“வா!” என்ற அழைப்பை தைரியமாக அளியுங்கள்
1 விரைவாகப் போய்க்கொண்டிருக்கும் உலகளாவிய சம்பவங்கள் இக்காலங்களை “கடைசி நாட்கள்” என்று அடையாளங் காட்டுகின்றன. (2 தீமோ. 3:1–5) குற்றச்செயல் அதிகரிப்பு, நிலையில்லா பொருளாதாரம் மற்றும் உயிரை அச்சுறுத்தும் நோய்கள் தங்கள் அழுத்தத்தைக் கூட்டியிருக்கின்றன. ஆனால் சந்தோஷமாக, இப்பேர்ப்பட்ட இன்னல்களை எதிர்ப்படுகையில் என்றென்றுமாக பாதிக்கக்கூடிய அழைப்பு ஜனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆவியும் மணவாட்டியும் தொடர்ந்து “வா!” என்று சொல்கின்றனர். மேலும், எங்குமுள்ள ஜனங்களுக்கு ஒரு திறந்த அழைப்பைக் கொடுத்து வந்து ஜீவத் தண்ணீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும்படி சொல்வதில் இப்பொழுது “ஒரு திரள் கூட்டம்” அவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கிறது.—வெளி. 7:9; 22:17.
2 இன்று, நீதிக்காக தாகமுள்ளவர்கள் இந்த அழைப்புக்கு பெரும் எண்ணிக்கையில் பிரதிபலிக்கின்றனர். சென்ற வருடம் உலகமுழுவதும் நடத்தப்பட்ட மாவட்ட மாநாடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆஜரானார்கள், ஏறக்குறைய நூறு இலட்சம் பேர் ஞாபகார்த்த நாளுக்கு வந்திருந்தனர். ராஜ்ய நற்செய்திக்கு செவி கொடுப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மற்றவர்கள் யெகோவாவின் ஏற்பாட்டுக்கு போற்றுதலை காண்பிக்கின்றனர். அப்படியென்றால் இந்த அழைப்பை பகிரங்கமாகவும் வீட்டுக்கு வீடாகவும் அளிப்பதில் நாம் நம் நேரத்தை ஞானமாக உபயோகிப்பது எவ்வளவு முக்கியமானது!—அப். 5:42; எபே. 5:15, 16.
தைரியமாக பங்கு கொள்ளுங்கள்
3 வைராக்கியமாக பிரசங்கித்ததற்காக பூர்வ கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். (அப். 16:19–21; 17:2–8) என்றபோதிலும், நற்செய்தியை அறிவிப்பதில் தங்களுடைய தைரியமான முயற்சிகளை அவர்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்தனர். நாமும் அதேப் போன்று நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு தைரியமாகவும் நம் முயற்சிகளில் உறுதியுடைவர்களாகவும் இருக்கவேண்டும்.
4 வேலை தடையுத்தரவின் கீழ் இருக்கும் நாடுகளிலும்கூட, வேலைகள், வீடுகள் மேலும் அவர்களுடைய சுயாதீனம் ஆகியவற்றை இழக்கக்கூடிய சாத்தியத்தோடு உட்பட கடுமையான துன்புறுத்தல் மத்தியிலும் சகோதரர்கள் முழு இருதயத்தோடு பிரசங்க வேலையில் பங்குகொள்கின்றனர். அவர்களுடைய சிறந்த முன்மாதிரி மற்றவர்களை “வா!” என்றழைப்பதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறது.—2 தெச. 3:9.
5 சத்தியத்தைக் கற்று 35 வருடங்களுக்கு மேல் ஆனபின்பு, ஒரு சகோதரி பயனியர் செய்வதற்கான இருதயப்பூர்வமான விருப்பத்தைக் காத்து வந்தாள். 70 வயதானபோது அவளுடைய தனிப்பட்ட சூழ்நிலைகள் மாற்றமடைந்தன. அவள் ஓர் ஒழுங்கான பயனியராக ஆனாள். அந்த வயதில் வெகு சிலரே ஒரு புதிய வாழ்க்கைப் பணியை மேற்கொள்வார்கள் என்றாலும், அவள் அவ்வாறு செய்தாள். அநேக வருடங்களாக முழுநேர ஊழியத்தை அனுபவித்தவளாய், அவள் இப்பொழுது சொல்கிறாள், “அது ஒவ்வொரு நாளும் மேம்பட்டதாகிறது.” ராஜ்ய சேவையில் சென்றெட்டுவதற்கும், அதிக முழுமையாக பங்கு கொள்வதற்கும், யெகோவா கொடுக்கும் அழைப்பை பயமின்றி ஏற்றுக்கொண்டதன் காரணமாக அவள் ஆவிக்குரிய புத்துணர்ச்சியை மற்றவர்களுக்குக் கொண்டுவந்திருக்கிறாள்.
6 முதல் நூற்றாண்டில் இருந்ததுபோலவே, ஜனங்கள் இன்றும் இந்த அழைப்புக்கு பிரதிபலிக்கின்றனர், தங்கள் சிந்தனையை மாற்றியமைத்து, தங்கள் மனங்களைத் திருத்தி, கடவுளை அவமதிக்கும் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்கின்றனர். ஒப்புக்கொடுத்த சர்வதேச சாட்சிகளின் சகோதரத்துவத்தின் பாகமாக அவர்கள் ஆகின்றனர், இன்னும் மற்ற நேர்மை இருதயமுள்ள ஜனங்களுக்கு “வா!” என்று சொல்வதில் ஆவியுடனும் மணவாட்டியுடனும் சேர்ந்து கொள்கின்றனர்.
7 ராஜ்ய வேலையில் பரந்த அதிகரிப்பும், பல்வேறு தேசங்களில் கிளைக்காரியாலய விரிவாக்கமும் யெகோவாவின் ஆசீர்வாதத்தின் அத்தாட்சியைக் கொடுக்கின்றன. ஆனால் இந்தப் பழைய ஒழுங்கு முறைக்கு காலம் தீர்ந்துகொண்டிருக்கிறது. மற்றவர்கள் விரைவில் பிரதிபலிப்பதற்கும், கேட்டவைகளின் பேரில் செயல்படுவதற்கும் “வா!” என்ற அழைப்பை அளிப்பதில் தைரியத்தையும் வைராக்கியத்தையும் வெளிக்காட்ட இதுவே பொருத்தமான நேரமாயிருக்கிறது.—அப். 20:26, 27; ரோமர் 12:11.