலாம்?
14 கிறிஸ்தவ மனைவிமார்களுக்கும்கூட வீட்டில் தேவபக்தியை அப்பியாசிக்கும் உத்தரவாதம் உண்டு. ஒரு மனைவி கணவனுக்குக் “கீழ்ப்படிந்து” அவருக்கு “ஆழ்ந்த மரியாதையைக்” கொண்டிருக்க வேண்டும் என்று பைபிள் சொல்லுகிறது. (எபேசியர் 5:22, 33) கணவன் அவிசுவாசியாக இருந்தாலும்கூட அவள் “கீழ்ப்படிந்திருக்க” வேண்டும். (1 பேதுரு 3:1) கிறிஸ்தவ பெண், தன்னுடைய கணவன் செய்யும் தீர்மானங்கள் கடவுளுடைய சட்டங்களுக்கு முரணாக இல்லாதவரை, அவருடைய தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலம் இப்படிப்பட்ட மனைவிக்குரிய கீழ்ப்படிதலைக் காண்பிக்கிறாள். (அப்போஸ்தலர் 5:29) அவள் ஏன் இந்தப் பங்கை ஏற்றுக்கொள்கிறாள்? அவள் தன் கணவனை நேசிப்பதால் மாத்திரமல்ல, ஆனால் விசேஷமாக அது “கர்த்தருக்குப் பிரியமானது” என்பதை ஏற்றுக்கொள்வதால் ஆகும்—அதாவது அது குடும்பத்துக்கான கடவுளுடைய ஏற்பாடாகும். (கொலோசெயர் 3:20) இவ்விதமாக கணவனுக்கு அவளுடைய மனமுவந்த கீழ்ப்படிதல் அவளுடைய தேவபக்தியின் வெளிகாட்டாகும்.
“இதற்காகவே புறப்பட்டு வந்தேன்”
15. என்ன குறிப்பிடத்தக்க வழியில் இயேசு தேவபக்தியை வெளிக்காட்டினார்?
15 இயேசு கிறிஸ்து தேவபக்தியை வெளிக்காட்டிய குறிப்பிடத்தக்க வழிகளில் ஒன்று, ‘தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி’த்ததாகும். (லூக்கா 4:43) பொ.ச. 29-ல் அவருடைய முழுக்காட்டுதலைத் தொடர்ந்து இயேசு அடுத்த மூன்றரை ஆண்டுகளை இந்த முழுமுக்கியமான வேலையில் தீவிரமாக ஈடுபடுவதில் செலவழித்தார். “இதற்காகவே புறப்பட்டு வந்தேன்” என்பதாக அவர் விளக்கினார். (மாற்கு 1:38; யோவான் 18:37) ஆனால் இது எவ்விதமாக அவருடைய தேவபக்தியின் வெளிக்காட்டாக இருந்தது?
16, 17. (எ) பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் தீவிரமாக ஈடுபட இயேசுவைத் தூண்டியது என்ன? (பி) இயேசுவின் பிரசங்க மற்றும் கற்பிக்கும் ஊழியம் ஏன் அவருடைய தேவபக்தியின் வெளிக்காட்டாக இருந்தது?
16 நீங்கள் கடவுளை நேசிப்பதாலும் அவருடைய விரும்பத்தக்க குணாதிசயங்களைப் போற்றுவதாலும், தேவபக்தி கடவுளைப் பிரியப்படுத்தும் வகையில் வாழ்வதை உட்படுத்துகிறது என்பதை நினைவுகூருங்கள். அப்படியென்றால், இயேசுவைப் பூமியில் அவருடைய கடைசி வருடங்களை, பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் தீவிரமாக ஈடுபட அவரைத் தூண்டியது என்ன? வெறுமென கடமை அல்லது பொறுப்புணர்ச்சியா? ஜனங்கள் மீது அவர் அக்கறையுடையவராக இருந்தார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. (மத்தேயு 9:35, 36) பரிசுத்த ஆவியால் அவர் அபிஷேகம் பண்ணப்பட்டது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு அவரை நியமித்து பொறுப்பளித்தது என்பதை அவர் முழுமையாக உணர்ந்தார். (லூக்கா 4:16–21) என்றபோதிலும் அவருடைய உள்நோக்கங்கள் இன்னும் ஆழமாகச் சென்றன.
17 “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என்பதாக வெளிப்படையாகவே இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம், அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவின்போது சொன்னார். (யோவான் 14:31) அந்த அன்பு யெகோவாவின் குணாதிசயங்களைப் பற்றி மிக ஆழமான, நெருக்கமான அறிவை அடிப்படையாகக் கொண்டது. (லூக்கா 10:22) ஆழமான போற்றுதலினால் தூண்டப்பட்ட இருதயத்தினால் உந்துவிக்கப்பட்டு இயேசு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சியைக் கண்டார். (சங்கீதம் 40:8) அது அவருக்கு “உணவாக”—உயிர் வாழ்வதற்கு அவசியமானதாக, பிடித்தமானதாக இருந்தது. (யோவான் 4:34) தனிநலனை முதலில் வைப்பதற்குப் பதிலாக “முதலாவது ராஜ்யத்தைத் தேடுவதில்” அவர் பரிபூரண மாதிரியை வைத்தார். (மத்தேயு 6:33) ஆகவே அவர் என்ன செய்தார் அல்லது எவ்வளவு செய்தார் என்பது மாத்திரமல்ல, ஆனால் ஏன் அதைச் செய்தார் என்பதுதானே அவருடைய பிரசங்கிக்கும் மற்றும் கற்பிக்கும் ஊழியத்தை அவருடைய தேவபக்தியின் வெளிக்காட்டாக ஆக்கியது.
18. ஊழியத்தில் கொஞ்சம் பங்கைக் கொண்டிருப்பது ஏன் கட்டாயமாகவே தேவபக்தியின் வெளிக்காட்டாக இல்லை?
18 இந்த விஷயத்தில் நாம் எவ்விதமாக இயேசுவின் “மாதிரி”யை பின்பற்றலாம்? (1 பேதுரு 2:21) “என்னைப் பின்பற்றிவா” என்ற இயேசுவின் அழைப்புக்குச் செவிகொடுக்கும் அனைவருக்கும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் சீஷராக்குவதும் தெய்வீக கட்டளையாக இருக்கிறது. (லூக்கா 18:22; மத்தேயு 24:14; 28:19, 20) இது நற்செய்தியை அறிவிப்பதில் ஏதோ கொஞ்சம் பங்கைக் கொண்டிருப்பதன் மூலம் நாம் தேவபக்தியை நாடுகிறோம் என்பதை அர்த்தப்படுத்துமா? அப்படி அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. ஊழியத்தில் நாம் கடமைக்காக அல்லது அடையாள முறையில் ஈடுபடுவோமேயானால் அல்லது வெறுமென குடும்ப அங்கத்தினர்களை அல்லது மற்றவர்களை பிரியப்படுத்துவதற்காக செய்வோமேயானால் அது ‘தேவபக்தியின் செயலாக’க் கருதப்படாது.—2 பேதுரு 3:11.
19. (எ) ஊழியத்தில் நாம் செய்யும் காரியத்துக்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க வேண்டும்? (பி) கடவுளிடமாக ஆழமாக வேரூன்றிய அன்பினால் நாம் தூண்டப்படுகையில் என்ன விளைவடைகிறது?
19 இயேசுவின் காரியத்தில் இருந்தது போலவே நம்முடைய உள்நோக்கங்கள் ஆழமாகச் செல்ல வேண்டும். இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் [உள்ளான மனிதனின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உள்ளுணர்வுகள்] உன் முழு ஆத்துமாவோடும் [உன் வாழ்க்கையும் முழு ஆளும்] உன் முழு மனதோடும் [உன் அறிவுத் திறமைகள்] உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக.” இதோடுகூட விவேகமுள்ள ஒரு வேதபாரகன் மேலுமாகச் சொன்னதாவது: “இது . . . சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.” (மாற்கு 12:30, 33, 34, NW) ஆகவே நாம் என்ன செய்கிறோம் என்பது மாத்திரமல்ல ஆனால் நாம் ஏன் செய்கிறோம் என்பதும்கூட முக்கியமாக இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு பண்பையும் உட்படுத்துகின்ற, கடவுளிடமாகக் கொண்டுள்ள ஆழமாக வேரூன்றிய அன்பு நாம் ஊழியத்தில் செய்யும் காரியத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்கையில், நாம் வெறுமென அடையாளப் பங்கில் திருப்தியுள்ளவர்களாக இராமல், நம்மால் இயன்றதைச் செய்வதன் மூலம் நம்முடைய தேவபக்தியின் ஆழத்தைக் காண்பிப்பதற்கு நாம் தூண்டப்படுவோம். (2 தீமோத்தேயு 2:15) அதே சமயத்தில் கடவுளிடம் அன்பு நம்முடைய நோக்கமாக இருக்கையில், நாம் குறை கண்டுபிடிக்கிறவர்களாக, மற்றவர்களுடையதோடுகூட நம்முடைய ஊழியத்தை ஒப்பிட்டுப்பார்க்கிறவர்களாக இருக்க மாட்டோம்.—கலாத்தியர் 6:4.
20. தேவபக்தியை நாடுவதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதிலிருந்து நாம் எவ்விதமாக நன்மையடையலாம்?
20 யெகோவா தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தியிருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! இயேசு சொன்ன மற்றும் செய்த காரியங்களை கவனமாகப் படிப்பதன் மூலமும் அவரைப் பின்பற்ற முயற்சி செய்வதன் மூலமும் நாம் தேவபக்தியை முழுஅளவில் வளர்த்துக்கொள்ளவும் வெளிக்காட்டவும் உதவப்படுவோம். ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக தேவபக்தியை நாடுவதில் இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றுகையில், யெகோவா நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்.—1 தீமோத்தேயு 4:7, 8. (w90 3/1)
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான சில உதாரணங்களுக்குப் பின்வரும் பதிவுகளிலிருந்து நாம் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதை சிந்தியுங்கள்: மத்தேயு 8:2, 3; மாற்கு 14:3–9; லூக்கா 21:1–4 மற்றும் யோவான் 11:33–36.
b வயதான பெற்றோரிடமாக தேவபக்தியை அப்பியாசிப்பதில் உட்பட்டிருப்பது என்ன என்பதைப் பற்றிய முழுமையான கலந்தாலோசிப்புக்காக ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 1, 1987 பக்கம் 13–18 பார்க்கவும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ தேவபக்தியை நாடுவதில், நாம் ஏன் இயேசுவின் முன்மாதிரியைச் சிந்திக்க வேண்டும்?
◻ இயேசுவின் முன்மாதிரியால் விளக்கப்பட்ட கனிவு மற்றும் ஆழ்ந்த உணர்ச்சியிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ குடும்ப அங்கத்தினர்களிடமாக நாம் எவ்விதமாக தேவபக்தியை வெளிக்காட்டலாம்?
◻ நம்முடைய ஊழியம் தேவபக்தியின் வெளிக்காட்டாக இருப்பதற்கு நம்முடைய உள்நோக்கம் என்னவாக இருக்கவேண்டும்?
2. தேவபக்தியை நாடுகையில், நாம் ஏன் இயேசுவின் முன்மாதிரியை உற்று கவனிக்க வேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
ஒரு கிறிஸ்தவ தகப்பன் தன் குடும்பத்துக்குப் பொருள் சம்பந்தமாகவும் உணர்ச்சிகள் சம்பந்தமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் தேவையானவற்றை அளிக்கும் பொறுப்புள்ளவனாக இருக்கிறான்
[பக்கம் 23-ன் படம்]
“விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது பேரன் பேர்த்திகளாவது இருந்தால், . . . இவர்கள் தங்கள் பெற்றோருக்கும் பெற்றோரின் பெற்றோருக்கும் பதில் நன்மைகளைச் செய்யக்கடவர்கள்.”