சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜுன் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 67 (38)
5 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். வார நாட்கள் மற்றும் இந்த வாரக் கடைசி தொகுதியாகச் செய்யும் ஊழிய ஏற்பாடுகளை விமர்சியுங்கள்.
25 நிமி: “ஆவிக்குரிய ஐசுவரியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஆவிக்குரிய கொடுத்தலில் தாராள மனப்பான்மையை அனலாக உற்சாகப்படுத்துங்கள். நேரம் அனுமதிப்பதைப் பொருத்து, காவற்கோபரம் மற்றும் விழித்தெழு! சந்தாக்களை அளிப்பதன் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களை கூறும்படி செய்யவும்.
15 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிக்கவும்.
பாட்டு 19 (29), முடிவு ஜெபம்.
ஜூன் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 28 (5)
8 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும் கணக்கு அறிக்கையும். நன்கொடை பெற்றுக்கொண்டதை சங்கம் தெரிவித்திருக்குமானால் அதைச் சேர்த்துக்கொள்ளவும். ராஜ்ய அக்கறைகளுக்கு தங்களுடை பணச்சம்பந்தமான ஆதரவுக்காக சபையாருக்கு பாராட்டுதல் தெரிவிக்கவும்.
22 நிமி: “உங்களுடைய வழக்கம் என்ன?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கூட்டங்களுக்கான மதித்துணர்வைக் காட்டவும், கூட்டங்களை தவறவிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்துங்கள். கூட்டங்களுக்கு ஆஜராவோரின் சம்பந்தமாக தங்கள் சபை எப்படியிருக்கிறது என்ற குறிப்பை இந்தப் பகுதியைக் கையாளும் சகோதரர் சேர்த்துக் கொள்ளலாம்.
15 நிமி: “மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுதல்.” மார்ச் 1, 1990 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 5-9-ல் உள்ள கட்டுரையின் பேரில் சார்ந்த மூப்பரின் பேச்சு. (இந்திய மொழிகளில்: “ஒரு கணவனாக அன்பும் நன்மதிப்பும் காண்பித்தல்.” பிப்ரவரி 1, 1990 காவற்கோபுரம்.) பக்கம் 4-ல் உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் கடுமையான மனச்சோர்வுகளுக்குரிய அடிப்படை காரணங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பேச்சை அறிமுகப்படுத்துங்கள். இந்தத் தகவலை பரிவோடும் புரிந்துகொள்ளுதலோடும் கையாள வேண்டும். இந்தத் தகவலிலிருந்து நன்மையடையவும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 65 (36), முடிவு ஜெபம்.
ஜூன் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133 (68)
5 நிமி: சபை அறிவிப்புகள். இந்த மாதப் பத்திரிகைகளிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பேச்சுக் குறிப்புகளை சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள். வாரக் கடைசியில் வெளி ஊழியத்திற்கான சபை ஏற்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள்.
22 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பைபிள் படிப்புகளின் மூலம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பைபிள் படிப்பு நடத்தக்கூடிய பிரஸ்தாபிகளைப் பாராட்டுங்கள். சூழ்நிலைமையை அபிவிருத்திச் செய்வதற்கு தாங்கள் எதைச் செய்யக்கூடும் என்பதைப் பற்றி யோசனைச் செய்யாதவர்களை தயவாக உற்சாகப்படுத்துங்கள். பாராக்கள் 4, 5-ல் உள்ள ஆலோசனைகளை சருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
18 நிமி: “அதிகமாக பைபிளைப் பயன்படுத்துதல்.” சபையாருடன் கலந்தாலோசிப்பு.
பாட்டு 127 (64), முடிவு ஜெபம்.
ஜூலை 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 29 (11)
8 நிமி: சபை அறிவிப்புகள்.
22 நிமி: “சத்தியத்துக்குச் சாட்சி பகருங்கள்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. துணைப் பயனியர் சேவையில் பங்குபெற நன்கு திட்டமிடக்கூடியவர்களாயிருந்த பிரஸ்தாபிகளைப் பேட்டிக் காணவும்.
15 நிமி: “கடவுளுடைய வார்த்தை—மனிதனுடையது அல்ல.” இந்தப் புத்தகத்தை அனைவரும் முழுமையாக அறிந்துகொள்ளும்படி ஊக்குவிக்கும் உற்சாகமான பேச்சு. இந்தப் பிரசுரத்தை வாசித்து அதைப் பயன்படுத்தியிருப்பவர்களிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு போற்றுதலை வெளிப்படுத்தும் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பாட்டு 30 (117), முடிவு ஜெபம்.