உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 2/1 பக். 3
  • ஆபத்தான வாழ்க்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆபத்தான வாழ்க்கை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இதே தகவல்
  • ஆபத்தான உலகில் பாதுகாப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • பலன்தரும் பதில்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
  • நல்ல ஆரோக்கியம் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 2/1 பக். 3

ஆபத்தான வாழ்க்கை

“உறங்குவது உட்பட, அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் ஆபத்தில்லாதது என்று ஒன்றுமே கிடையாது.”​—⁠டிஸ்கவர் பத்திரிகை.

வாழ்க்கை என்பது கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இடத்தில் நடமாடுவதற்கு சமம் என கூறப்படுகிறது. ஏனென்றால் காயமோ மரணமோ எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் நேரிடலாம், அதுவும் பெரும்பாலும் எந்த அபாய அறிவிப்பும் இல்லாமலேயே ஏற்படலாம். ஆபத்தை உண்டாக்கும் அம்சங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. இவற்றுள் சாலை விபத்துக்கள், உள்நாட்டு போர்கள், பஞ்சம், எய்ட்ஸ், புற்றுநோய், இருதய நோய் என பற்பல அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உதாரணமாக, வட ஆப்பிரிக்காவில் நெ. 1 கொலையாளி: எய்ட்ஸ். சமீபத்தில் “22 லட்சம் பேரை இந்நோய் பலி வாங்கிவிட்டது, இதுவரை ஆப்பிரிக்காவில் நடந்த உள்நாட்டு போர்களில் இறந்தவர்களைவிட இது 10 மடங்கு அதிகம்” என சொல்கிறது யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட்.

இதற்கிடையில், வாழ்நாளை நீடிப்பதற்கும் நோயின் பாதிப்பைக் குறைப்பதற்கும் இந்த உலகம் கோடி கோடியாக பணத்தைக் கொட்டுகிறது. அறி(ள)வோடு சாப்பிடுதல், குடித்தல், தேகப் பயிற்சி செய்தல் போன்ற விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது ஓரளவு நல்ல பலன்களை கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சத்திலும் பாதுகாப்பாக, பயமில்லாமல் வாழ உதவும் நம்பகமான தகவல் மூலம் ஒன்று இருக்கிறது. அந்தத் தகவல் மூலமே பைபிள். நம்முடைய சுகத்திற்கும் நலத்திற்கும் உதவும் பலவகை வழிகாட்டு குறிப்புகள் அதில்

அடங்கியுள்ளன. பைபிள் எல்லா பிரச்சினைகளையும் விலாவாரியாக அலசுவதில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், அது மிகச் சிறந்த நியமங்களை தருகிறது; உணவு பழக்கங்கள், உடல் ஆரோக்கியம், மனோபாவம், செக்ஸ், மதுபானம், புகையிலை, போதை மருந்துகள், இன்னும் எண்ணற்ற விஷயங்களுக்கு நல்வழிகாட்டியாக செயல்படுகிறது.

பணப் பிரச்சினைகளாலும் அநேகருக்கு வாழ்க்கையே பெரும் போராட்டம்தான். இந்த அம்சத்திலும் பைபிள் நமக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. பணத்தைப் பற்றிய ஞானமான கண்ணோட்டத்தை அளித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்கிறது. அதோடு, எப்படி சிறந்த தொழிலாளியாக அல்லது சிறந்த முதலாளியாக இருப்பது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. சுருக்கமாக சொன்னால், பைபிள் ஒப்பற்ற வழிகாட்டி. அது, பண விஷயத்திற்கும் உடல் நலத்திற்கும் மட்டுமல்ல, உயிருக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இன்று பைபிள் எந்தளவுக்கு நடைமுறையானது என்பதை அலசிப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால் தயவுசெய்து இந்தப் பக்கத்தைப் புரட்டி மேலும் படியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்