சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
மார்ச் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 92 (51)
10 நிமி: சபை அறிவிப்புகளும், நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். நேரம் அனுமதிக்குமேயானால், உள்ளூர் பிராந்தியத்தில் தற்போதைய பத்திரிகைகளை அளிப்பதற்கான வழிகளை குறிப்பிடுங்கள். இந்த வார இறுதியில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: ‘“வா!” என்ற அழைப்பை தைரியமாக அளியுங்கள்.’ கேள்வி–பதில் கலந்தாலோசிப்பும், நடிப்புகளும். வெளிப்படுத்துதல் 22:17 வருடாந்தர வாக்கியத்தின் பொருத்தத்தை சிறப்பித்து நம் ராஜ்ய ஊழியம் கட்டுரையில் உள்ள விஷயங்களை கலந்தாலோசியுங்கள். உள்ளூர் பிராந்தியத்தில் தற்போதைய பிரசுர அளிப்பை அளிக்க வழிகளை குறிப்பிட ஒரு சுருக்கமான நடிப்பை அளியுங்கள்.
10 நிமி: “யெகோவாவை பாடலில் துதித்தல்” கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட உற்சாகமான பேச்சு. கட்டுரையில் உள்ள குறிப்புகளை எடுத்துக் காட்டுவதற்கு இந்த மாலைக்கான நிகழ்ச்சியில் உள்ள பாடல்களை உதாரணங்களாக உபயோகியுங்கள்.
10 நிமி: சபை தேவைகள் அல்லது ஆங்கில காவற்கோபுரம், அக்டோபர் 15, 1990, பக்கங்கள் 26–9ல் “நீதியை ஏன் நாட வேண்டும்?” என்பதை அடிப்படையாகக் கொண்ட பேச்சு. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 1990 “மறைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடுவது போல் தேடிக்கொண்டிருங்கள்.”)
பாட்டு 20 (103), முடிவு ஜெபம்.
மார்ச் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 193 (22)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. சபை தேவைகளுக்காக அக்கறை எடுப்பதில் சபையின் தாராள மனப்பான்மைக்காக போற்றுதல் தெரிவிக்கும் சொற்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அனுப்பி வைத்த நன்கொடைகளை பெற்றுக்கொண்டதாக சங்கம் தெரிவித்திருக்கும் கடிதங்களை சகோதரர்களுக்குச் சொல்லுங்கள். அடுத்த வார ஊழியக் கூட்டத்துக்கு என்றும் வாழலாம் புத்தகத்தின் ஒரு பிரதியை கொண்டுவருமாறு அனைவருக்கும் ஞாபகப்படுத்துங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—தெரு ஊழியத்தின் மூலமாக.” கேள்விகளும் பதில்களும். இந்த வாரம் தெரு ஊழியத்தில் பிரஸ்தாபிகள் உபயோகிப்பதற்காக குறிப்புகளை எடுத்துக் காட்ட இடையிடையே இரண்டு அல்லது மூன்று சுருக்கமான நடிப்புகளை கொண்டிருங்கள்.
15 நிமி: துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு திட்டங்கள் போடுங்கள். ஏப்ரல் மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ அல்லது இரண்டு மாதங்களிலும் துணைப்பயனியர் ஊழியம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவியளிக்கும் தகவலோடுகூடிய உற்சாகமான பேச்சு. அறிவிப்புகளின் கீழ் உள்ள துணைப்பயனியர் ஊழியம் செய்வதைப் பற்றிய குறிப்பை குறிப்பிடுங்கள். விசேஷ வேலைக்கான காலப்பகுதியின் போது பயனியர் செய்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், உதவி செய்வதற்கும் சபையும், தனிப்பட்ட பிரஸ்தாபிகளும் என்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பதை விளக்குங்கள். கூட்டத்தைத் தொடர்ந்து துணைப்பயனியர் விண்ணப்ப நமூனாக்களை கேட்பவர்களுக்காக தயாராக வைத்திருங்கள். மார்ச் 30 ஞாபகார்த்த நாள் ஆசரிப்புக்கும், ஏப்ரல் 7 அன்று அட்டவணையிடப்பட்டிருக்கும் விசேஷ பொதுப் பேச்சுக்கும் ஜனங்களை அழைக்க விசேஷ முயற்சிகள் செய்யப்படும் என்பதைக் குறிப்பிடலாம்.
பாட்டு 130 (58), முடிவு ஜெபம்.
மார்ச் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 71 (92)
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. எல்லாப் பிரஸ்தாபிகளும் தங்கள் சபையின் சரியான பெயரையும் அதோடு எல்லா மூப்பர்களின் பெயர்களையும் அறிந்திராவிட்டாலும் சில மூப்பர்களின் பெயர்களையாவது அறிந்திருப்பதன் தேவையை குறிப்பிட்டுக் காட்டுங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் முழுமையாக பங்கெடுக்க உற்சாகப்படுத்துங்கள், தற்போதைய பத்திரிகைகளிலிருந்து பொருத்தமான பேச்சுக் குறிப்புகளுக்காக ஆலோசனைகளை ஒருவேளை அளிக்கலாம்.
15 நிமி:“யெகோவாவின் சாட்சிகளாக நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்.” தகுதிவாய்ந்த போதனையாளராக இருக்கும் ஒரு சகோதரர் அளிக்கப்பட்டிருக்கும் தகவலை கலந்தாலோசித்து, நம் ஊழியத்தை மேம்படுத்துவதற்காக குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்களை உபயோகிப்பதற்காக நடித்துக் காட்டுகிறார்.
20 நிமி: ஏப்ரல் மாதத்தில் ஊழியத்துக்காக தயாரியுங்கள். ஏப்ரல் மாதத்தின் போது நாம் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்போம். இந்த வார இறுதியில் பிரசுரத்தை அளிப்பதற்கான பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை கலந்தாலோசியுங்கள். அவற்றில் சில: கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு அளிக்கையில், அதிகாரங்கள் 7, 11 அல்லது 19-ம் அதிகாரங்களிலிருந்து என்ன குறிப்புகளை உபயோகிப்பீர்கள்? பக்கங்கள் 11, 33, 100, 128, 131, 156, 157, 161 அல்லது 162-ல் உள்ள படங்களோடு தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை நீங்கள் எவ்வாறு இணைப்பீர்கள்? அந்தப் புத்தகத்தில் நீங்கள் சிறப்பித்துக் காட்ட விரும்பும் ஒரு குறிப்பைக் காட்ட, பக்கத்தின் அடியில் உள்ள கேள்விகளை உபயோகிக்கலாம். புத்தகம் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 211 (105), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 148 (50)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். பொருத்தமான பத்திரிகை அளிப்புகளைக் குறிப்பிட்டு நடித்துக் காட்டவும். வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: ஆங்கில காவற்கோபுரம் டிசம்பர் 1, 1990, பக்கங்கள் 22–5-ல் “யெகோவா தம் வேலையை எவ்வாறு செழிப்பாக்குகிறார்” கட்டுரை அடிப்படையிலான பேச்சு. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1990 “யெகோவாவுக்கு நாம் எவ்விதம் திரும்பச் செலுத்தக்கூடும்?”)
20 நிமி: “வா!” என்று சொல்வதன் மூலம் உலகளாவிய சந்தோஷத்தில் பங்கு கொள்ளுங்கள். ஆங்கில காவற்கோபுரம், ஜனவரி 1, 1991 சிறப்புக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, பேட்டி(கள்), அனுபவங்(கள்). (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1991) காவற்கோபுரம் பிரதியிலிருந்து தகவலை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அளியுங்கள். அதோடு அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை பிரதிபலிக்கும் வைராக்கியமான சபை பிரஸ்தாபிகளிடமிருந்து அனுபவங்களும் குறிப்புகளும்.
பாட்டு 63 (32), முடிவு ஜெபம்.