தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
பிப்ரவரி 26, 1990 துவங்கி ஜூன் 18, 1990 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமரிசனம். கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமரிசனத்தின்போது எந்த கேள்விக்கும் விடையளிக்க எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை.]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளிக்கவும்:
1. முதல் தெசலோனிக்கேயர் தெளிவாகவே பைபிள் ஏட்டின் பாகமாக ஆவதற்கு பவுல் எழுதிய கடிதங்களில் முதலாவதாக இருக்கும் தனிச்சிறப்பை உடையதாயிருக்கிறது. [13, si பக். 222 பா. 1]
2. மோசேயின் நியாயப்பிரமாணம் புறஜாதிகளை யூதர்களிடமிருந்து பிரித்து வைத்தபோதிலும் இயேசுகிறிஸ்துவின் மூலம் கடவுளை அணுகுவதற்கு அவர்கள் ஐக்கியப்பட்டவர்களானார்கள். [5, si பக். 220 பா. 10]
3. ரோமாபுரியில் பவுலினுடைய சிறையிருப்பினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று கடவுளுடைய வார்த்தையை பயமின்றி பேசுவதற்கு அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். [8, si பக். 223 பா. 8]
4. கொலோசே பட்டணத்திலிருந்த சபையினர் மத்தியில் பவுல் நற்செய்தியை பிரசங்கித்ததன் விளைவாக தேவனுடைய தகுதியற்ற தயவைக் குறித்து அறிந்து கொண்டார்கள். [11, si பக். 225 பா. 6]
5. தற்காலத்திலிருக்கும் மீதியான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆரம்பகால அபிஷேகம்பண்ணப்பட்டோரை உயிர்த்தெழுதலில் முந்திகொள்ள மாட்டார்கள். [15 si பக். 228 பா. 10]
6. தெசலோனிக்கேயருக்கு எழுதின முதல் கடிதத்திலுள்ள பவுலின் வார்த்தைகளை ஒரு சிலர் தவறாக புரிந்துகொண்டு ஆண்டவருடைய பிரசன்னம் உடனடியாக நிகழப்போகிறதென்று வாதாடினர். [16, si பக். 230 பா. 3]
7. லூக்கா ஒரு கவனமான ஆராய்ச்சியாளனென்றும் பொது பதிவேடுகளை அவன் விசாரித்தறிந்திருக்கிறான் என்றும் லூக்கா 3:1, 2 சுட்டிக் காட்டக்கூடும். [1, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 1/1 பக். 28-ஐ பார்க்கவும்.]
8. லூக்கா 17:30-ல் இயேசு ஒரு மனநிலையை சித்தரித்துக் காட்டிக் கொண்டிருந்தார்; இவற்றில் நித்திய நியாயத்தீர்ப்பு உட்படவில்லை. [8, வாராந்தர பைபிள் வாசிப்பு; ஆங்கில காவற். 1988 6/1 பக். 31-ஐ பார்க்கவும்.]
9. ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு அற்புதமாய் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை தொட்டு சொஸ்தப்படுத்தினார் என்பதை லூக்கா மட்டுமே பதிவு செய்கிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 1/1 பக். 28 பார்க்கவும்.]
10. யோவான் 9:41-ல் “நீங்கள் குருடராயிருந்தால் பாவமிராது” என்ற இயேசுவின் கூற்று சில மானிடர் பாவமற்றவர்களாயிருக்கிறார்கள் என்பதைக் குறித்தது. [15, வாராந்தர பைபிள் வாசிப்பு; ஆங்கில காவற். 1988 8/1 பக். 31 பார்க்கவும்.]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்:
11. என்ன விடுதலையை கலாத்தியர் புறக்கணித்தனர்? [3, si பக். 217 பா. 11]
12. பிலிப்பியர்கள் எவ்வாறு நற்செய்தியை கேள்விப்பட்டார்கள்? [7, si பக். 222 பா. 1, 2]
13. தெசலோனிக்கேயாவில் பவுலினுடைய ஊழியத்தின் ஆரம்ப கால வெற்றியிலிருந்து என்ன விளைவடைந்தது? [13, si 227 பா. 3, 4]
14. லூக்கா 12:16-21-ல் காணப்படும் உவமையின் குறிப்பெண்? [6, வாராந்தர பைபிள் வாசிப்பு; ஆங்கில காவற். 1986 7/15 பக். 31 பார்க்கவும்]
15. லூக்கா 23:30-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் அவர் காலத்து சந்ததியின் பேரில் என்ன அர்த்தத்தையுடையதாக இருந்தது? [11, வாராந்தர பைபிள் வாசிப்பு]; rs பக். 112 பா. 28 பார்க்கவும்.]
16. யோவான் 4:27-ற்கு இசைய இயேசு சமாரிய பெண்ணிடம் பேசினார் என்ற இக்காரியத்திற்கு ஏன் இப்படிப்பட்டதோர் பிரதிபலிப்பு ஏற்பட்டது? [13, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 2/1 பக். 26 பார்க்கவும்.]
17. இன்று எந்த இரண்டு வகுப்பினர் இயேசுவின் குரலுக்கு, செவிகொடுக்கின்றனர், அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றுகின்றனர், மற்றும் அவருடைய கனிவான பராமரிப்பை அனுபவித்து மகிழ்கின்றனர்? (யோவான் 10:27, 28) [16, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 2/1 பக். 27.]
18. 2 தெசலோனிக்கேயர் எப்பொழுது எழுதப்பட்டது? [si பக். 230 பா. 4]
பின்வரும் கூற்றுகளைப் பூர்த்தியாக்கத் தேவையான சொல்லையோ சொற்றொடரையோ அளியுங்கள்:
19. கலாத்தியரில்“---------------லேயன்றி நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுகிறதில்லை” என்று பவுல் விவாதித்தான். [2, si பக். 217 பா. 9]
20. சபை கிறிஸ்துவுக்குக்----------------------வேண்டும், மனைவிகள் தங்கள் கணவருக்குக்------------------வேண்டும். [6, si பக். 225 பா. 5]
21. புறமத தத்துவங்கள், தேவதூதரின் வழிபாடு மற்றும் யூத பாரம்பரியம் ஆகியவற்றினிடையே கடவுளால் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் மேன்மையான நிலையை வலியுறுத்திக் காட்டும் புத்தகம்-------------[10, si பக். 225 பா. 5]
22. 2 தெசலோனிக்கேயரின் பிரகாரம்-------------------------முந்தி நேரிட்டு----------வெளிப்பட்டாலொழிய யெகோவாவின் நாள் வராது. [17, si பக். 230 பா. 6]
23. சமாரிய அயலானைப் பற்றிய உவமையை கொடுக்கும் ஒரே சுவிசேஷ பதிவு-----------------[5, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990, 1/1 பக். 28 பார்க்கவும்.]
24. உடல் வளர்த்தியில் குள்ளமாயிருந்த-------------------------ஆயக்காரருக்குத் தலைவன் இயேசுவை பார்க்க மரத்தின்மேல் ஏறினான். [9, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1990 1/1 பக். 28 பார்க்கவும்.]
25. இயேசு நேசித்த சீஷன் (பேதுரு; யோவான்; பவுல்) (யோவான் 13:23) [17, வாராந்தர பைபிள் வாசிப்பு, தமிழ் காவற் 1990 2/1 பக். 26.]
26. பவுல் முக்கியமாக (கொரிந்துவில்; எபேசுவில்; பிலிப்பியில்) உள்ள சபையை தாராள மனப்பான்மைக்காக பாராட்டினான். [9, si பக். 223 பா. 11]
27. பவுல் கொரிந்துவிலிருந்தபோது தெசலோனிக்கேயாவிலுள்ள சபைக்கு அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர்களா ஆறுதல்படுத்துவதற்காகவும் அவர்களை ஆறுதல்படுத்துவதற்காகவும் (தீமோத்தேயுவை; தீத்துவை; பர்னபாவை) அனுப்பினான். [14, si பக். 228 பா. 8]
28. 12 அப்போஸ்தலர்களில் ஒரே ஒருவர் மட்டுமே யூதேயாவிலிருந்து வந்ததாக தோன்றுகிறது. அவர் (பேதுரு; மத்தேயு; யூதாஸ் ஸ்காரியோத்து). (லூக்கா 6:12-16) [3, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1988 11/1 பக். 8 பார்க்கவும்.]
29. இயேசு மனிதனாக வருவதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கைப் பற்றி நமக்குச் சொல்பவர் (மாற்கு; லூக்கா; யோவான்) மட்டுமே [12, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 2/1 பக். 26 பார்க்கவும்.]
30. எபேசு பட்டணத்திலிருந்த மகா தேவி (வீனஸ்; அர்த்தெமி; அப்ரோத்தீதீ). [4, si பக். 219 பா. 5.]
பின்வரும் வேதவாக்கியங்களை, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுகளோடு பொருத்துக:
லூக்கா 5:1-6; லூக்கா 8:30-32; லூக்கா 16:9; யோவான் 7:37; கொலோ. 2:8
31. நாம் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய பணத்தை யெகோவா தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசுவையும் சிநேகிதராக ஆக்கிக்கொள்ளும் முறையில் பயன்படுத்தவேண்டும். [7, வாராந்தர பைபிள் வாசிப்பு; ஆங்கில விழித்தெழு! 1988 4/22 பக். 8 பார்க்கவும்.]
32. இங்கே இயேசு எட்டு நாள் கூடாரப் பண்டிகையுடன் சேர்க்கப்பட்டிருந்த ஒரு வழக்கத்தைக் குறிப்பிட்டு காட்டுகிறார். [14, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 2/1 பக். 27 பார்க்கவும்.]
33. அபிசுக்குள் தள்ளுவதே தங்களுக்குக் கடவுள் கொடுக்கும் முடிவான நியாயத்தீர்ப்பு என்பதை பேய்கள் அறிந்திருக்கின்றன. [4, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 4/1 பக். 8 பார்க்கவும்.]
34. இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் ஓர் எச்சரிக்கையை ஒலித்தான். [12, si பக். 225 பா. 9]
35. லூக்கா சுவிசேஷத்தில் மட்டுமே காணப்படும் ஆறு அற்புதங்களில் ஒன்று. [2, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1990 1/1 பக். 28 பார்க்கவும்.]