உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 8/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • நியாயத்தீர்ப்பு நாள்—அது என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள்—அதன் மகிழ்ச்சியுள்ள பலன்!
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • ‘நான் தெரிந்தெடுத்தவர், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவர்’
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • யெகோவாவை பின்பற்றி நீதியிலும் நியாயத்திலும் நடவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 8/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீப காவற்கோபுர இதழ்களை நீங்கள் கவனமாக சிந்தித்துப் பார்த்தீர்களா? அப்படியானால், பின்வரும் விஷயங்களை நினைவுபடுத்திப் பார்ப்பது ஆர்வமூட்டுவதாக இருப்பதைக் காண்பீர்கள்.

◻ முன்விதித்தல் கோட்பாடு ஏன் நியாயமற்றது?

ஆதாம் பாவம் செய்வதை கடவுள் முன்னறிந்து தீர்ப்புக்கூறியிருந்தால், மனிதனைப் படைத்தபோது பாவத்திற்கு யெகோவாவே மூலகாரணராக ஆகியிருப்பார்; மேலும் மனிதனுடைய எல்லா துன்மார்க்கத்திற்கும் வேதனைக்கும் அவரே பொறுப்பாளியாக இருந்திருப்பார். யெகோவா, துன்மார்க்கத்தை வெறுக்கிற அன்பின் கடவுள் என்ற உண்மையோடு இதை ஒத்திசைவிக்க முடியாது. (சங்கீதம் 33:5; நீதிமொழிகள் 15:9; 1 யோவான் 4:8)—4/15, பக்கங்கள் 7, 8.

◻ ஏசாயா 2:2-4-ன் நிறைவேற்றமாக, பல தேசங்களிலிருந்து வரும் மக்கள் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கு திரண்டு வருகையில், ‘யுத்தத்தைக் கற்றுக்கொள்வதிலிருந்தும்கூட’ விலகியிருக்கிறார்கள்; ஏனெனில் கடவுளுடைய பரலோக சேனையின் பாதுகாப்பில் தங்களுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்; அந்தச் சேனை, சமாதானத்தின் சத்துருக்கள் அனைவரையும் அழிப்பதற்கு தயாராக உள்ளது.—4/15, பக்கம் 30.

◻ யோவேல் 3:10, 11-ல் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய வல்லமையுள்ள ஆட்கள் யார்?

பைபிளில் சுமார் 280 தடவை, “சேனைகளின் யெகோவா” என்று மெய் தேவன் அழைக்கப்படுகிறார். (2 இராஜாக்கள் 3:14, NW) இந்தச் சேனைகள், யெகோவாவின் கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமாயிருக்கும் பரலோகத்திலுள்ள வல்லமைவாய்ந்த தேவதூதர்கள்.—5/1, பக்கங்கள் 23.

◻ யோபுக்கு எதிராக பாவம் செய்தவர்களுக்காக அவர் ஜெபிக்கும்படி யெகோவா கேட்டதிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?

(யோபு 42:8) யோபு ஆரோக்கியமான நிலைக்கு மீண்டும் வருவதற்கு முன்பு, அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களின் சார்பாக ஜெபிக்கும்படி யெகோவா கேட்டார். நம்முடைய பாவம் மன்னிக்கப்படுவதற்கு முன்பு, நமக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை நாம் மன்னிக்கும்படி யெகோவா கேட்கிறார் என்பதை இது காட்டுகிறது. (மத்தேயு 6:12; எபேசியர் 4:32)—5/1, பக்கம் 31.

◻ “பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” என்று சொன்னபோது யாக்கோபு எதை அர்த்தப்படுத்தினார்?

(யாக்கோபு 1:4) சகிப்புத்தன்மை செய்ய வேண்டிய ஒரு ‘கிரியை’ உள்ளது. எல்லா அம்சங்களிலும் நம்மை முழுமையாக்குவதே அதன் வேலை. ஆகையால், சோதனைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேதப்பூர்வமற்ற முறையை பயன்படுத்தாமல் அதன் போக்கை முழுமையாக செய்ய அனுமதிப்பதன் மூலம், நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு புடமிடப்படுகிறது.—5/15, பக்கம் 16.

◻ மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடவுள் ஏன் நெடுங்காலம் காத்திருக்கிறார்?

காலத்தைக் குறித்ததில் யெகோவாவின் நோக்குநிலை நம்முடைய நோக்குநிலையிலிருந்து வித்தியாசப்படுகிறது. நித்தியமான தேவனுக்கு, ஆதாமின் சிருஷ்டிப்பிலிருந்து இப்பொழுதுவரை உள்ள காலப்பகுதி ஒரு வாரத்திற்கும் குறைவானதே. (2 பேதுரு 3:8) காலத்தைப் பற்றி நம்முடைய நோக்குநிலை என்னவாக இருந்தாலும்சரி, கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும் யெகோவாவின் நியாயநிரூபண நாளுக்கு அருகில் நம்மை கொண்டுவருகிறது.—6/1, பக்கங்கள் 5, 6.

◻ யெகோவாவின் சாட்சிகளை உந்துவிப்பது எது?

யெகோவாவின் போதனை தனிச்சிறப்புமிக்க மக்களை உருவாக்கியிருக்கிறது; ஒருவருக்கொருவரும் தங்களைப் போல அயலாரையும் நேசிக்க அவர்களுக்கு கற்பித்திருக்கிறது. (ஏசாயா 54:13) பொதுமக்களுடைய அக்கறையின்மை மற்றும் எதிர்ப்பின் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கிக்கும்படி யெகோவாவின் சாட்சிகளை உந்துவிப்பது அன்பே. (மத்தேயு 22:36-40; 1 கொரிந்தியர் 13:1-8)—6/15, பக்கம் 20.

◻ “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துவது என்ன?

(லூக்கா 13:24) போராடுவதை, நம்மையே முழுமையாக ஈடுபடுத்துவதை இயேசுவின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன. தங்களுடைய சொந்த வசதிக்கேற்ப, தாங்கள் விரும்பும் எளிதான வேகத்தில் சிலர் ‘உட்பிரவேசிக்க’ வகைதேடலாம் என்பதையும் அவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் என்னை ஊக்கமாயும் சுறுசுறுப்பாயும் ஈடுபடுத்துகிறேனா?’—6/15, பக்கம் 31.

◻ உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் எவ்வாறு “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே . . . தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படை”வார்கள்?

(வெளிப்படுத்துதல் 20:12) இந்தச் சுருள்கள் அவர்களுடைய கடந்தகால கிரியைகளைப் பற்றிய பதிவு அல்ல; அவர்கள் மரித்தபோதே, தங்களுடைய வாழ்நாட்காலத்தில் செய்த பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். (ரோமர் 6:7, 23) இருப்பினும், உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதர்கள் இன்னும் ஆதாமிய பாவத்தில் இருப்பார்கள். அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் பலியிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு எல்லாரும் பின்பற்ற வேண்டிய தெய்வீக வழிநடத்துதல்கள் இந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.—7/1, பக்கம் 22.

◻ நல்ல அயலானாகிய சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமையில் நமக்கு என்ன பாடங்கள் உள்ளன?

(லூக்கா 10:30-37) உண்மையிலேயே நேர்மையான மனிதன், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறவனாக மட்டுமல்ல, அவருடைய பண்புகளைப் பின்பற்றுகிறவனாகவும் இருக்கிறான் என்பதை இயேசுவின் உவமை காண்பிக்கிறது. (எபேசியர் 5:1) அயலாருக்கு காண்பிக்கும் அன்பு எல்லா விதமான தேசிய, கலாச்சார, மத தடைகளையும் தாண்டி வரக்கூடிய ஒன்று என்பதையும் இது காட்டுகிறது. (கலாத்தியர் 6:10)—7/1, பக்கம் 31.

◻ உங்களுடைய பிள்ளைகளை அறிந்து, பெற்றோருக்குரிய வழிநடத்துதல் அளிக்கக்கூடிய மூன்று அம்சங்கள் யாவை?

(1) தகுந்த உலகப்பிரகாரமான வேலையைத் தேர்ந்தெடுக்க உங்களுடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்; (2) பள்ளியிலும் வேலை செய்யுமிடத்திலும் வரக்கூடிய உணர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தயார்படுத்துங்கள்; (3) தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதை கற்பியுங்கள்.—7/15, பக்கம் 4.

◻ என்ன நோக்கத்திற்காக கடவுள் ‘ஏழாம் நாளில்’ ஓய்ந்திருந்தார்?

(ஆதியாகமம் 2:1-3) களைப்படைந்ததால் கடவுள் ஓய்ந்திருக்கவில்லை. அதற்கு மாறாக, தம்முடைய மகிமைக்கும் கனத்திற்குமாக தம்முடைய கைவேலை முன்னேறவும் முழு மகிமைக்கு வரவும் பூமிக்குரிய வேலையை செய்வதை அவர் நிறுத்தியிருந்தார்.—7/15, பக்கம் 18.

◻ நாம் நீதியை காண்பிக்கக்கூடிய மூன்று வழிகள் யாவை?

முதலாவதாக, நாம் கடவுளுடைய ஒழுக்கத் தராதரங்களுக்கு இசைவாக நடக்க வேண்டும். (ஏசாயா 1:17) இரண்டாவதாக, யெகோவா நம்மை நடத்தும்படி நாம் விரும்புகிற முறையில் மற்றவர்களையும் நடத்தும்போது நாம் நீதியை காண்பிக்கிறோம். (சங்கீதம் 130:3, 4) மூன்றாவதாக, பிரசங்க வேலையில் நாம் ஊக்கமாக ஈடுபடுகையில் தேவ நீதியை காண்பிக்கிறோம். (நீதிமொழிகள் 3:27)—8/1, பக்கங்கள் 14, 15.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்