ஆவிக்குரிய ஐசுவரியங்களை மற்றவர்களுடன்பகிர்ந்துகொள்ளுங்கள்
1 விசுவாசமுள்ள மோசேயைப் போன்று தற்கால யெகோவாவின் சாட்சிகள் இந்த உலகத்தின் பொருளாதார செல்வங்களை ஆவிக்குரிய ஐசுவரியங்களின் மதிப்போடு ஒப்பிட முடியாது என்பதை அறிந்திருக்கின்றனர். (எபி. 11:26) பணத்தைக் கொண்டு வீடுகளை, கார்களை மற்றும் வேறு உடைமைகளை வாங்கலாம். ஆனால் அதைக் கொண்டு ஜீவனையோ மனசமாதானத்தையோ அல்லது யெகோவா தேவனின் அங்கீகாரத்தையோ ஆசீர்வாதத்தையோ வாங்கமுடியாது.
2 கடவுளுடைய வார்த்தை மற்றும் நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் அடைவதே மெய்யான ஆவிக்குரிய ஐசுவரியமாகும். (கொலோ. 2:3) இந்தத் தனித்தன்மை வாய்ந்த ஐசுவரியங்கள் இப்பொழுது மெய்யான சந்தோஷத்தையும் அத்துடன் எதிர்காலத்திற்கான உறுதியான நம்பிக்கையையும் கொடுக்க முடியும். இப்படிப்பட்ட ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பதனால் நாம் எவ்வளவு மிகுதியான சிலாக்கியம் பெற்றிருக்கிறோம்!
மற்றவர்களை ஐசுவரியவான்களாக்குவது எப்படி
3 காவற்கோபுரம் பத்திரிகையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் மேலும் அநேகர் ஆவிக்குரிய ஐசுவரியவான்களாவதற்கு நாம் உதவக்கூடும். ஏனெனில் இது அவர்களை தெய்வீக ஞானத்தின் ‘புதைந்திருக்கும் பொக்கிஷத்திற்கு’ வழிநடத்தக்கூடும். (நீதி. 2:4) ஜூன் மாதத்தின்போது பொருத்தமான ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் காவற்கோபுரம் சந்தாவை நாம் அளிப்போம். காவற்கோபுரம் நமது வாழ்க்கையை எப்படி நிறைவான ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்பதை நாம் நினைவிற் கொண்டோமானால், நாம் தயங்க மாட்டோம். அதற்கு மாறாக நாம் நம்மால் இயன்ற அளவு அநேக ஆட்களுக்கு அதை அளிக்கும் வழிவகைகள் என்ன என்பதை நாடி தேடுவோம். (நீதி. 3:27) எங்கே தனிப்பட்ட பத்திரிகைகளும் புரோஷுர்களும் விநியோகிக்கப்பட்டன என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களைத் திரும்ப சந்திக்க வேண்டும். உங்கள் சொந்த பத்திரிகை மார்க்கத்தை கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு ஒழுங்காக பத்திரிகைகளை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவ்வாறு செய்யுங்கள்.
4 ஓர் ஆவிக்குரிய கருத்தில், சங்கீதம் 112-ல் தன்னுடைய விலைமதிப்புள்ள காரியங்களை விரிவாக விநியோகம் செய்தக் கடவுள் பயமுள்ள அந்த மனிதனைப் போன்று நாம் எவ்வாறு இருக்கக்கூடும்? (சங். 112:1, 3, 9) நாம் செம்மறியாட்டைப் போன்ற ஆட்களுக்காக தேட வேண்டும். அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு அவர்களுக்கு உதவவேண்டும். (மத். 5:3) அப்படியானால் வழக்கமான முறைகளின்படியும் மற்றும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்காக நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அனுகூலப்படுத்திக் கொள்வதை இது அவசியப்படுத்துகிறது.
5 சில பிராந்தியங்களில், மாலை நேர சாட்சிக்கொடுத்தல் அதிக பலன் மிகுந்ததாக இருந்திருக்கிறது. ஏனெனில் அந்தச் சமயத்தில் அநேக ஆட்கள் வீட்டிலிருக்கும் சாத்தியம் இருக்கிறது. வார மத்திபத்தில் சபை புத்தகப்படிப்புக்கு முன்பு அல்லது மற்றொரு மாலை நேரங்களில் வீட்டுக்கு வீடு ஊழியத்தை நீங்கள் செய்து பார்த்திருக்கிறீர்களா? இதைச் செய்வதற்கு ஏன் நீங்கள் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யக்கூடாது? அது உங்களுக்கு அதிக பலனுள்ளதாக நிரூபிக்கக்கூடும்.
6 உங்களுடைய வேலை செய்யுமிடத்தில் சாட்சி கொடுப்பதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்களை நீங்கள் காணக்கூடுமா? அவ்வழியே கடந்துபோகும் தன் உடன்வேலையாட்கள் பார்க்கும்படி ஒரு சகோதரி தன்னுடைய மேசையின் மீது பல்வேறு பத்திரிகைகளை வைத்தாள். பகல்வேளை முடியும் முன்பு எல்லாப் பத்திரிகைகளும் விநியோகிக்கப்பட்டன. அவளுடைய உடன் வேலையாட்களில் அநேகர் உண்மையான அக்கறை காண்பித்தார்கள். அதனால் அவளால் 18 சந்தாக்கள் பெறமுடிந்தது.
7 யெகோவாவினுடைய அமைப்பின் மூலமாகவும் நம்முடைய பைபிள் படிப்பின் மூலமாகவும் நாம் அடைந்திருக்கக்கூடிய அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலாகிய ஆவிக்குரிய ஐசுவரியங்களுடன் வெள்ளி, பொன் ஆகிய மற்றெந்த பொருள் சம்பந்தமான பொக்கிஷங்களும் ஒப்பிட முடியாது. மெய்யான சந்தோஷமும், இனிதான வழிகளும், சமாதானமும் “நீடித்த நாட்களும்”—நித்திய ஜீவனும்கூட—இவையனைத்தும் ஆவிக்குரிய ஐசுவரியத்தைத் தேடக்கூடிய ஆட்களுக்குக் கூடிய காரியமாகும். (நீதி. 3:13-18) நமது ஆவிக்குரிய ஐசுவரியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுவதன் மூலம் நாம் பெற்றிருக்கும் காரியங்களுக்கு நமது போற்றுதலைக் காண்பிக்கிறோம். மேலும் யெகோவாவின் தொடர்ந்த ஆசீர்வாதத்தையும் அடைகிறோம்.—நீதி. 19:17.