உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 2/15 பக். 8-9
  • துயரப்படுவோருக்கு ஆறுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • துயரப்படுவோருக்கு ஆறுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • “சமாதானத்தின் தேவன்” துயரப்படுவோரை விசாரிக்கிறவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இன்னல்களை நீங்கள் எவ்வாறு சகிக்கலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • ஜெபம் செய்வதால் என்ன நன்மை?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • துன்பப்படுகிறவர்களை யெகோவா விடுவிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 2/15 பக். 8-9

துயரப்படுவோருக்கு ஆறுதல்

முற்காலத்தில் உத்தமர்களாய் விளங்கிய ஆண்களும் பெண்களும் துயரப்பட்டபோது உதவிக்காக கடவுளிடம் ஊக்கமாய் ஜெபித்தார்கள். என்றாலும், அத்துயரத்தை தணிக்க சில நடவடிக்கைகளையும் எடுத்தார்கள், அதாவது தங்களை ஒடுக்குகிறவர்களிடமிருந்து தப்பிக்க உபாயங்களை கையாண்டார்கள். உதாரணமாக, தாவீது யெகோவாவின் மீது சார்ந்திருந்ததோடு தனிப்பட்ட முயற்சியும் எடுத்ததால் தனக்கு நேரிட்ட துன்பத்தை சகித்துக்கொள்ள முடிந்தது. இன்று நம்மைப் பற்றியென்ன?

துயரப்படுகையில் உங்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒருவேளை நீங்களே முதற்படி எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு வேலை கிடைக்காமல் இருந்தால், உங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்குப் பொருத்தமான வேலையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வீர்கள் அல்லவா? (1 தீமோத்தேயு 5:8) அல்லது உங்களுக்கு ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால், போதிய மருத்துவ உதவியை நாடுவீர்கள் அல்லவா? எல்லா வகை வியாதிகளையும் குணப்படுத்தும் வல்லமை படைத்த இயேசுவே, ‘பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை’ என சொன்னது ஆர்வத்திற்குரியது. (மத்தேயு 9:12) இருந்தாலும், எல்லா கஷ்டங்களையுமே உங்களால் தீர்க்க முடியாதிருக்கலாம்; ஓரளவுக்கு அவற்றை நீங்கள் தொடர்ந்து சகித்திருக்க வேண்டியதாயிருக்கலாம்.

அப்படியானால், இந்த விஷயத்தை ஏன் யெகோவா தேவனிடம் ஜெபத்தில் தெரியப்படுத்தக் கூடாது? உதாரணமாக, வேலை தேடி அலையும்போது கடவுளை சார்ந்திருந்து ஜெபம் செய்தால், பைபிள் நியமங்களுடன் முரண்படுகிற வேலையை ஏற்றுக்கொள்ளும் ஆசைக்கு அணைபோடுவோம். பேராசையால் அல்லது பண ஆசையால் ‘விசுவாசத்தைவிட்டு வழுவிப்போவதையும்’ தவிர்ப்போம். (1 தீமோத்தேயு 6:10) சொல்லப்போனால், வேலை, குடும்பம் அல்லது உடல்நலம் போன்றவை சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது, “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என்ற தாவீதின் புத்திமதியை நாம் பின்பற்றலாம்.​—⁠சங்கீதம் 55:⁠22.

நமக்கு ஏற்படும் துயரம் நம்மை நொறுக்கிவிடாதபடிக்கு மனோ ரீதியில் சமநிலையைக் காத்துக்கொள்வதற்கும் இருதயப்பூர்வமான ஜெபம் நமக்கு உதவுகிறது. கிறிஸ்தவராய் உண்மையுடன் நிலைத்திருந்த அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” உள்ளப்பூர்வமான ஜெபம் எந்த விதத்தில் நமக்கு ஆறுதலளிக்க முடியும்? “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) தேவசமாதானம் ‘எல்லாப் புத்திக்கும் மேலானது.’ ஆகவே, வேதனைமிக்க உணர்ச்சிகளால் நாம் பாரமடையும்போது அது நம்மை நிலைப்படுத்தும். அது ‘நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் காத்து,’ துன்பத்திற்கு மேல் துன்பத்தை வருவிக்கும் விதத்தில் படபடவென்றும் ஞானமில்லாமலும் செயல்படுவதை தவிர்க்க உதவும்.

ஜெபம் ஒரு சூழ்நிலையை குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றவும் செய்யலாம். ரோமில் அப்போஸ்தலன் பவுல் சிறைக்கைதியாக இருந்தபோது, தனது சார்பாக ஜெபிக்கும்படி சக கிறிஸ்தவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். ஏன் பவுல் இவ்வாறு கேட்டுக்கொண்டார்? “நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்” என எழுதினார். (எபிரெயர் 13:19) வேறு வார்த்தைகளில் சொன்னால், சக விசுவாசிகள் விடாமல் தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபிக்கையில் அவர் விடுதலை செய்யப்படும் நேரம் மாறலாம் என்பதை பவுல் அறிந்திருந்தார்.​—⁠பிலேமோன் 22.

நமக்கு உண்டாகும் துன்பத்தின் விளைவை ஜெபம் மாற்றிவிடுமா? மாற்றலாம். ஆனால் நமது ஜெபங்களுக்கு நாம் எதிர்பார்க்கும் முறையில் யெகோவா தேவன் பதிலளிக்காமல் இருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். “மாம்சத்திலே ஒரு முள்”ளைப் பற்றி பவுல் பல தடவை ஜெபித்தார், இது ஒருவேளை உடல்நலம் சம்பந்தமான ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். என்றாலும், கடவுள் அந்தத் துன்பத்தை நீக்குவதற்குப் பதிலாக, “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என பவுலிடம் கூறினார்.​—⁠2 கொரிந்தியர் 12:7-9.

ஆகவே, நமக்கு நேரிடும் துன்பம் உடனடியாக நீங்காமல் இருக்கலாம். இருந்தாலும், நமது பரலோக தகப்பன் மீது நாம் சார்ந்திருப்பதை நிரூபிக்க அது வாய்ப்பளிக்கிறது. (யாக்கோபு 1:2-4) அத்துன்பத்தை யெகோவா தேவன் நீக்காவிட்டாலும்கூட, ‘சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கை அவரால் உண்டாக்க’ முடியும். (1 கொரிந்தியர் 10:13) ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்’ என யெகோவா அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது. (2 கொரிந்தியர் 1:3, 4) நாம் சகித்திருக்க தேவைப்படுவது எதுவோ அதை கடவுளால் தர முடியும்; அதோடு நித்திய ஜீவ நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது.

“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என அவருடைய வார்த்தையாகிய பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) துன்பமே இல்லாத ஓர் உலகம் என்பது நம்பமுடியாத கனவாக தோன்றுகிறதா? துன்பமே உங்களுடைய வாழ்க்கையாக இருந்தால் அப்படி தோன்றலாம். என்றாலும், பயத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை அளிப்பதாக கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார், அவருடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.​—⁠ஏசாயா 55:10, 11.

[பக்கம் 9-ன் படங்கள்]

நம்பிக்கையற்ற நிலையிலிருந்து நிம்மதி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்