உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 8/15 பக். 31
  • அவர் தயவை சிநேகித்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவர் தயவை சிநேகித்தார்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 8/15 பக். 31

அவர் தயவை சிநேகித்தார்

மில்டன் ஜி. ஹென்ஷல் என்பவர் பல ஆண்டுகள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் அங்கத்தினராக இருந்தவர். மார்ச் 22, 2003 சனிக்கிழமை அன்று அவர் தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தார். அப்போது அவருக்கு 82 வயது.

மில்டன் ஹென்ஷல் தன் வாலிப வயதில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகக்தின் அங்கத்தினராக சேர்ந்தார். அங்கே 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக உண்மையோடு சேவை புரிந்தார். அவர், நன்கு சீர்தூக்கிப் பார்க்கும் திறமை படைத்தவர், ராஜ்ய பிரசங்க வேலையில் உள்ளப்பூர்வமான ஆர்வம் மிக்கவர் என்று விரைவிலேயே பெயரெடுத்தார். 1939-⁠ல் அவர் என். எச். நார் என்ற சகோதரரின் செயலரானார். சகோதரர் என். எச். நார் அப்போது, புரூக்ளினில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய அச்சகத்தின் கண்காணியாக இருந்தார். 1942-⁠ல் சகோதரர் நார், உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது, சகோதரர் ஹென்ஷலை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார். 1956-⁠ல் லூஸில் பென்னட் என்பவரை சகோதரர் ஹென்ஷல் மணந்தார். அதன் பிறகு தங்கள் வாழ்க்கையில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களை அவர்கள் இருவருமாய் பகிர்ந்து கொண்டனர்.

1977-⁠ல் சகோதரர் நார் மரிக்கும் வரையில் சகோதரர் ஹென்ஷல் அவரோடு கூடவே பணி புரிந்தார். உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளை முக்கியமாக மிஷனரிகளையும் கிளை அலுவலக பணியாளர்களயும் சந்தித்து உற்சாகப்படுத்துவதற்காக சகோதரர் நாருடன் சகோதரர் ஹென்ஷல் அடிக்கடி 150-⁠க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இத்தகைய பயணங்கள் அதிக களைப்பை ஏற்படுத்துவதாக, சில சமயங்களில் ஆபத்தாகவும்கூட இருந்தன. 1963-⁠ல், லைபீரியாவில் ஒரு மாநாட்டுக்கு சென்ற போது தேசப்பற்று நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மறுத்ததற்காக சகோதரர் ஹென்ஷல் பயங்கரமாக துன்புறுத்தப்பட்டார்.a சகோதரர் ஹென்ஷல் அஞ்சா நெஞ்சம் மிக்கவர்; ஆகவே சில மாதங்களுக்கு பின்பு, அவர் லைபீரியாவின் பிரஸிடென்டை சந்தித்து அங்குள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிக மத சுதந்திரம் அளிப்பதைப் பற்றி பேசுவதற்கு அங்கு மறுபடியும் சென்றார்.

கஷ்டமான பிரச்சினைகளையும் சவால்களையும் கையாளுவதில் அவர் எதார்த்தமானவர், வளைந்துகொடுப்பவர், நியாயமானவர் என பெயர் பெற்றிருந்தார். முக்கியமாக அவருடைய ஒழுங்கு, அடக்கம், நகைச்சுவை உணர்வு இவையெல்லாம் அவரது நண்பர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு அபார ஞாபக சக்தி இருந்ததால் உலகின் மூலை முடுக்கிலுள்ள மிஷனரிகளை சந்திக்கையில் அவர்களுடைய பெயர்களை டக் டக்கென்று சொல்லிவிடுவார்; அதோடு, அவர்களுடைய பாஷையில் அவருக்கு தெரிந்த ஓரிரு வார்த்தைகளையும் தமாஷான ஒரு சிலேடையையும் மலர்ந்த முகத்துடன் சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்துவார்.

நாம் “தயவை சிநேகிக்க” (NW) வேண்டுமென யெகோவா தேவன் விரும்புவதாக மீகா 6:8 நம்மை நினைவுபடுத்துகிறது. இந்த விஷயத்தில் மில்டன் ஹென்ஷல் வைத்த மாதிரிதான் நம் நினைவுக்கு வரும். தலைக்கு மேல் வேலை இருந்தபோதிலும், அவர் அணுகத்தக்கவராகவும் மென்மையானவராகவும் அன்பானவராகவும் இருந்தார். “என்ன செய்வதென்று குழப்பமாக இருந்தால், தயவான காரியம் எதுவோ அதுவே சரியான காரியம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்” என்று அவர் அடிக்கடி சொல்வார். பாசத்திற்குரிய இந்த சகோதரரின் இழப்பு நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும் “ஜீவகிரீடத்தை” பெறும் உறுதியுடன் அவர் கடைசி வரை உண்மையோடு நிலைத்திருந்தார் என்ற விஷயம் நமக்கு மகிழ்ச்சி தருகிறது.​—⁠வெளிப்படுத்துதல் 2:10.

[அடிக்குறிப்பு]

a 1977 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தரப் புத்தகம், (ஆங்கிலம்) பக். 171-7-ஐக் காண்க.

[பக்கம் 31-ன் படம்]

என். எச். நாருடன் எம். ஜி. ஹென்ஷல்

[பக்கம் 31-ன் படம்]

தன் மனைவி லூஸிலுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்