உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வருகையில் அவர்களுக்கு முன்னே எந்தத் தூதனைக் கடவுள் அனுப்பினார்? (யாத். 23:20, 21)
கடவுளுடைய தலைமகனே அந்தத் தூதன் என்பதை நம்புவது நியாயமானது; ஏனென்றால், ‘யெகோவாவின் நாமம் அவரது உள்ளத்தில் இருந்தது,’ அவரே பிற்பாடு இயேசுவானார்.—9/15, பக்கம் 21.
• கடவுளுக்கு சேவை செய்யாமல் இருக்க என்னென்ன சாக்குப்போக்குகள் சொன்னால் அவருக்குப் பிடிக்காது?
‘இது ரொம்பவே கஷ்டமான வேலை. எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. எனக்கு அந்தளவு தகுதியில்லை. என் மனதை நோகடித்துவிட்டார்கள்.’ கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கு இவை தகுந்த காரணங்கள் அல்ல.—10/15, பக்கங்கள் 12-15.
• கிறிஸ்தவ கூட்டங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பலப்படுத்துவதாய் இருக்க சில வழிகள் யாவை?
முன்னதாகவே தயாரியுங்கள். தவறாமல் கலந்துகொள்ளுங்கள். நேரத்தோடு செல்லுங்கள். தேவையானவற்றை எடுத்து வாருங்கள். கவனச்சிதறல்களைத் தவிருங்கள். பதில் சொல்லுங்கள். சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள். நியமிப்புகளைத் தவறவிடாதீர்கள். பங்குபெற்றோரைப் பாராட்டுங்கள். உரையாடுங்கள்.—10/15, பக்கம் 22.
• சகாக்களின் தொல்லைக்கு ஆரோன் இணங்கிப் போனதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
மோசே இல்லாத சமயத்தில், இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு கடவுளை உண்டாக்கும்படி ஆரோனை வற்புறுத்தினார்கள். அவர்களுடைய பேச்சுக்கு இணங்கி அவர் அதை செய்துகொடுத்தார். இளைஞர்கள் மட்டுமே சகாக்களின் தொல்லையை எதிர்ப்படுவதில்லை; சரியானதைச் செய்ய மனதார விரும்புகிற பெரியவர்களும்கூட ஆளாகலாம் என்பதை இது காட்டுகிறது. ஆகவே, நாம் சகாக்களின் தொல்லையை எதிர்த்து நிற்பது அவசியம்.—11/15, பக்கம் 8.