உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 4/15 பக். 31
  • உடலில் ஊனம் உழைப்பில் வேகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உடலில் ஊனம் உழைப்பில் வேகம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • இதே தகவல்
  • உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் கொடுக்க முடியுமா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • ராஜ்ய மன்ற கட்டுமானம்—பரிசுத்த சேவையின் ஒரு முக்கிய அம்சம்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • சர்வதேச கட்டுதலில் புதியதோர் அம்சம்
    விழித்தெழு!—1992
  • ராஜ்ய மன்ற கட்டுமான திட்டம் முன்னேறுகிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 4/15 பக். 31

உடலில் ஊனம்​—உழைப்பில் வேகம்

லேயோநார்டோவை முதலில் பார்க்கையில், கட்டுமானப் பணியில் அவரால் பங்குகொள்ள முடியுமென நீங்கள் கற்பனைகூட செய்திருக்க மாட்டீர்கள். முன்னர் வேலை செய்யுமிடத்தில் நடந்த விபத்தில் அவர் தன் முன்னங்கைகள் இரண்டையும் இழந்திருந்தார். உடல் ஊனமுற்றவராக இருந்தபோதிலும் எல் சால்வடாரிலுள்ள ஆகாஹூட்லா நகரில் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் அவர் கடினமாய் வேலை செய்து வந்தார்; அதை நீங்களே படத்தில் பார்க்கலாம்.

இந்தக் கட்டுமானப் பணியில் தான் உபயோகிப்பதற்கு ஏற்ற வகையில் கருவிகளை அவரே வடிவமைத்துக்கொண்டார். மண்வாரியின் பிடியில் இணைக்கப்பட்டுள்ள இரும்பு வளையத்தில் தன் முழங்கையை நுழைத்து, மண்ணை அள்ளி தள்ளுவண்டிக்குள் லாவகமாகப் போடுகிறார். தள்ளுவண்டியின் கைப்பிடிகளில் வளையங்களைப் பொருத்தியிருப்பதால், அதையும் அவராலேயே தள்ளிச் செல்ல முடிகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் பங்குகொள்ள எது அவரைத் தூண்டியது?

அந்த ஊரிலுள்ள ராஜ்ய மன்றத்தின், அதாவது யெகோவாவின் சாட்சிகள் வழிபடுவதற்காகக் கூடிவருகிற இடத்தின் கட்டுமானப் பணியில் பங்குகொள்ள லேயோநார்டோ ஆசைப்பட்டார். அதில் பங்குகொள்ளாதிருக்க அவருக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தன. அவர் உடல் ஊனமுற்றவராக இருந்தார், முழுநேர வேலைக்குச் செல்பவராக இருந்தார், சபையில் உதவி ஊழியராகவும் சேவை செய்து வந்தார். எனினும், கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலும் கடவுளுக்குச் செய்கிற சேவையில் தன்னால் முடிந்தளவு ஈடுபட அவர் ஆசைப்பட்டார்.

கடவுளுக்குச் சேவை செய்வதில் நீங்களும் அதே போன்று ஆர்வம் காட்டுகிறீர்களா? தன் உடல் ஊனத்தைச் சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, லேயோநார்டோ மனத்திறன்களைப் பயன்படுத்தி தன்னுடைய கருவிகளை தானே வடிவமைத்தார்; இப்படி அவர் செய்திராவிட்டால் அந்தப் பணியில் கலந்துகொள்ள முடியாமலே போயிருந்திருக்கும். அவர் “முழு மனதோடு” கடவுளுக்குச் சேவை செய்தார். (மத்தேயு 22:37) உடலில் ஊனமோ இல்லையோ, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணியில் பங்குகொள்கிற உலகெங்குமுள்ள பணியாளர்கள் மனமுவந்து வேலை செய்கிற மனம்படைத்தவர்கள். அவர்களுடைய கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம், அவற்றில் கலந்துகொள்ள நீங்களும் தாராளமாக வரலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்