வாலிபரே—யெகோவாவிடத்தில் பலமான உறவை வளருங்கள்
1 சங்கீதம் 24:3-5-ல் மகிழ்வூட்டும் வார்த்தைகள் காணப்படுகின்றன: “யார் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக் கொடாமலும் கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. அவன் கர்த்தரால் [யெகோவாவால், NW] ஆசீர்வாதத்தையும் தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.” ஆம், யெகோவா, சுத்தமுள்ளவர்களிடத்திலும் மாசில்லாதவர்களிடத்திலும் கபடாய் ஆணையிடுவதன் மூலம் இரட்டை வாழ்க்கை வாழாமலிருக்கிறவர்களிடத்திலும் தமது நெருக்கடியான உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறார். திரளான வாலிபர்களிடத்தில் அந்த விவரிப்பு இன்று பொருந்துகிறது என்பதை காண்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. அவர்கள் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் ஒரு மெய்யான சொத்தாக இருக்கின்றனர். அவர்களுடைய ஒழுக்கத்தூய்மை யெகோவாவின் கண்களில் அவர்களை அழகுள்ளவர்களாக ஆக்குகிறது.
2 இளைஞர் இன்று ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாயிருப்பது சுலபமானதா? இல்லை. அவர்கள் தினமும் எதிர்ப்படவேண்டிய சவால்கள் இருக்கின்றன. அசுத்தமான செல்வாக்குகளும் ஒழுக்கயீனமான நடத்தைகளுமாகிய உலகளாவிய ஒரு தொற்று நோய் இருக்கிறது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவுடன் ஒரு பலமான உறவை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
நீங்கள் என்ன செய்யவேண்டும்
3 யெகோவா தேவனுடன் ஒரு பலமான உறவை கொண்டிருப்பதானது, யெகோவா தேவனின் பண்புகளுக்கு இருதயப்பூர்வமான மதித்துணர்வை உட்படுத்துகிறது, அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை நீ கற்றுக்கொள்வது அவசியம். பைபிள் சார்ந்த பிரசுரங்களோடுகூட அவருடைய வார்த்தையை ஊக்கமாக படிப்பதை இது உட்படுத்துகிறது. தீமோத்தேயுவைப்போன்று, நீ “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்துவந்த நற்போதகத்திலும் தேறினவனாக” விளங்குவது அவசியம். (1 தீமோ. 4:6) இவ்வகையான படிப்பு “யெகோவாவுடைய மகிமையை” நீ பார்க்க உதவி செய்யும். (சங். 27:4) அவரைப்பற்றி நீ எவ்வளவு அதிகமாய் கற்றறிகிறாயோ அவ்வளவு அதிகமாய் நீ அவரிடத்தில் நெருங்கி வருவாய்.
4 இப்படிப்பட்ட ஒரு உறவை வளர்த்து வருவதானது நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்துகிறது. பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்னதாவது: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு இவைகளிலே நிலைத்திரு.” (1 தீமோ. 4:15) நீ இன்னமும் முழுக்காட்டுதல் பெறாதவனாக இருந்தால், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதற்கு உழைக்க வேண்டும். நாம் இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு அண்மையிலிருப்பதால் “பரிசுத்த நடக்கை தேவபக்தி” ஆகியவற்றில் “எப்படிப்பட்ட ஆட்களாயிருக்கிறோம்” என்பதில் நாம் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். (2 பேதுரு 3:11) யெகோவா நமது கடவுளாகவும் ஜீவனளிப்பவராகவும் இருப்பது குறித்து நாம் எப்படி உணருகிறோம் என்பது முக்கியமானது மரியாதைக்குரியவரும் அருமையாக நேசிக்கப்படக்கூடியவருமான தந்தையினிடமாக ஒருவர் கொண்டிருக்க வேண்டிய அதே நெருக்கமான உறவை நாம் யெகோவா தேவனிடமாக வளர்த்துவருவோமானால் அப்பொழுது அந்த உறவை பிரதிபலிக்கக்கூடிய செயல்கள் பின்தொடரும்.—மல். 1:6.
5 அமைப்பு முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் தங்களுடைய உடல் வலிமையையும் ஆற்றலையும் ஆர்வத்தையும் பிரசங்க வேலையில் பங்கு கொள்ளுவதற்குப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு மனமுவந்து வருகின்றனர், பதில் சொல்லுவதற்குத் தயாரிப்பு செய்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய வாலிப வலிமையை பயனியர் சேவையில் பயன்படுத்துகின்றனர். இப்படி நல்லமுறையில் பயன்படுத்தப்படும் வலிமையை நீதிமொழிகள் 20:29 “வாலிபரின் [அழகு, NW] அலங்காரம்” என்று அழைக்கிறது. யெகோவா தேவனுடன் ஒரு பலமான உறவை வளர்ப்பது அவருடைய சேவையில் கடின உழைப்பைத் தேவைப்படுத்தியபோதிலும் அந்த முயற்சி பலன் மிகுந்தது!
6 இளைஞராகிய உங்களில் பலருக்கு, நீங்கள் பின்பற்ற வேண்டிய போக்கை உங்களுக்காக வரைந்து காட்டியிருக்கும் உங்கள் கிறிஸ்தவ பெற்றோரை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஜீவனுக்கான பாதையில் உங்களை நடத்துவதற்காக நீங்கள் எடுக்க வேண்டிய படிகளை அவர்கள் உங்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள். உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் செவி கொடுங்கள். (எபே. 6:1) அவர்கள் உங்களை அருமையாய் நேசிக்கிறார்கள். நீங்கள் வெற்றியடைய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் புதிய ஒழுங்குமுறையிலிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆகவே அவர்கள் ஏற்பாடு செய்யக்கூடிய படிப்பு அட்டவணையில் அவர்களுடன் ஒத்துழையுங்கள். சத்தியத்தை உங்களுடைய சொந்த உடமையாக ஆக்கிக் கொள்ளுங்கள். யெகோவாவைப் பற்றி உங்களால் முடிந்த அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் அவரை நித்தியமாக நேசிப்பதிலும், சேவிப்பதிலும் வளருவீர்கள்.