கேள்விப் பெட்டி
● வட்டார ஊழியர் சந்திக்கும் வாரத்தின்போது, சபை புத்தகப் படிப்பும் அடங்கிய அந்த விசேஷ கூட்டத்தில் என்ன திட்டத்தைப் பின்பற்றவேண்டும்?
வட்டார ஊழியருடைய சந்திப்பின்போது, முழு சபையும் ஒரு விசேஷ கூட்டத்திற்காக ராஜ்ய மன்றத்தில் கூடிவருவதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. இது சபைப் புத்தகப் படிப்பு உட்பட, “நீங்கள் கற்றுக்கொண்டவைகளில் தொடர்ந்து நிலைத்திருங்கள்” என்ற தலைப்பில் வேதப்பூர்வ மற்றும் அமைப்பு சார்ந்த தகவல்களின் கலந்தாலோசிப்பும், வட்டார கண்காணியின் ஒரு சேவைப் பேச்சும் அடங்கியதாக இருக்கும். இந்தக் கூட்டம் பெரும்பாலும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம் பாடல் மற்றும் ஜெபத்துடன் ஆரம்பிக்கிறது. பின்பு ஒரு மூப்பர் 45 நிமிட சபை புத்தகப் படிப்பை நடத்துகிறார். அந்த வாரத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தையும் நடத்தி முடிக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும். வழக்கமான புத்தகப் படிப்பு வாரத்தில் செய்யப்படுவதைப் போன்று எல்லாப் பாராக்களும் வாசிக்கப்பட வேண்டும். சபை புத்தகப் படிப்பை பின்தொடர்ந்து மற்றொரு ராஜ்ய பாடல் பாடப்படுகிறது. பின்பு வட்டார கண்காணி “நீங்கள் கற்றுக்கொண்டவைகளில் தொடர்ந்து நிலைத்திருங்கள்” என்ற பகுதியை நடத்துவதற்கு 30 நிமிடங்களைப் பயன்படுத்துகிறார். அதற்கு பின்பு, முக்கியமாய் அவர் சந்திக்கும் அந்தச் சபையின் தேவைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட 30 நிமிட சேவைப் பேச்சு ஒன்றைக் கொடுக்கிறார். அந்தச் சேவைப் பேச்சில் அவர் பொருத்தமான பாராட்டு குறிப்புகளையும் அந்தச் சபையை கட்டியெழுப்பக்கூடிய மற்றும் ராஜ்ய சேவையில் தொடர்ந்து உறுதியோடு நிலைத்திருக்கும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்தக்கூடிய அறிவுரைகளையும் கொடுக்கிறார்.
இந்தக் கூட்டம் ஒரு பாடல் மற்றும் ஜெபத்துடன் முடிவடைகிறது. பயன்படுத்தப்படும் பாட்டுகள் அனைத்தும் வட்டார கண்காணியால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த முழு நிகழ்ச்சி நிரலும் பாட்டு, ஜெபம் உட்பட, இரண்டு மணி நேரத்தைத் தாண்டக்கூடாது.
1977-ல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் திட்டம், யெகோவாவினுடைய அமைப்பின் அந்தச் சிறந்த ஏற்பாட்டிற்கு வருகைத்தந்து அதில் பங்குபெறக்கூடிய முழு சபையாரும் தனிப்பட்ட பிரஸ்தாபிகளும் மகிழ்ச்சியும் நன்மையும் அடையக்கூடிய ஒரு விசேஷித்த நிகழ்ச்சியாக வட்டார ஊழியரின் சந்திப்பை ஆக்குவதில் பெருமளவுக்கு உதவியிருக்கிறது.