சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
பிப்ரவரி 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 206 (32)
10 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாத அளிப்பை மேன்மை படுத்திக் காட்டுங்கள். 1980-க்கு முன்னால் பிரசுரிக்கப்பட்ட எந்த 192-பக்க புத்தகத்தையாகிலும் ரூ.5-க்கு அளிக்கலாம். சபையில் கையிருப்பில் இருக்கக்கூடிய பிரசுரங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள். இந்த மாத சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளில் பயன்படுத்தப்படக்கூடிய முன்னுரைகளைச் சுருக்கமாக சிந்தியுங்கள். (நியாயங்கள் புத்தகம் உபதலைப்பு “ராஜ்யம்” பக்கங்கள் 12-13-ஐ பார்க்கவும்.) எல்லா முழுக்காட்டப்பட்ட சாட்சிகளும் அடுத்த வாரம் ஊழியக்கூட்டத்துக்கு ஆஜராயிருக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். இரண்டாவது சனிக்கிழமை வெளி ஊழியத்துக்கு உற்சாகப்படுத்தவும்.
17 நிமி: “மாநாட்டின் விசேஷ அம்சங்கள் ஐக்கியப்படுத்துகிறது” என்பதன் பேரில் உற்சாகமான பேச்சு.
18 நிமி: கடந்த மாதம் அளிக்கப்பட்ட பிரசுரங்களைப் பயன்படுத்தி மறுசந்திப்பு செய்வதையும் வேத படிப்புகள் ஆரம்பிப்பதையும் உற்சாகப்படுத்துங்கள். “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” புரோஷீரைப் பயன்படுத்தி வேதப்படிப்புகள் எவ்வாறு தொடங்கப்படலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். வேதப்படிப்புகளை ஆரம்பிப்பதில் அனுபவங்களைக் கேளுங்கள்.
பாட்டு 144 (11), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 207 (81)
7 நிமி: சபை அறிவிப்புகள். வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் உற்சாகப்படுத்தவும் பழைய புத்தகங்களிலிருந்து உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமான ஓரிரண்டு குறிப்புகளைச் சிபாரிசு செய்யுங்கள்.
7 நிமி: மருத்துவ பத்திரமும் அடையாள அட்டையும் செயலாளரின் பேச்சு. ஆஜராயிருக்கக்கூடிய எல்லா முழுக்காட்டப்பட்ட சாட்சிக்கும் அதை விநியோகியுங்கள். எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்ட டிசம்பர் 21, 1988 தேதியிட்ட கடிதத்திலுள்ள முக்கிய குறிப்புகளைச் சுருக்கமாக விமர்சியுங்கள். எல்லாரும் உடனடியாக அந்த அட்டைகளைப் பூர்த்தி செய்யும்படியும் சரியாக கையெழுத்திட்டு தேதி குறிப்பிடும்படியும் செய்யுங்கள்.
16 நிமி: “உங்களிலிருக்கிற நம்பிக்கைக்கு நீங்கள் காரணம் கொடுக்கிறீர்களா?” கலந்துரையாடலும் நடிப்பும். பாரா 5-ஐ சிந்திக்கையில் திறமையுள்ள ஒரு பிரஸ்தாபி சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளின் கடைசி வசனத்திலிருந்து பழைய பிரசுரத்திற்கோ அல்லது வேறொரு பிரசுரத்திற்கோ இணைப்பு செய்வதை சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—“பழைய பிரசுரங்களோடு” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு பாரா 6-ஐ சிந்திக்கையில் இந்த மாத பிரசுர அளிப்பை சிறப்பித்துக் காட்டும் சுருக்கமான நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 119 (45), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 93 (51)
10 நிமி: சபை அறிவிப்புகள் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். கணக்கு அறிக்கையை சேர்த்துக் கொள்ளுங்கள். சங்கத்திடமிருந்து வந்திருக்கும் டிசம்பர் ஸ்டட்மென்டில் காட்டப்பட்டிருக்கிறபடி சங்கத்துக்கு அனுப்பப்பட்ட ராஜ்ய வேலைக்குரிய காணிக்கையை குறிப்பிடுங்கள். நான்காவது சனிக்கிழமையன்று எல்லாரும் பத்திரிகை ஊழியத்தில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “ஊழியக்கூட்டத்திலிருந்து முழுமையாக பயனடையுங்கள்” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. சபையாரிடமிருந்து அவர்கள் எவ்வாறு ஊழியக்கூட்டத்திலிருந்து தனிப்பட்ட முறையில் பயனடைந்தார்கள் என்று சுருக்கமாக சொல்லும்படி கேளுங்கள்.
15 நிமி: “உங்கள் பயிற்சியை கடவுள் நிறைவு செய்வார்” என்பதன் பேரில் பேச்சு. (w87 6/15 பக்கம் 28; இந்திய மொழிகளில் காவற்கோபுரம் 89 ஜனவரி)
பாட்டு 21 (108), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 164 (71)
12 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. மாதத்தின் முதல் ஞாயிறு அன்று எல்லாரும் வெளி ஊழியத்தில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “வாலிபரே—யெகோவாவிடத்தில் பலமான உறவை வளருங்கள்” கேள்வி பதில். சபையிலுள்ள வாலிபரின் உள்ளத்தை தொடும்படி பேசுங்கள். அவர்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: பெரிய போதருக்குச் செவி கொடுத்தல் பேச்சும் நேர்முக பேட்டிகளும் இளைஞருக்குப் பெரிய போதகர் புத்தகத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டுங்கள். 46 பைபிள் கதைகள் பிள்ளைகளுக்குக் கவர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. அவர்களுக்கு முக்கியமான பைபிள் நியமங்களைக் கற்பிக்கிறது. பிள்ளைகள் யெகோவாவிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் பைபிளிடமும் நெருங்க வருவதற்கு அந்தப் பைபிள் கதைகள் உதவுகின்றன. பெரிய போதகர் புத்தகத்தின் 5-6 பக்கங்களில் அதைப் பிரசுரிப்போரின் தகவலில் காணப்படும் முக்கிய குறிப்புகளை விமர்சனம் செய்யுங்கள். வாலிபரையும் பெற்றோரையும் நேர்முக பேட்டி காண்கையில் பிள்ளைகள் பெற்றிருக்கும் பயன்களை உயர்த்திக் காட்டுங்கள்.
பாட்டு 205 (108), முடிவு ஜெபம்.
மார்ச் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101 (41)
10 நிமி: சபை அறிவிப்புகள் மார்ச் மாதத்தின் போது அளிக்க பழைய பிரசுரங்கள் கையிருப்பிலிருக்கிறது என்று அறிவிப்பு செய்யுங்கள். பழைய பிரசுர கையிருப்பு தீர்ந்துவிட்டிருந்தால் மற்ற 192-பக்க புத்தகங்களை நன்கொடை ரூ.10-க்கு அளிக்கலாம். நேரம் அனுமதிக்குமானால் பிப்ரவரி மாதத்தின் பழைய பிரசுரங்களை வெற்றிகரமாக அளித்த பிரஸ்தாபிகளின் அனுபவங்களைக் கேளுங்கள்.
15 நிமி: “இந்தியாவில் மத சுயாதீனம் நிலைநிறுத்தப்படுகிறது” என்ற தலைப்பின் பேரில் பேச்சு. (w87 11/1 பக்கம் 21; இந்திய மொழிகளில் காவற்கோபுரம் 88 ஆகஸ்ட்)
20 நிமி: 1989 வருடாந்தர புத்தகத்தின் முக்கிய குறிப்புகள் 1989 வருடாந்தர புத்தகத்தின் பொருளடக்கம்பற்றி நன்கு தயாரிக்கப்பட்ட அறிமுகப் பேச்சு. எங்குமுள்ள ஜனங்களை ‘வாருங்கள்!’ என்று ஐக்கியமாக சொல்வதிலிருந்து கிடைத்த முனைப்பான அம்சங்கள். இந்த அழைப்பை கொடுப்பதில் சேர்ந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் வருகின்றன. உலகளாவிய அறிக்கையில் குறித்து காட்டப்பட்டிருக்கும் முனைப்பான அதிகரிப்புக்கு கவனத்தைத் திருப்புங்கள். நேரம் அனுமதிக்குமானால், கொடுக்கப்பட்டிருக்கும் சில அனுபவங்களைக் குறிப்பிடுங்கள். இது சபைக்கு உற்சாகமூட்டுதலாகவும் நன்மையாகவும் சேவிக்கிறது என்பதை காண்பியுங்கள். வருடாந்தர புத்தகம் இல்லையானால் ஆங்கில காவற்கோபுரம் ஜனவரி 1, 1989-ல் காணப்படும் உலகளாவிய அறிக்கையை உபயோகியுங்கள்.
பாட்டு 18 (63), முடிவு ஜெபம்.