பொருளடக்கம்
மே 29, 2017-ஜூன் 4, 2017
3 “நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று”
நீங்கள் எத்தனை விஷயங்களுக்காக நேர்ந்துகொண்டிருக்கிறீர்கள்? அதை நிறைவேற்ற உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறீர்களா? அர்ப்பண உறுதிமொழியைப் பற்றியும், திருமண உறுதிமொழியைப் பற்றியும் என்ன சொல்லலாம்? நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய யெப்தா மற்றும் அன்னாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அவை நமக்கு உதவும்.
ஜூன் 5-11, 2017
9 கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?
பூஞ்சோலை பூமியில் யெகோவா நமக்கு என்ன தருவார் என்று நாம் அடிக்கடி யோசித்திருக்கலாம். ஆனால், யெகோவா எதையெல்லாம் நீக்குவார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சந்தோஷமான, சமாதானமான உலகத்தை ஏற்படுத்துவதற்கு யெகோவா எதையெல்லாம் நீக்குவார்? இதை யோசித்துப் பார்ப்பது, நம்முடைய விசுவாசத்தையும், சகித்திருக்க வேண்டுமென்ற நம்முடைய தீர்மானத்தையும் பலப்படுத்தும்.
14 வாழ்க்கை சரிதை—கிறிஸ்துவின் படைவீரனாக இருப்பதில் தீர்மானமாக இருந்தேன்
ஜூன் 12-18, 2017
18 “முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” எப்போதும் நியாயமாக நடந்துகொள்வார்
ஜூன் 19-25, 2017
23 நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கிறதா?
நமக்கோ மற்றவர்களுக்கோ அநியாயம் நடந்திருப்பதாக நாம் நினைத்தால், நம்முடைய விசுவாசம், மனத்தாழ்மை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவை சோதிக்கப்படலாம். நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவுக்கு இருக்கும் அதே கண்ணோட்டம் நமக்கும் இருக்க வேண்டும். அதற்கு உதவும் 3 பைபிள் உதாரணங்களைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம்.
ஜூன் 26, 2017–ஜூலை 2, 2017
28 உங்கள் மனப்பூர்வமான சேவை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கட்டும்!
நம்மிடமிருந்து யெகோவாவுக்கு எதுவும் தேவையில்லை என்றாலும், அவருடைய அரசாட்சிக்காக நாம் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். அவருக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்வதையும், அவருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதையும் அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதை நியாயாதிபதிகள் 4 மற்றும் 5-வது அதிகாரங்களிலிருந்து தெரிந்துகொள்வோம்.