உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 12/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • மதுபானங்களைப் பற்றியதில் நீங்கள் கடவுளுடைய நோக்குநிலையை உடையவரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • மது அருந்துவது பற்றிய சமநிலையான கண்ணோட்டம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 12/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• ஒரு கிறிஸ்தவனுக்கு உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அசதி ஏற்படும்போது என்ன செய்யலாம்?

முதலில் சோர்வுக்குரிய காரணத்தைத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்வது அவசியம். நமது பழக்கவழக்கங்களையும் உடைமைகளையும் குறித்து அவ்வப்போது யோசித்துப் பார்த்து அவற்றைப் பட்டியலிட்டு மனதைப் பாரப்படுத்தும் அனைத்தையும் ஓரங்கட்டிவிடலாம். நம் சூழ்நிலைக்கு ஒத்துவரும் இலக்குகளை வைக்கலாம். நம்முடைய ஆன்மீக ஆரோக்கியத்திற்குக் கவனம் செலுத்துவது முக்கியம். அதற்கு தவறாமல் ஜெபிப்பதும், தியானிப்பதும் அவசியம்.​—⁠8/15, பக்கங்கள் 23-6.

• 1,44,000 என்ற எண்ணிக்கையை யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள்?

தரிசனத்தில் 1,44,000 பேரைப் பற்றி சொல்லப்பட்டதை அப்போஸ்தலன் யோவான் கேட்ட பிறகு ‘ஒருவனும் எண்ணக் கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்களை’ அவர் பார்த்தார். (வெளிப்படுத்துதல் 7:4, 9) ஒருவேளை 1,44,000 என்ற எண்ணிக்கை அடையாள அர்த்தமுடையதாக இருந்தால் இவ்விரண்டு வசனங்களுக்கிடையே உள்ள ஆழமான வேறுபாடு புலப்படாமலேயே போயிருக்கும். தம்முடன் ஆட்சி செய்யப்போகிற தொகுதியினரைப் பற்றி இயேசு சொன்னபோது அவர்களை ‘சிறு மந்தை’ என்றே அழைத்தார். (லூக்கா 12:32)​—⁠9/1, பக்கம் 30.

• இரத்தம் நீக்கப்படாத, இறந்த மிருகத்தை அந்நியனுக்கு இஸ்ரவேலர் ஏன் விற்கலாம்?

மதம் மாறாத ஓர் அந்நியனோ பரதேசியோ நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல. அதனால் அப்படிப்பட்ட மிருகங்களை அவர்களிடம் கொடுப்பதற்கோ விற்பதற்கோ இஸ்ரவேலர் அனுமதிக்கப்பட்டார்கள். (உபாகமம் 14:21) மறுபட்சத்தில், மதம் மாறிய ஒருவர் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறார். அதனால் இரத்தம் நீக்கப்படாத அப்படிப்பட்ட மிருகத்தின் இறைச்சியை அவர் சாப்பிட மாட்டார். (லேவியராகமம் 17:10)​—⁠9/15, பக்கம் 26.

• பையோமிமெடிக்ஸ் என்றால் என்ன, கிறிஸ்தவர்களுக்கு அது ஏன் ஆர்வத்திற்குரியது?

பையோமிமெடிக்ஸ் என்பது இயற்கையில் காணப்படும் வடிவமைப்புகளைக் காப்பியடிக்கும் ஓர் அறிவியல் துறை. உதாரணமாக ரைட் சகோதரர்கள் பெரிய பெரிய பறவைகள் பறப்பதைப் பார்த்து ஒரு விமானத்தை வடிவமைத்தார்கள். ஆகவே, பையோமிமெடிக்ஸ் படைப்பாளருக்கு மகிமை செலுத்த ஒரு கிறிஸ்தவரை உந்துவிக்கும்.​—⁠10/1, பக்கம் 9.

• 2 கொரிந்தியர் 12:2-4-⁠ல், பரதீசுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் நபர் யார்?

தானும் ஓர் அப்போஸ்தலன் என்பதை ஆதாரங்களுடன் பவுல் நிரூபித்ததைக் காட்டும் வசனங்களைத் தொடர்ந்து இந்த வசனங்கள் வருகின்றன. வேறு யாரும் அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்றதாக பைபிள் குறிப்பிடுவதில்லை, பவுல் மட்டுமே அதைக் குறித்து நமக்குச் சொல்கிறார். எனவே பவுல்தான் ஆன்மீக பரதீஸ் பற்றிய தரிசனத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.​—⁠10/15, பக்கம் 8.

• கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக சேவை செய்ய இயேசுவைத் தகுதியுள்ளவராக்கிய குணங்களில் சில யாவை?

இயேசு இறுதிவரை பரிபூரண உத்தமத்தைக் காட்டினார். நேர்மையும் நீதியும் உள்ளவராக நடந்துகொண்டார். கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். மக்கள் மீது ஆழ்ந்த அக்கறை காட்டினார். வேலை செய்ய மனமுள்ளவராக இருந்தார்.​—⁠11/1, பக்கங்கள் 6-7.

• இயேசுவின் ஆயிர வருட ஆட்சியில் பேய்கள் எங்கு இருக்கும்?

கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் சாத்தானோடுகூட பேய்களும் பாதாளத்தில் செயலற்ற நிலைமைக்கு தள்ளப்படும் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. (வெளிப்படுத்துதல் 20:1-3) ஆதியாகமம் 3:15 முன்னுரைக்கிறபடி, சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவது என்பது கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது சாத்தான் பாதாளத்தில் தள்ளப்படுவதையும் குறிக்கிறது. சாத்தானுடைய வித்துவில் பொல்லாத தூதர்கள் அதாவது பேய்களும் அடங்குவர். பாதாளத்தைக் குறித்து பேய்கள் பயத்தை வெளிக்காட்டியிருப்பதுதானே, எதிர்காலத்தில் அவை செயல்பட முடியாமல் செய்யப்படுவதை நன்கு அறிந்திருப்பதாகத் தெரிகிறது. (லூக்கா 8:31)​—⁠11/15, பக்கங்கள் 30-1.

• ஒரு நபர் மற்றவர்கள் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மதுபானம் குடிக்காதிருந்தாலும் குடிப்பதைக் குறித்து அவர் ஏன் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?

சிலர் பல கிளாஸ் மதுபானம் குடித்தாலும் குடிவெறிக்கான அறிகுறிகள் அவ்வளவாக தெரிவதே இல்லை. என்றாலும் அவர் மதுபானத்தை அதிகமதிகமாக குடிக்க ஆரம்பித்து, “குடிவெறிக்கு அடிமை”யாகி விடுகிறார். (தீத்து 2:3, பொது மொழிபெயர்ப்பு) ‘உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் குடிவெறியினாலும் பாரமடையாதபடி’ எச்சரிக்கையாய் இருங்கள் என்று இயேசு சொன்னார். (லூக்கா 21:34, 35) வெறிக்கும் வரை குடித்தால்தான் கெட்ட விளைவுகள் வரும் என்பதில்லை; அதற்கு முன்பே உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் மயக்கமும் மந்தமும் ஏற்பட்டுவிடுகிறது.​—⁠12/1, பக்கங்கள் 19-21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்