நம்முடைய கொடிய காலங்களுக்கான தெய்வீக போதனையைப் பெற்றுக்கொள்ளுதல்
அது உண்மையில் உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்
யெகோவாவின் சாட்சிகளுடைய “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடு ஒன்றிற்கு ஆஜராயிருப்பதன் மூலம் அதை நீங்கள் பெறமுடியும். இந்தக் கோடைகாலத்தில் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் லட்சக்கணக்கானோர் ஆஜராகியிருப்பர். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய மாகாணங்களில் மட்டும் இதைப்போன்ற 150-க்கும் அதிகமான நான்கு-நாள் மாநாடுகள் நடத்தப்படும்.
நீங்கள் வயதானவராக அல்லது இளைஞராக இருந்தாலும்—ஒரு கணவன், மனைவி, தகப்பன், தாய், பருவவயதினர், அல்லது சிறுவராக—உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு தெளிவான, ஏற்றுக்கொள்ளும் முறையில் அளிக்கப்படும் போதனையைப் பெறுவீர்கள். “திருமணத்தை ஒரு நிலைத்திருக்கும் இணைப்பாக்குதல்,” “உங்கள் குடும்ப இரட்சிப்புக்குக் கடினமாக உழையுங்கள்,” மற்றும் “பெற்றோரே—உங்கள் பிள்ளைகளுக்கு விசேஷித்தக் கவனம் தேவை,” என்பவை நிகழ்ச்சியில் சிறப்பித்துக் காண்பிக்கப்படும் ஒரு சில பொருட்கள்.
நம்முடைய கொடிய காலங்களின்போது இளைஞர் எதிர்ப்படும் பிரச்னைகளையும் அவற்றை எவ்வாறு அவர்கள் சமாளிக்க முடியும் என்பதற்கும் குறிப்பாக கவனம் செலுத்தப்படும். இப்பொழுதே தங்கள் சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர் என்ற தலைப்பை உடைய நவீன நாளைய நாடகத்தால் அவர்கள் உற்சாகப்படுத்தப்படுவர். மோசம்போகாதிருங்கள் அல்லது கடவுளைப் பரியாசம் செய்யாதிருங்கள் என்ற தலைப்பை உடைய நன்கு பயிற்சி செய்யப்பட்ட மற்றொரு நாடகம், இன்றைய பிரபல வீடியோக்கள் மற்றும் இசையினால் கிறிஸ்தவ இளைஞர் எதிர்ப்படும் சவாலை விளக்கும்.
உண்மையிலேயே, நாம் கொடிய காலங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,” என்று இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:29) அந்த “உபத்திரவம்” எப்போது நடைபெறுகிறது, மேலும் எப்போது சூரியன் அந்தகாரப்படுகிறது என்பதற்கான அத்தாட்சியை இந்த மாநாட்டு நிகழ்ச்சி கலந்தாலோசிக்கும்.
இந்தக் கொடிய காலங்களில், வாழ்க்கையின் நோக்கமென்ன என்று அநேகர் கேட்கின்றனர். இந்தப் பொருள் நன்கு ஆழ்ந்து ஆராயப்படும். இந்தப் பொருளின்மீது நீங்கள் பெறப்போவதைக் குறித்து திளைப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நிகழ்ச்சியின் மற்றொரு பாகம், நவீன நாட்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய பதிவைப்பற்றி விமர்சித்து அவர்கள் எதை நிறைவேற்றி இருக்கின்றனர் என்பதைக் காண்பிக்கும்.
மாநாட்டின் இறுதி நாளில், பொதுப் பேச்சு “கையாளுவதற்குக் கடினமான நம்முடைய கொடிய காலங்களுக்கு உதவியளிக்கும் போதனை” என்ற பொருளை அழுத்திக்காட்டும். “தெய்வீக போதனையை விடாமல் பற்றியிருங்கள்” என்ற அறிவுரையுடன் நிகழ்ச்சிநிரல் முடிவடையும்.
நிச்சயமாக, நான்கு நாட்களும் ஆஜராய் இருப்பதன்மூலம் நீங்கள் நல்ல பயனடைவீர்கள்! நீங்கள் இதில் ஆஜராயிருப்பதற்கு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு, உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.