சத்தியத்துக்குச் சாட்சி பகருங்கள்
1 சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவே நான் இந்த உலகத்துக்கு வந்தேன் என்று இயேசு தெளிவாக கூறினார். அவர் சொன்னதாவது: “சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க நான் பிறந்தேன்; இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.”—யோ. 18:37.
2 அவருடைய வைராக்கியமுள்ள பிரசங்க வேலையின் மூலமாக, இயேசு யெகோவாவின் நாமத்தை கனப்படுத்தினார். ஜனங்களுடைய வருந்தத்தக்க ஆவிக்குரிய நிலைமையை உணர்ந்தவராக, அவரும்கூட ஜனங்கள் மீது மெய்யான அன்பைக் காண்பித்தார். மத்தேயு அவருடைய செயல்களைக் குறித்து எழுதினான். “பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து . . . திரளான ஜனங்களைக் கண்டபொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள்மேல் மனதுருகி”னார். (மத். 9:35, 36) இயேசுவைப் போன்று யெகோவாவின் பேரிலுள்ள நமது பக்தியும் அத்துடன் மற்றவர்கள் மீதுள்ள நமது அன்பும் பிரசங்கிப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும்.
நமது மிகமுக்கியமான நியமிப்பு
3 மக்கள் பேரிலும் யெகோவாவின் பேரிலுமுள்ள மெய்யான அன்பு யெகோவாவைப் பற்றியும் அவருடைய அதிசயமான கிரியைகள் பற்றியுமான சத்தியத்தை மக்களுக்குக் கற்பிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அனுகூலப்படுத்திக் கொள்வதற்கு நம்மைத் தூண்டுகிறது. (சங். 96:2, 3; 145:10-13) என்றபோதிலும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள், வாழ்க்கையின் கவலைகள் மற்றும் கவனத்தைச் சிதறச்செய்யும் மிகத் திரளான காரியங்களும் நம்மை நமது சாட்சிக் கொடுக்கும் வேலையிலிருந்து வெகு எளிதாக திசைத் திருப்பிவிடக்கூடும். ஆகையால், கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் குறித்த அந்தச் சத்தியங்களை சாட்சி பகருவதற்கான அவசரத் தன்மையின் பேரில் நமது கவனத்தை ஒருமுகப்படுத்துவது அவசியம். நாம் செய்யும்படி நியமிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான இந்த ஜீவனைக் காக்கும் வேலையிலிருந்து பக்கப்பாதையில் சென்று விடுவதற்கு நாம் நம்மை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. (மத். 24:14; 28:19, 20) யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்வதே நமக்கு ஒரு பாதுகாப்பு, மேலும் சத்தியத்தின் செய்தியை கேள்விப்பட வேண்டிய தேவையில் இருக்கும் ஆட்களுக்கு அது நிரந்தர நன்மைகளைக் கொண்டுவரக்கூடும்.—1 கொரி. 15:58.
4 நீங்கள் ஒழுங்கான பயனியராகவோ துணைப் பயனியராகவோ சேவை செய்யக்கூடுமா? இந்த முறையில் நீங்கள் உங்களுடைய சேவையை விரிவாக்கக்கூடுமா என்பதைக் காண்பதற்கு ஏன் நீங்கள் உங்கள் சூழ்நிலைமையை பரிசீலித்துப் பார்க்கக்கூடாது. உலகப் பிரகாரமான தொழிலிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால், பிரசங்க வேலையில் உங்கள் நேரத்தை ஏன் நீங்கள் இன்னும் அதிக முழுமையாக பயன்படுத்தக்கூடாது. இன்னமும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அநேக இளைஞர் துணைப் பயனியர் ஊழியத்தைத் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கின்றனர். இவர்கள் ஆவிக்குரிய பிரகாரமான மற்றும் சரீரப்பிரகாரமான இரண்டு வகையிலும் அது புத்துயிரூட்டுவதாக இருந்து மகிழ்ச்சியுள்ள இருதயத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் கண்டிருக்கின்றனர்.
5 சத்தியத்துக்குத் திறம்பட்ட விதத்தில் சாட்சி பகருவதென்பது நமது நேரத்தைக் கவனமாக திட்டமிடுவதைத் தேவைப்படுத்துகிறது. (எபே. 5:15, 16) துணைப் பயனியர் சேவையானது ஒரு மாதத்துக்கு தினமும் சராசரியாக இரண்டு மணிநேரங்களை மட்டுமே தேவைப்படுத்துகிறது. ஒரு சிலர் காலையில் ஒரு மணி நேரம் சீக்கிரமாக எழுந்திருக்க தெரிந்து கொள்ளுகின்றனர். இதன் மூலம் அவர்கள் பள்ளிக்கு அல்லது வேலைக்குப் போகும் முன்பு ஊழியத்துக்குப்போக முடியும். அநேக சபைகள் மாலைநேர ஊழித்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதன் மூலம் துணைப் பயனியர்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். அதோடு துணைப் பயனியர் சேவை செய்வதற்காக தங்கள் நேரத்தை நன்கு திட்டமிட்டு சிறப்பாக செய்திருக்கும் மற்றவர்களோடு பேசுவதன் மூலம் நீங்கள் பயனுள்ள யோசனைகளைப் பெறக்கூடும், மேலும் நீங்கள் உற்சாகமடையக்கூடும்.
6 யெகோவா தேவன் எப்பொழுமே தம்முடைய ஊழியக்காரருக்கு நற்குணத்தைக் காண்பித்திருக்கிறார். பற்று மாறாத விசுவாசத்துடன் அவரை சேவித்திருக்கும் ஆட்கள் ஆசீர்வாதங்களை மிகத் திரளாய்ப் பெற்றிருக்கின்றனர். அவரை நேசிக்கக்கூடிய ஆட்கள் மீது யெகோவாவின் நற்குணம் இன்னமும் காண்பிக்கப்படுகிறது. நாம் சத்தியத்துக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருக்கையில் நமது சூழ்நிலை அனுமதிக்கக்கூடிய எதுவாக இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ள அவர் பிரியமுள்ளவராயிருக்கிறார்.—எபி. 6:10.