சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜனவரி 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 80 (62)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். வார இறுதி நாட்களில் உபயோகிப்பதற்காக பத்திரிகை கட்டுரைகளிலிருந்து திட்டவட்டமான குறிப்புகளை கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—இளைஞர்களுக்கு.” கேள்வி–பதில் சிந்திப்பு. பாரா 5-ஐ சிந்திக்கையில், பிரஸ்தாபி பருவ வயதினருக்கு அளிப்பு செய்வதை நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை மூப்பரும், இரண்டு அல்லது மூன்று தகுதிவாய்ந்த பிரஸ்தாபிகளும் கலந்தாலோசிக்கின்றனர். புத்தகத்தின் பத்து பகுதிகளை சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை சிந்தியுங்கள். பக்கம் 27-ல் உள்ள படத்தைப் போன்ற வல்லமை வாய்ந்த படங்களை குறிப்பிடுங்கள். புத்தகத்திலுள்ள காலத்துக்கேற்ற புத்திமதியை இளைஞர்கள், பெற்றோர்கள் இன்னும் மற்றவர்கள் சிந்திக்குமாறு உற்சாகப்படுத்துங்கள். வெளி ஊழியத்தில் புத்தகத்தை உபயோகிக்க எல்லாரும் தயாரிக்க வேண்டும். குடும்ப கலந்தாலோசிப்பில் அதை உபயோகிப்பதற்கான வழிகளை குறிப்பிடுங்கள்.
பாட்டு 40 (31), முடிவு ஜெபம்.
ஜனவரி 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 76 (61)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையும், நன்கொடைகள் பெற்றுக்கொண்டதையும் பற்றிய அறிவிப்பையும் வாசியுங்கள். “அநீதியான செல்வங்களை” சரியான முறையில் உபயோகிப்பதற்காக சகோதரர்களை பாராட்டுங்கள். (லூக். 16:9; உட்பார்வை–2, பக். 806)
20 நிமி: “சஞ்சலத்தை தடுத்து விலக்க இளைஞர்களுக்கு உதவுதல்.” கேள்வி–பதில் சிந்திப்பு. பாரா 8-ஐ சிந்திக்கையில், தகுதி வாய்ந்த பிரஸ்தாபி சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளையும், பிரசுரத்தை சுருக்கமாகவும் அளிக்கச் செய்யுங்கள்.
15 நிமி: பேச்சுத் தொடர்பு வழிகளை நீங்கள் திறந்து வைத்திருக்கிறீர்களா? குடும்ப வாழ்க்கை புத்தகத்தில் 11-ம் அதிகாரத்தில் உள்ள இரண்டு அல்லது மூன்று நியமங்களை மூப்பர் கலந்தாலோசிக்கிறார். ஒரு பிள்ளை செய்யும் பேச்சுத் தொடர்பை பெற்றோர்கள் எவ்வாறு உற்சாகப்படுத்தவோ அல்லது உற்சாகமிழக்கவோ செய்யலாம் என்பதைக் காண்பிக்க பாராக்கள் 5–8-ல் உள்ள விஷயங்களை அடிப்படையாக வைத்து சுருக்கமான சிறு நடிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 221 (73), முடிவு ஜெபம்.
ஜனவரி 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126 (25)
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. நேரம் அனுமதிக்குமேயானால் தேவராஜ்ய செய்திகளிலுள்ள அம்சங்களைச் சிந்தியுங்கள்.
15 நிமி: தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்–1991-ஐ நன்கு பயன்படுத்துங்கள். சிறு புத்தகத்திலுள்ள முன்னுரையை அடிப்படையாகக் கொண்ட பேச்சு. தினவசனத்திலுள்ள குறிப்புகளைக் கொண்டு இதன் மதிப்பை எடுத்துக் காட்டுங்கள். இன்றைய தினவசனத்தின் பேரில் குடும்ப கலந்தாலோசிப்பில் செய்த குறிப்புகளை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “அர்த்தமுள்ள குடும்ப பைபிள் படிப்புகளை நடத்துதல்.” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிக்குமேயானால், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர்கள் தங்கள் குடும்ப பைபிள் படிப்புகளை போதிக்கத்தக்கதாயும், அனுபவிக்கத்தக்கதாயும் ஆக்க என்ன செய்திருக்கின்றனர் என்பதை சொல்லுமாறு செய்யுங்கள்.
பாட்டு 93 (48), முடிவு ஜெபம்.
ஜனவரி 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 91 (61)
10 நிமி: சபை அறிவிப்புகள். விடுமுறை நாட்களில் சாட்சி கொடுப்பதை உற்சாகப்படுத்துங்கள். பத்திரிகை நாளில் உபயோகிப்பதற்காக கட்டுரைகளைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி: “யெகோவாவினால் கற்பிக்கப்படுதல்.” பள்ளி கண்காணி சபையாரோடு கலந்தாலோசிக்கிறார். முன்மாதிரியான மாணாக்கனை பேட்டி காணுங்கள். முன்னதாகவே தயாரிப்பதனாலும், பேச்சு ஆலோசனை குறிப்புகளில் வேலை செய்வதாலும் அவர் பெறும் நன்மைகளை சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: சபை தேவைகள் அல்லது நவம்பர் 15, 1990 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள “ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள்.” கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட பேச்சு. (இந்திய மொழிகளில்: ஜனவரி 1989 காவற்கோபுரம், “உங்கள் ஜெபங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவையாய் இருக்கின்றன?”)
பாட்டு 55 (18), முடிவு ஜெபம்.