உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 8/15 பக். 31
  • “பாராட்டத்தக்க” ஒரு வேலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பாராட்டத்தக்க” ஒரு வேலை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 8/15 பக். 31

“பாராட்டத்தக்க” ஒரு வேலை

அப்போஸ்தலன் பேதுரு உடன் கிறிஸ்தவர்களிடம் பின்வருமாறு புத்திமதி கூறினார்: “புறஜாதிகளுக்கு மத்தியில் உங்கள் நல்நடத்தையை காத்துக்கொள்ளுங்கள்; அவர்கள் உங்களை அக்கிரமக்காரர் என்று சொல்லும்போது உங்கள் நற்கிரியைகளுக்கு அவர்களே கண்கண்ட சாட்சிகளாக இருப்பதால் அவற்றினிமித்தம் தேவனுடைய ஆய்வின் நாளில் தேவனை மகிமைப்படுத்துவார்கள்.” (1 பேதுரு 2:12, NW) இத்தாலியில், யெகோவாவின் சாட்சிகள் பல ஆண்டுகளாக தாங்கள் நல்நடத்தையுள்ளவர்கள் என்பதை பொது இடங்களில் நிரூபித்திருக்கின்றனர். “வீட்டுக் கூரையின் மேலிருந்து பிரசங்கம் செய்யுங்கள்” என்ற இயேசுவின் போதனையில் பொதிந்திருக்கும் கருத்துக்கு இசைய, அவர்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கைகளை எல்லாருக்கும் முன்பாக வெளியரங்கமாய் செய்கின்றனர். (மத்தேயு 10:27, NW; யோவான் 18:20) ஒரு இத்தாலிய வழக்குரைஞரும் பாதிரியாரும், யெகோவாவின் சாட்சிகள் “போலி மத உட்பிரிவை” சேர்ந்தவர்கள், “ஜனங்களை பொறியில் சிக்கவைக்கும் இரகசிய ஸ்தாபனத்தை” சேர்ந்தவர்கள் என அவர்களுக்கெதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். இப்படிப்பட்ட அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

முதலில் நடந்த வழக்கு விசாரணையில், அந்த வழக்குரைஞரும் பாதிரியாரும் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்பதாக கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் ஜூலை 17, 1997-ல் வெனிஸின் அப்பீல் கோர்ட் முதல் கோர்ட்டின் தீர்மானத்தை தன் அதிகாரத்தால் செல்லாததாக்கி பிரதிவாதிகள் இருவரும் குற்றவாளிகளே என்று முடிவு செய்தது. அப்பீல் கோர்ட் பின்வருமாறு குறிப்பிட்டது: “இப்போது விவாதத்தில் இருக்கும் பிரசுரிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளிலும், ‘யெகோவாவின் சாட்சிகளுடைய’ மதத்தை சேர்ந்தோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில், வார்த்தைகளும் சொற்றொடர்களும் நிச்சயமாய் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளின் நோக்கம் பொதுமக்களின் முன்னிலையில் இம்மதத்தாரை அவமதிப்பதே என்பது தெளிவாக தெரிகிறது.” குறிப்பிடப்பட்ட கட்டுரைகள் “அறிக்கை செய்வதற்கும், விமர்சிப்பதற்குமான சட்டவரம்பை மீறிவிட்டன” என்பதாக அந்தக் கோர்ட் அறிவித்தது. அவதூறு செய்த அந்த இரண்டு நபர்களுக்கும் கோர்ட் அபராதம் விதித்தது. அதோடு சாட்சிகள் கட்டிய கோர்ட் செலவுகள், வழக்கு செலவுகள் ஆகியவற்றை அவர்கள் திருப்பித்தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

எழுதப்பட்ட தீர்ப்புரையில் வெனிஸின் அப்பீல் கோர்ட் இவ்விதம் குறிப்பிட்டது: “இத்தாலியின் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள எல்லா உரிமைகளையும் சமநிலையுடன் செயல்படுத்தி அவற்றை பாதுகாப்பதன் மூலமே சகிப்புத்தன்மையற்ற முறைகளையும், மதவெறியையும் தடுக்க முடியும்.” யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் இரகசியமானதுமல்ல, அவர்களது மதம் ஒரு போலி மதமுமல்ல என்பதாக அந்தத் தீர்ப்பு ஒப்புக்கொள்கிறது. “யெகோவாவின் சாட்சிகளை இரகசிய ஸ்தாபனங்களுடன் இணைத்து பேசுவது வரலாற்றுப்பூர்வமான உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. ஏனெனில் இந்த மதம் அநேக பட்டணங்களில் இருக்கிறது; மதமாற்றம் செய்வதற்காக இதன் அங்கத்தினர் எடுக்கும் நடவடிக்கைகள், முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை அல்லது வேறு ஏதாவது விடுமுறை நாட்களில் செய்பவை நன்கு அறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் பிரசங்கிக்கும் கொள்கையைப் பற்றி ஒருவர் என்ன நினைத்தாலும் சரி, அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்க ஒரு வேலையே.” ஆகவே இத்தாலியில் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்க வேலையில் வைராக்கியமாக இருப்பதும், அவர்களது நல்நடத்தையும் அவர்களுக்கு எதிராக எழும்பிய தப்பெண்ணத்தை தகர்த்தெறிய உதவியது.—மத்தேயு 5:14-16; 1 பேதுரு 2:15.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்