நம் ராஜ்ய ஊழியம் ஒரு புதிய தோற்றத்தை பெறுகிறது
அக்டோபர் மாத இதழ் முதற்கொண்டு நம் ராஜ்ய ஊழியம் ஒரு புதிய தோற்றத்துடன் வெளி வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு அநேக மொழிகளில் இந்த மாதாந்தர பிரசுரத்தை உருவாக்குவதில் உட்பட்டிருக்கும் வேலை செயற்படு முறைகளை எளிதாக்கும். வாசகர்கள் குறிப்பிட்ட தகவலை சுலபமாக கண்டுபிடிக்க உதவும்.
இப்புதிய அமைப்பில், எல்லா தலைப்புகளும் வசனங்களும் கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட முடியும். எழுத்தமைப்பில் ஒரே மாதிரி எல்லா கட்டுரைகளிலும் பயன்படுத்தப்படுகிறது, ஆகையால் நம் ராஜ்ய ஊழியத்தின் பார்வையை எடுத்துக்காட்டுள்ளதாக்குகிறது.
வாசகருக்கென அநேக அபிவிருத்திகள் செய்யப்பட்டிருக்கின்றன. அச்சு எழுத்துக்கள் ஒரே சீரான அளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தெரிந்தெடுக்கப்பட்டுள்ள அச்சு எழுத்துக்கள் சிறிய அளவிலும்கூட மிகத் தெளிவாக வாசிக்கக்கூடிய விதத்தில் உள்ளன. வெளி ஊழிய அறிக்கை வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். மேலும் பிரதான கட்டுரைகள் பொதுவாக வெளிப்புற பக்கங்களில் தோன்றும். பெரும்பாலான கட்டுரைகள் அதே பக்கத்திலேயே முடிக்கப்படும். ஊழியக் கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல், சபை புத்தகப்படிப்பு அட்டவணை, ஊழிய அறிக்கை, அறிவிப்புகள், தேவராஜ்ய செய்திகள், வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள், சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள், கேள்விப் பெட்டி ஆகியவை உட்புற பக்கங்களில் காணப்படும்.
ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையிலும், சீஷராக்குவதிலும் இந்த மதிப்பு வாய்ந்த கருவி அதிக கவர்ச்சியானதாகவும், திறம்பட்ட உதவியாகவும் இருப்பதாக நீங்கள் காண்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.