உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 6/1 பக். 32
  • நீங்கள் ஏன் ஆஜராக வேண்டும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் ஏன் ஆஜராக வேண்டும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இதே தகவல்
  • நம்முடைய கொடிய காலங்களுக்கான தெய்வீக போதனையைப் பெற்றுக்கொள்ளுதல்
    விழித்தெழு!—1993
  • “தேவ பயம்”—மாவட்ட மாநாடு விரைவில் வருகிறது
    விழித்தெழு!—1994
  • “சந்தோஷமாய் துதிப்போர்”—யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டுக்கு வருக!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 6/1 பக். 32

நீங்கள் ஏன் ஆஜராக வேண்டும்

உலகெங்கும் உள்ள நகரங்களில் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகளில் நான்கு நாட்கள், பலனளிக்கும் ஆவிக்குரிய போதனையை நீங்கள் பெறுவீர்கள். இந்தியாவில், செப்டம்பர் கடைசி வாரத்தில் துவங்கி ஜனவரி 1994-ன் முதல்வாரம் வரையாக 17 மாநாடுகள், இந்த வருடத்திற்குத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. பொதுவாக, நிகழ்ச்சிநிரல், வியாழக்கிழமை பிற்பகல் 1:20-க்கு ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை 4:15-க்கு முடிவடையும். சென்னை மாநாடு ஒரு விதிவிலக்காக இருக்கும்; அங்கு நிகழ்ச்சிநிரல் பிற்பகல் 1:00 மணிக்கு ஆரம்பித்து, இடையில் ஒரு மணிநேர இடைவேளையுடன் இரவு 7:00 மணிக்குமேல் வரையாகத் தொடரும். இந்தச் சந்தோஷமான நிகழ்ச்சிக்கு தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பும்படி உதவப்பட்ட மிஷனரிகளின் அறிக்கைகள், உலகின் மற்ற பாகங்களிலுள்ள சில மாநாடுகளின் சிறந்த அம்சமாக இருக்கும்.

நீங்கள் வயதானவராக அல்லது இளைஞராக இருந்தாலும்—ஒரு கணவன், மனைவி, தகப்பன், தாய், பருவவயதினர், அல்லது சிறுவராக—உங்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு தெளிவான, ஏற்றுக்கொள்ளும் முறையில் அளிக்கப்படும் போதனையைப் பெறுவீர்கள். உதாரணமாக, இன்று அநேகர் கேட்கின்றனர், வாழ்க்கையின் நோக்கம் என்ன? வெள்ளிக்கிழமை காலையில், இந்தக் கேள்வி கலந்தாலோசிக்கப்படுவதைக் கேட்பீர்கள்; மற்றவர்கள் இந்தப் பொருளைப் புரிந்துகொள்வதற்கு உதவும்படியாக நீங்கள் பெறும் தகவலைக்கேட்டு சந்தோஷப்படுவீர்கள்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சி, “திருமணத்தை ஒரு நிலைத்திருக்கும் இணைப்பாக்குதல்,” “உங்கள் குடும்ப இரட்சிப்புக்குக் கடினமாக உழையுங்கள்,” “பெற்றோரே—உங்கள் பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட கவனம் தேவை,” ஆகிய பகுதிகள் சிந்திக்கப்படும். இவற்றை உடனே பின்தொடர்ந்து, இளைஞர் எதிர்ப்படும் பிரச்னைகளையும் அவற்றை எவ்வாறு அவர்கள் சமாளிக்க முடியும் என்பதற்கும் குறிப்பாக கவனம் செலுத்தப்படும். இப்பொழுதே தங்கள் சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர் என்ற தலைப்பை உடைய நவீன நாளைய நாடகத்தால் அவர்கள் உற்சாகப்படுத்தப்படுவர்.

சனிக்கிழமை நிகழ்ச்சிநிரல், கடைசி நாட்களைப்பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தை அழுத்திக்காண்பிக்கும்; குறிப்பாக, “உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,” என்ற அவருடைய வார்த்தைகள் சிந்திக்கப்படும். (மத்தேயு 24:29) அந்த “உபத்திரவம்” எப்போது நடைபெறும் என்பதைக்குறித்த கலந்தாலோசிப்பை நீங்கள் கேட்க விரும்புவீர்கள். சனிக்கிழமை நிகழ்ச்சிநிரல், நவீன நாட்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய பதிவைப்பற்றியும் விமர்சித்து அவர்கள் எதை நிறைவேற்றி இருக்கின்றனர் என்பதைக் காண்பிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, மோசம்போகாதிருங்கள் அல்லது கடவுளைப் பரியாசம் செய்யாதிருங்கள் என்ற தலைப்பை உடைய மற்றொரு நாடகம், இன்றைய பிரபல வீடியோக்கள் மற்றும் இசை, கிறிஸ்தவ உண்மைத்தவறாமைக்கு எப்படி ஒரு சவாலாக இருக்கிறது என்பதை விளக்கும். பிற்பகலில் “நம்முடைய கொடிய காலங்களுக்கு உதவக்கூடிய போதனை” என்ற பொருளைப் பற்றிய பொதுப் பேச்சு இருக்கும். “தெய்வீக போதனையைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருங்கள்” என்ற அறிவுரையுடன் நிகழ்ச்சிநிரல் முடிவடையும்.

நிச்சயமாக, நான்கு நாட்களும் ஆஜராய் இருப்பதன்மூலம் நீங்கள் நல்ல பயனடைவீர்கள். உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு, உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்