உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 12/1 பக். 25
  • நமிபியாவில் ராஜ்ய அதிகரிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நமிபியாவில் ராஜ்ய அதிகரிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • மிஷனரிகளாக சென்ற இடமே எங்கள் வீடானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • பவுலும் பர்னபாவும் தொலைதூர இடங்களில் சீஷர்களை உருவாக்கினார்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 12/1 பக். 25

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

நமிபியாவில் ராஜ்ய அதிகரிப்பு

காலம் 1920-ன் பிற்பகுதி. முதல் முறையாக நமிபியாவில் ராஜ்ய செய்தி சென்றெட்டியது. அன்று முதல் நேர்மையான நூற்றுக்கணக்கானோர், கடவுள் தரும் இரட்சிப்பின் செய்தியை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் கடவுளுக்கு விருப்பமுள்ளவர்கள். இவர்களை கடவுள் தமது மந்தைக்குள் எப்படி கூட்டிச்சேர்க்கிறார் என்பதை அறிய பின்வரும் அனுபவங்களை படியுங்கள்.—ஆகாய் 2:7.

◻ போலஸ், வடகிழக்கு நமிபியாவில் வசிக்கும் ஏழை விவசாயி. ஒருமுறை இவர் நமிபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் சென்றார். அங்கே முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தார். இதுதான் சத்தியம் என்பதை போலஸ் உடனே புரிந்துகொண்டார். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டு, வீடு திரும்பினார். ரூண்டூ என்ற டவுன்தான் இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள டவுன். ஒருமுறை இவர் அங்கே சென்றபோது யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு போனார். தன்னை வந்து சந்திக்கும்படி அவர்களிடம் கெஞ்சிக்கேட்டார்.

ஆனால் போலஸ் இருந்த இடம் ரொம்ப தூரத்தில் இருந்ததால், வாராவாரம் வந்து சாட்சிகளால் அவருக்கு பைபிள் படிப்பு நடத்த முடியவில்லை. ஆனாலும், போலஸ் மனம் தளரவில்லை. அவராகவே பைபிளை படிக்க ஆரம்பித்தார். அதோடு, படித்த விஷயங்களை மற்றவர்களுக்கு உற்சாகமாக பிரசங்கித்தார். கொஞ்ச காலம் ஆனதும், பைபிள் படிப்புக்காக ஒன்று சேர்ந்தவர்கள் ஒரு சிறு தொகுதியாக உருவானார்கள். ரூண்டூவில் யெகோவாவின் சாட்சிகள் மாநாடு நடத்தவிருக்கிறார்கள் என்ற செய்தி ரேடியோ மூலம் இந்தத் தொகுதியினர் காதில் விழுந்ததுதான் தாமதம், எப்படியும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தங்களிடமிருந்த கொஞ்சநஞ்ச காசையெல்லாம் திரட்டி, வண்டியை ஏற்பாடு செய்தார்கள்.

இவர்கள் முதல் முறையாக யெகோவாவின் சாட்சிகளோடு கலந்துகொண்டபோது, ஆனந்தத்தில் திக்குமுக்காடி போனார்கள்! இவர்களை தகுதிபெற்ற சகோதரர்கள் தொடர்ந்துபோய் சந்திக்க, உடனே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது, போலஸ் வசிக்கும் கிராமத்தில் ஆறு பிரஸ்தாபிகள் உள்ளனர்.

◻ யாரோ யெகோவாவின் சாட்சிகளை திட்டிக்கொண்டிருந்தபோது, யெகோவா என்ற பெயர் யோஹன்னாவின் காதில் விழுந்தது. உடனே, அவர் யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவரை பற்றிக்கொண்டது. இவர் தன் நினைவு அலைகளில் தொடர்கிறார்: “யெகோவா என்ற பெயரை கேட்டது முதல், அவர் யாராக இருக்கும் என்று யோசித்தேன். அவரை தெரிந்துகொள்ள முடிவுசெய்தேன். அச்சமயத்தில், நான் என் கணவரோடு நமிபியாவின் கடலோர பகுதியான வால்விஸ் பே-ல் வசித்துவந்தேன். ஒருமுறை நாங்கள் டவுனுக்கு சென்ற போது, சாட்சிகள் சிலர் காவற்கோபுர பத்திரிகைகளை தெருவில் விநியோகம் செய்துகொண்டிருந்தார்கள். நானும் ஒரு பத்திரிகையை பெற்றுக்கொண்டேன். அவர்களை என் வீட்டிற்கு வந்து பைபிள் படிப்பு நடத்தும்படி அழைத்தேன். ஏனென்றால் கேட்டுத்தெரிந்துகொள்ள என் மனதில் ஏராளமான கேள்விகள் இருந்தன. ஆனால், அவர்களுடைய வண்டி ரிப்பேர் ஆகிவிட்டதால் வர இயலாது என்று சொன்னதும், எனக்கு அழுகை அழுகையா வந்தது. கொஞ்சநாளில் என் கணவரும் இறந்துவிட்டார். பிறகு நான் கீத்ஸ்மன்ஷுப் என்ற இடத்திற்கு குடிவந்தேன். இவ்விடத்தில் ஒரு விசேஷ பயனியர் (முழுநேர சுவிசேஷகர்) நியமிக்கப்பட்டிருந்தார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். இப்புத்தகத்தில் உள்ளதெல்லாம் சத்தியம் என்பது படிக்க துவங்கியவுடனே தெரிந்துவிட்டது.

“இதுவெல்லாம் நடந்து முடிந்தபின், ஊழியத்திற்கு வரும்படி என்னையும் அழைத்தார்கள். ஆனால் முன்பின் தெரியாதவர்களிடம் போய் பேச வேண்டும் என்றதும் நான் பயத்தால் ஆடிப்போனேன். வீட்டுக்கு வீடு ஊழியத்தில், ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போவதற்குள், ‘இப்படி போய் பிரசங்கிப்பதைவிட, நான் செத்துப்போவதே மேல்’ என்று யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். முதல் தடவையா நான் தெரு ஊழியம் செய்தபோது, யாரும் என்னை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு குறுகிய சந்தில் போய் ஒளிந்துகொண்டேன். பிறகு, மெல்ல தைரியத்தை வரவழைத்து, தெருவில் போகிறவர்களுக்கும் வருகிறவர்களுக்கும் பத்திரிகைகளை தூக்கிப்பிடித்து காட்டினேன். பிறகுதான், என்னால் ஏதோ கொஞ்சம் பேச முடிந்தது. அன்று, யெகோவாவின் உதவியால், நிறையப் பேருக்கு பைபிள் நம்பிக்கையை எடுத்துச் சொன்னேன்.

“இது 12 வருஷத்துக்கு முன்னால நடந்தது. ஏழையா இருந்தாலும், பயனியர் செய்றத பொக்கிஷமா நினைக்கிறேன். எப்பவும், மத்தவங்ககிட்ட ராஜ்ய சத்தியத்த சொல்றப்ப, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்