சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
அக்டோபர் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 154 (30)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். நீங்கள் வெளி ஊழியத்துக்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா? ஊழியத்துக்கு எடுத்துச்செல்லும் பையில் கட்டாயம் இருக்கவேண்டியவற்றை எடுத்துரைக்கவும்—பைபிள், வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்களை எடுத்துரைத்தல் புத்தகம், எல்லா ஜாதிகளுக்கும் நற்செய்தி என்ற சிறு புத்தகம், துண்டுப்பிரதிகள், பென்சில், இந்த மாத அளிப்பு, பத்திரிகைகள், வீட்டுக்கு-வீடு பதிவுச் சீட்டு ஆகியவை. மனதில் ஆயத்தமாக இருப்பது பிரசுரங்களில் எடுத்துக்காட்ட விரும்பும் குறிப்புகளை விமர்சனம் செய்வதைக் குறிக்கிறது. மேலுமாக, பரிசுத்த ஆவிக்காகவும் செம்மறியாட்டைப் போன்றவர்களைக் கண்டுபிடிக்க உதவிக்காகவும் ஜெபிக்க வேண்டும்.—பிலி. 4:6, 7.
20 நிமி: “சகலத்தையும் சிருஷ்டித்தவரை கனம்பண்ணுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 3, 4 சிந்திக்கையில் திறம்பட்ட பிரஸ்தாபி சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளையும் அளிப்பையும் நடித்து காட்ட ஏற்பாடு செய்யவும். மறுபடியும் சந்திப்பதற்கு திட்டமான ஏற்பாடுகளைச் செய்வதைக் காட்டுங்கள்.
15 நிமி: மூப்பர் முன்மாதிரியாயுள்ள அநேக இளைஞர்களுடன் கலந்துபேசுகிறார். இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம், அதிகாரம் 17, “நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடவேண்டுமா?” என்ற அதிகாரத்திலுள்ள முக்கிய குறிப்புகளை கலந்தாலோசிக்கவும். அவர்கள் கடவுளுடைய அமைப்புடன் ஓர் எதிர்காலத்தைக் கட்டுவதற்கும், ராஜ்ய அக்கறைகளை நாடவும் தங்களுக்கு உதவும் நடைமுறையான, உபயோகமுள்ள திறமைகளை பெற்றுக்கொள்ள உதவும் பாடங்களைத் தெரிந்துகொள்ள பெற்றோர் இளைஞருக்கு உதவுவதன் அவசியத்தை அறிவுறுத்தவும்.
பாட்டு 225 (117), முடிவு ஜெபம்.
அக்டோபர் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 71 (92)
5 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறித்து நினைவுபடுத்தவும், சாயங்கால சாட்சி வேலைக்கு ஆதரவு கொடுக்க உற்சாகப்படுத்தவும்.
15 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பத்திரிகைகளைக் கொண்டு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 8-ஐ சிந்திக்கையில், உண்மையில் அக்கறை காட்டும் ஒருவருடன் பத்திரிகை மார்க்கம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படலாம் என்பதை நடித்துக் காட்டவும். பத்திரிகையில் உள்ளூர் பிராந்தியத்தில் அக்கறையுள்ளதாக இருக்கும் கட்டுரையை முக்கியப்படுத்திக் காட்டவும்.
15 நிமி: “பிள்ளைகள் கூட்டங்களிலிருந்து மேலும் அதிக நன்மையடைய உதவுங்கள்.” கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பிள்ளைகளைக் கூட்டங்களுக்கு அழைத்து வருவதன், அவர்களுடன் படிப்பதன் மற்றும் வெளி ஊழியத்தில் அவர்களை அழைத்துச் செல்வதன் நன்மையை எடுத்துக்காட்டவும்.
10 நிமி: “நாம் முதிர்வயதினரை மதித்துணருகிறோம்!” பிப்ரவரி 1, 1986, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 28-9-ன் பேரில் மூப்பரின் பேச்சு. சபைக்குப் பொருத்தவும். அவர்களுக்கு உதவியாக இருக்க, சற்று நம்முடைய வேகத்தைக் குறைத்துக்கொண்டு, வெளி ஊழியத்தில் இப்படிப்பட்டவர்களுடன் வேலை செய்வது பற்றி குறிப்பாக சொல்லலாம். கடைக்குச் செல்லுதல், மருத்துவரிடம் அழைத்து செல்லுதல் போன்ற உதவி கொடுத்து, அவர்களுடைய ஞானம், அனுபவம் ஆகியவற்றிலிருந்து பயனடையலாம்.—யோபு 15:10; நீதி. 16:31; 1 தீமோ. 5:1, 2. (இந்திய மொழிகளில்: டிசம்பர் 1988 நம் ராஜ்ய ஊழியம், “முதிர்வயதினருக்கும் பலவீனருக்கும் உதவுங்கள்.”)
பாட்டு 116 (108), முடிவு ஜெபம்.
அக்டோபர் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 160 (88)
8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிவிப்பு மற்றும் செலுத்தப்பட்ட நன்கொடைகள் சங்கம் பெற்றுக்கொண்டதைப் பற்றிய அறிவிப்பு. உலகளாவிய வேலைக்காக உள்ளூர் சபை கொடுக்கும் ஆதரவிற்காக சகோதரர்களைப் பாராட்டுங்கள்.—நீதி. 3:9.
20 நிமி: “வேதப்படிப்புகளைத் துவங்குவதற்கு விழிப்புள்ளவர்களாயிருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. சபை எத்தனை படிப்புகளை நடத்துகிறது என்பதை தெரிவிக்கவும். பாரா 5-ன் பேரில் முதல் சந்திப்பிலேயே படிப்பை எவ்வாறு துவங்கலாம் என்று காண்பிக்கவும். பரிணாமத்தில் சிறிது அக்கறை காட்டும் ஆனால் பொருத்தமான துண்டுப்பிரதியை ஏற்றுக்கொள்ளும் வீட்டுக்காரருடன் நடிப்பைத் துவங்கவும். துண்டுப்பிரதியிலிருந்து பிரஸ்தாபி இரண்டொரு பாராக்களை சிந்தித்து, திரும்பவும் வருவதற்கு திட்டமான ஏற்பாடு செய்கிறார். அடுத்ததாக, நியாயங்கள் புத்தகம் பக்கம் 12-ல் “வீட்டு வேதப்படிப்பு” என்ற தலைப்பின் கீழ் காணப்படும் அறிமுகங்களில் ஒன்றை உபயோகித்து, நேரடியாக அணுகும் முறையை நடித்துக் காட்டவும். சாயங்கால வேளையில் கணவன்மாரும் வீட்டில் இருப்பதனால், சாயங்கால சாட்சி வேலையின்போது முழு குடும்பத்தோடும் படிப்பு துவங்குவதற்கு எவ்வாறு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதைக் குறிப்பிடவும்.
17 நிமி: “நீங்கள் கற்பிக்கையில், இருதயத்தை எட்டுங்கள்.” ஆகஸ்ட் 1, 1984 ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 13-17-லுள்ள முக்கிய நான்கு குறிப்புகளின் பேரில் பேச்சு. முன்னேறும் வேதப்படிப்புகளை நடத்துவதன் அவசியத்தை சபையார் மதித்துணர உதவி செய்யவும். பலன்தராத வேதப்படிப்புகளை எப்பொழுது நிறுத்துவது என்பதையும் எடுத்துச் சொல்லவும். (இந்திய மொழிகளில்: “இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கும் ஒரு ஜனம்,” பிப்ரவரி 1989 காவற்கோபுரம்.)
பாட்டு 121 (95), முடிவு ஜெபம்.
அக்டோபர் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 69 (75)
10 நிமி: சபை அறிவிப்புகள். சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தை உற்சாகப்படுத்தவும். இரண்டு சுருக்கமான நடிப்புகள். ஒன்று அக்கறை காட்டப்படும் இடத்தில், மற்றொன்று வீட்டுக்காரர் அக்கறை காட்டுவதில்லை ஆனால் துண்டுப்பிரதியை வாசிக்க மனமுள்ளவராயிருக்கையில். அக்கறை காட்டப்படுகையில், உலகளாவிய பைபிள் கல்வி வேலையைப் பற்றி காவற்கோபுரம் பக்கம் 2-ல் மற்றும் விழித்தெழு! பக்கம் 4-ல் உள்ள கூற்றை பிரஸ்தாபி சுட்டிக் காட்டலாம். அல்லது பிரஸ்தாபி தான் செய்யும் வேலையானது முன்வந்து அளிக்கப்படும் காணிக்கைகளின் மூலம் ஆதரிக்கப்படும் உலகளாவிய பைபிள் கல்வி வேலையின் ஒரு பாகம் என்பதை விளக்கலாம். ஓர் இலவச வீட்டு வேதப்படிப்புக்கு சம்பாஷணை வழியைத் திறந்து வைக்கக்கூடும்.
20 நிமி: “நம்முடைய பயனியர்களை மதித்துணருதல்.” ஊழியக்கண்காணி இரண்டு அல்லது மூன்று பயனியர்களோடு விஷயங்களை கலந்தாலோசிக்கிறார். பயனியர்கள் மற்றவர்களுக்கு எவ்வாறு உற்சாகமளித்திருக்கிறார்கள், சபையில் தங்களுக்கு எது குறிப்பாக உற்சாகமளித்திருக்கிறது என்பதன் பேரில் குறிப்பு சொல்லட்டும். பயனியர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக சபையாரைப் பாராட்டவும்.
15 நிமி: சபையின் தேவைகள். அல்லது ஜனவரி 1, 1983 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 30-1, “வாசகரிடமிருந்து கேள்விகள்,” “சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினரை கொண்டுள்ள சபை அங்கத்தினர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?” என்பதை நடத்தும் கண்காணி கலந்தாலோசிக்கிறார். (இந்திய மொழிகளில்: “அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதன் சவால்.” ஜனவரி 1989 காவற்கோபுரம்.)
பாட்டு 62 (34), முடிவு ஜெபம்.